04-15-2005, 02:09 PM
கருணா குழு - ஈ.என்.டி.எல்.ப் விஜயன் குழு மோதலிலேயே 9 பேர் படுகொலை!
கொழும்பு நிருபர் வெள்ளிக்கிழமை 15 ஏப்பிரல் 200514:03 ஈழம் ஸ
பொலன்னறுவை மாவட்டம் சொறிவில கிராமத்திலுள்ள கருணா குழுவினரின் முகாம் மீது நேற்று நள்ளிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்; சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட 9 பேரில் 5 பேரின் சடலங்களை அரலகங்வில பொலிசார் இன்று காலை கண்டெடுத்தனர்.
மேலும் இருவர் காயங்களுடன் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான முகாம் கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவே அவ் இடத்தில் அமைக்கப்பட்டதாக அப்பிரதேசவாசிகளின் கூறுகின்றனர்.
ஏற்கனவே வெலிக்கந்தை பிரதேசத்திலுள்ள தீவுச்;சேனையில் கருணா குழுவினரின் முகாம் இருப்பதை கொழும்பு ஆங்கில வாரப் பத்திரிகையொன்று வெளியிட்டிருந்தது. இலங்கை போர் நிறுத்த கண்கானிப்புக் குழுவும் இதை உறுதி செய்திருந்தது.
இதையடுத்து தான் தீவச்;சேனையிலிருந்த முகாமே தாக்குதல் நடத்தப்பட்ட சொறிவில கிராமத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொல்லப்பட்டவர்களின் யார் என்பது குறித்து உத்தியோகபூர்வமாக அடையாளம் காணப்படாத போதிலும் அப்பிரதேச பொதுமக்கள் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
தேவதாசன் தெய்வேந்திரன் - சொறிவில
ஜேம்ஸ் கந்தசாமி - சொறிவில
துரையன் - வாழைச்;சேனை மற்றும் ரவி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதை அரலகங்கவில பொலிசாரும் உறுதிப்படுத்தியுள்ளனர். இவர்களுடன் தங்கியிருந்தவர்களே இத்துப்பாக்கிப் பிரயோகத்தை செய்து விட்டு தப்பிச்; சென்றிருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இந்தியாவிலிருந்து வந்துள்ள ஈ.என்.டி.எல்.எப். - விஜயன் குழுவினருக்கும் கருணா குழுவைச்; சேர்ந்த பிள்ளையான் குழுவினருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடே இச்சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என அப்பிரதேச மக்கள் கருதுகின்றனர்.
Puthinam

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>