Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
9 பேர் சுட்டுக் கொலை... !
#18
..
லங்கை பொலன்னறுவை அருகே நடந்த தாக்குதலில் கருணா அணியினர் என்று கருதப்படும் ஐந்து பேர் சுட்டுக்கொலைஇ இருவர் காயம்.


அம்பாறை பிரதேச செயலாளர் ஏ கே தவராஜா சுட்டுக்கொல்லப்பட்டார்.

இலங்கையில் பொலன்னறுவை மாவட்டம் சொறிவில கிராமத்தை அண்மித்த காட்டுப் பகுதியில் இன்று அதிகாலை இடம் பெற்ற சம்பவமொன்றில் கருணா அணியைச் சேரந்தவர்கள் எனக் கூறப்படும் ஐந்து பேர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். இதைத் தவிர மேலும் இரண்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

குறிப்பிட்ட இந்த சம்பவம் தொடர்பாக ஆரம்பத்தில் பாதுகாப்பு தரப்பினரால் வெளியிடப்பட்ட தகவல்களின்படிஇ இவர்களுடன் தங்கியிருந்தவர்களால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் செய்யபட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் அரலகங்வில பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின்படிஇ இவர்கள் தங்யிருந்த கூடாரங்களை நோக்கி குழுவொன்றினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் தப்பியவர்களின் தகவல்கள் மூலம் இதுதெரிய வந்துள்ளதாக பொலிஸ் நிலையப் பொறு;ப்பதிகாரி மஹிந்த வைத்தியதிலக்க தெரிவித்தார்.

தாக்குதலுக்கு இலக்கானவர்கள் கருணா அணியினைச் சேர்ந்தவர்களாக இருப்பதாலும் äதப்பியவர்களின் தகவல்களின் அடிப்படையிலும் விடுதலைப் புலிகள் இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால்இ அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடந்த இந்த சம்பவத்திற்கும் தமக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என விடுதலைப் புலிகள் இந்த சமப்வம் தொடர்பாக ஊடகங்களுக்கு தெரிவித்தார்கள்.

கொல்லப்பட்ட ஐந்து பேரில் குலவன் எனப்படும் தேவதாஸ் தேவேந்திரன் மற்றும் விஜயன் எனப்படும் ஜேமஸ் கந்தசாமி ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றார்கள்.


காட்டுப்பகுதியில்..

இச்சமப்வம் தொடர்பாக அந்த பிரதேச வாசிகளின் தகவலின்படிஇ ஒருவார காலமாகவே இந்த இடத்தில் கருணா அணியினரின் நடமாட்டம் காணப்பட்டனஇ ஆனால் இன்று அதிகாலை பாரிய மோதல்கள் இடம் பெற்றதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்று தெரிய வருகிறது. சம்பவம் நடந்த இடத்தில் இரண்டு சடலங்கள் கூடாரங்களுக்குள்ளும் ஏனைய மூன்று சடலங்களும் கூடாரங்களுக்கு வெளியே ஆங்காங்கே காணப்பட்டுள்ளன.

இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் மட்டக்களப்பு மாவட்ட கண்காணிப்பாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு இன்று மாலை திரும்பியள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி இலங்கை ராணுவத்தின் சார்பில் பேச வல்ல அதிகாரி பிரிகேடியர் தயா ரத்னாயகே அவர்களைக் கேட்டபோது விடுதலைப்புலிகள் அமைப்பினர் இந்தத் கொலைகளை நடத்தியிருக்க வேண்டும்இ அந்தப் பகுதி மக்களிடம் பேசும் போதுஇ அங்கு பெரிய துப்பாக்கிச்சண்டை நடந்த சப்தம் ஏதும் அவர்கள் கேட்டதாகத் தெரியவில்லைஇ மேலும் அங்கு அணியினர் நடமாட்டம் பெரிதாக இருந்ததாகவும் தெரியவில்லை. அங்கு சுமார் பத்துப்பேர் மட்டுமே இருந்திருக்கிறார்கள். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இந்தக்கொலைகள் அங்கு இருந்தவர்களாலேயே நடத்தப்பட்டிருக்கலாம் என்றே நாங்கள் நம்புகிறோம்இ மேலும் கருணா அணியினருக்கு எங்கள் ஆதரவு இருப்பதாக விடுதலைப்புலிகள் தரப்பு கூறுவதை நான் முற்றாக மறுக்கிறேன் என்றார்.

இதற்கிடையில் அம்பாறை பிரதேச செயலாளர் ஏ கே தவராஜா இன்றிரவு அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.




from

BBC tamil
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by eelapirean - 04-15-2005, 07:13 AM
[No subject] - by sinnappu - 04-15-2005, 07:40 AM
[No subject] - by thamilvanan - 04-15-2005, 07:49 AM
[No subject] - by கறுணா - 04-15-2005, 02:08 PM
[No subject] - by tamilini - 04-15-2005, 02:09 PM
[No subject] - by Mathan - 04-15-2005, 03:00 PM
[No subject] - by வியாசன் - 04-15-2005, 04:38 PM
[No subject] - by eelapirean - 04-15-2005, 05:23 PM
[No subject] - by eelapirean - 04-15-2005, 05:25 PM
[No subject] - by eelapirean - 04-15-2005, 06:08 PM
[No subject] - by tamilini - 04-15-2005, 06:41 PM
[No subject] - by வியாசன் - 04-15-2005, 07:40 PM
[No subject] - by sinnappu - 04-15-2005, 08:09 PM
[No subject] - by sinnappu - 04-15-2005, 08:12 PM
[No subject] - by tamilini - 04-15-2005, 08:16 PM
[No subject] - by Mathan - 04-15-2005, 08:26 PM
[No subject] - by KULAKADDAN - 04-15-2005, 08:48 PM
[No subject] - by sinnappu - 04-15-2005, 11:14 PM
[No subject] - by tamilini - 04-15-2005, 11:18 PM
[No subject] - by sinnappu - 04-15-2005, 11:41 PM
[No subject] - by eelapirean - 04-16-2005, 06:13 AM
[No subject] - by tamilini - 04-16-2005, 03:30 PM
[No subject] - by anpagam - 04-18-2005, 02:54 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)