04-15-2005, 01:17 PM
<img src='http://www.appaal-tamil.com/images/stories/new%20world/miacover_web.jpg' border='0' alt='user posted image'>
முதற் கண் மாயாவுக்கு என் வாழ்த்துக்கள்.
இவராவது தன்னை ஈழத் தமிழர் என்று சொல்லிக் கொள்கிறார்.
பலர் சொல்லிக் கொள்வது மட்டுமல்ல காட்டிக் கொள்ளவும் விரும்புவதில்லை.
சில சமயங்களில் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளால் என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது.
அதற்கு மேலும் பல விடயங்கள் இருக்கலாம்................
நான் அண்மையில் பிரன்சில் நடை பெற்ற
தமிழ் குறும்பட விழாவுக்கு வந்த குறும்படங்களைப் பார்த்த போது
அனைத்துப் படங்களும் பிரான்சை மையமாக வைத்தே பின்னப்பட்டிருந்தன.
இக் குறும்படங்களில் ஒரு முக்கிய விடயம் என் மனதைக் கவர்ந்தது.
அதாவது யாருமே வில்லன்களாகக் காட்டப் படாத தன்மை மற்றும் யதார்த்தத்தை ஒட்டிய கதைக் கருக்கள்.
தொழில் நுட்ப முன்னேற்றம் என்று சில திணிப்புகள் பிரச்சனையாக இருந்தன.
இதற்கான விவாத தளம் இதுவல்ல.
என் கண்ணில் பட்டதை உங்களோடு தேவை கருதி பகிர்ந்து கொண்டேன் என்றே நினைக்கிறேன்.
<span style='color:red'>அதில் வந்த ஒரு சில தமிழ் குறும்படங்கள் பிரஞ்சு மொழி பேச தமிழ் உப தலைப்புகளுடன் உருவாக்கப்பட்டிருந்தன.
என்னைப் பொறுத்த வரை இதைத்தான் புலம் பெயர் இளைய தலை முறையினர் செய்வார்கள் என்று சொல்வேன்.
இதை மாற்றுவது புலத்தில் முடியாத காரியம்.
இதற்கான முக்கிய பொறுப்பு தமிழ் ஊடகங்களையே சாரும்.
இவர்கள் விரும்பும் படைப்புகளே இடம் பெறுகின்றன.
இங்கு உள்ள செலவுகளுக்கு ஈடு செய்யக் கூடிய நிலையில் இந்த ஊடகங்கள் இல்லை என்பதும் உண்மை.
ஆனால் இங்கு வாழும் கலைஞர்களுக்கு அல்லது படைப்பாளிகளுக்காக இவர்கள் செய்ய வேண்டியது என்ன?????????????????????
இதைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது
மாயா போன்றோர் சாதித்து தடம் பதித்து பேசப்படுகிறார்கள்.
இதற்கு பின்னால் இவர்கள் பட்ட வேதனைகள் அவமானங்கள் யாருக்கும் தெரியாது என்றே கருதுகிறேன்.
என்னால் ஒரு படி மேலே சென்று யோசிக்க முடிகிறதே தவிர எனக்கும் தெரியாது.
இங்கு ஐரோப்பிய இளம் தலை முறையினரே கறுப்பு இனத்தவரை நடை, உடை மற்றும் பாவனைகளில் பின் பற்றுவதை பரவலாக பார்க்க முடிகிறது.
அதற்கான காரணம் அவர்களது கலை மற்றும் விளையாட்டு துறை போன்றவற்றில் உள்ள திறமைகள்....................மற்றும்............................
இது தவிர கறுப்பினத்தவர் தமது தாழ்வு மனப்பான்மை மறந்து எவரோடும் கலந்து கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.
நமக்கு யாராவது வழிகாட்டியாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறோம்.
இங்கு வாழும் இளைய தலை முறையினர் தனக்கு தானே வழி காட்டியாக வாழ கல்லூரிகளில் பயிற்றுவிக்கப் படுகிறார்கள்.
நாங்கள் விவாதித்திக் கொண்டு அதே இடத்தில் அல்லது தளத்தில் நிற்கிறோம்.
இங்கு உள்ள இளைய தலை முறை விவாதிப்பதை விடுத்து
அவர்கள் விரும்பியதை அவர்களாகவே செய்யத் தலைப்படுகிறார்கள்.
அதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லைதான்.
நம்மை நாம் மறு பரிசீலனை செய்து கொள்ள வேண்டும் என்றே சொல்லத் தொன்றுகிறது.
காய்க்கும் மரங்களுக்குத்தான் கல்லடிகள் விழும்.
அதைப் பழக்கப்படுத்திக் கொள்வது அந்த மரங்களுக்கு நல்லது.
அப்படியானால் மட்டுமே அந்த மரங்களால் தொடர்ந்து கனிகள் தர முடியும்.
<b>மாயாவுக்கு என் வாழ்த்துக்கள்.</b> </span>