04-14-2005, 09:59 PM
வணக்கம் சண்முகி அக்கா...
சித்திரையில் வருவதாகக் குறிப்பிடப்படும் புதுஆண்டினையே முந்தைத் தமிழர் கொண்டாடவில்லை, அதாவது தமிழ்ப் புத்தாண்டு இல்லையென்று சொல்கிறார்கள். அதனால் இந்தப் பெயர்கள் மட்டும் தமிழா இருக்கும் என்று நினைக்கவில்லை.
முன்னர் எங்கோ படித்த ஞாபகம் 60 ஆண்டுகளின் பெயர்களும் தமிழில்லை. அனைத்துமே வடமொழிச் சொற்கள் என்று பெரியார் அவர்களின் புத்தகம் ஒன்றில் படித்ததாய் ஞாபகம்.
இப்பொழுது நீங்கள் எழுதியதன்பின் புத்தகத்தில் தேடிப்பார்த்தேன். தற்போது என் கண்ணில் அது அகப்படவில்லை. ஆனால் வருடப் பிறப்பு என்கிற தலைப்பில் பகுத்தறிவு இதழில் பெரியார் எழுதிய ஒரு கட்டுரை கண்டேன். அதில் வாழ்த்துக்கள் சொல்தையும் வருடப்பிறப்புக் கொண்டாட்டங்களையும் தான் மூடப்பழக்கவழக்கங்களில் ஒன்றாகக் கருதுவதாகவும், தாம் இதைக் கொண்டாடுவதில்லையெனவும், யாரையும் வாழ்த்தப் போவதில்லையெனவும் 6.1.1935 இல் குறிப்பிட்டுள்ளார். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அவருடைய கருத்தில் முழுமையான உடன்பாடு எனக்கு இல்லையென்றாலும், விவாதக் கருப்பொருளாய் சிலவேளை அமையலாம் என்பதால் எங்கு இடுகிறேன். பெரியார் இங்கு குறிப்பிட்டதோடு இன்னொரு விடயத்தையும் குறிப்பிடலாம். மெளன அஞ்சலி செலுத்துவது என்றுவிட்டு 1 (?) நிமிடம் கண்ணை மூடி நிற்பது. இதுபற்றி ஒரு கவிஞர் கவிதை ஒன்று எழுதியிருந்தார்.
என்னவோ தமிழன்னைக்கே அனைத்தும் வெளிச்சம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
சித்திரையில் வருவதாகக் குறிப்பிடப்படும் புதுஆண்டினையே முந்தைத் தமிழர் கொண்டாடவில்லை, அதாவது தமிழ்ப் புத்தாண்டு இல்லையென்று சொல்கிறார்கள். அதனால் இந்தப் பெயர்கள் மட்டும் தமிழா இருக்கும் என்று நினைக்கவில்லை.
முன்னர் எங்கோ படித்த ஞாபகம் 60 ஆண்டுகளின் பெயர்களும் தமிழில்லை. அனைத்துமே வடமொழிச் சொற்கள் என்று பெரியார் அவர்களின் புத்தகம் ஒன்றில் படித்ததாய் ஞாபகம்.
இப்பொழுது நீங்கள் எழுதியதன்பின் புத்தகத்தில் தேடிப்பார்த்தேன். தற்போது என் கண்ணில் அது அகப்படவில்லை. ஆனால் வருடப் பிறப்பு என்கிற தலைப்பில் பகுத்தறிவு இதழில் பெரியார் எழுதிய ஒரு கட்டுரை கண்டேன். அதில் வாழ்த்துக்கள் சொல்தையும் வருடப்பிறப்புக் கொண்டாட்டங்களையும் தான் மூடப்பழக்கவழக்கங்களில் ஒன்றாகக் கருதுவதாகவும், தாம் இதைக் கொண்டாடுவதில்லையெனவும், யாரையும் வாழ்த்தப் போவதில்லையெனவும் 6.1.1935 இல் குறிப்பிட்டுள்ளார். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அவருடைய கருத்தில் முழுமையான உடன்பாடு எனக்கு இல்லையென்றாலும், விவாதக் கருப்பொருளாய் சிலவேளை அமையலாம் என்பதால் எங்கு இடுகிறேன். பெரியார் இங்கு குறிப்பிட்டதோடு இன்னொரு விடயத்தையும் குறிப்பிடலாம். மெளன அஞ்சலி செலுத்துவது என்றுவிட்டு 1 (?) நிமிடம் கண்ணை மூடி நிற்பது. இதுபற்றி ஒரு கவிஞர் கவிதை ஒன்று எழுதியிருந்தார்.
Quote:<b>மெளன அஞ்சலி</b>
ஜெயபாஸ்கரன்
எல்லோருடனும் சேர்ந்து
எழுந்து நிற்பேன் நானும்.
இறந்துபோன ஒருவருக்காக
ஒரு நிமிடம் அஞ்சலியாம்
இறந்தவருக்கான அஞ்சலியாய்
எழுந்து நிற்பதில் எந்த முரணுமில்லை எனக்கு.
ஆயினும்
அமைதி காக்க நேரும்
அந்த ஒரு நிமிடத்தில்
எதை நினைப்பது என்பதுதான்
எல்லா அஞ்சலியிலும்
என் கவலையாக இருக்கிறது.
கண்மூடி தலைகவிழ்ந்து
என்னருகே நிற்பவரும்
இறந்தவரைத்தான் நினைக்கிறார்
என்பதற்கான ஆதாரமில்லை
ஒரு நிமிடம் எழுந்து நிற்குமாறு
எங்களைக் கேட்டுக் கொண்டவர்
மேற்கொண்ட மெளனத்தில்
கணக்கிடப்படுவது
அமரச் சொல்வதற்கான
மணித்துளிகளாகத்தானிருக்கும்,
இறந்து போன எவரைப் பற்றியும்
நிறையவே நினைப்பதுண்டு நான்.
ஆயினும்
நினைப்பதற்காகவே ஒதுக்கப்படும்
அந்த ஒரு நிமிடம்
அதன் பொருட்டுக் கழிவதில்லை
நானும் எழுந்து நிற்க நேரும்
எந்தவொரு அஞ்சலியிலும்.