04-14-2005, 01:36 PM
லண்டனிலுள்ள இந்தியத் தூதரகம் ஊடாக பிரபாகரனின் செய்தி இந்தியத் தலைவர்களுக்கு! தெகல்கா.கொம் கூறுகிறது
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் விசேட செய்தியொன்று லண்டனிலுள்ள இந்தியத் தூதரம் ஊடாக இந்திய அரசிற்கு அனுப்பப்பட்டிருப்பதாக `தெகல்கா.கொம்' என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்விணையத்தள சஞ்சிகையில் செய்தியாளரான வி.கே.சஷிகுமார் அண்மையில் இந்தியாவிலிருந்து வன்னிக்கு வந்து 3 வார காலம் வன்னியில் தங்கியிருந்து விடுதலைப் புலிகளின் நிர்வாக கட்டமைப்புகள் பற்றி ஆராய்ந்திருப்பதுடன், விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்கவி, விடுதலைப் புலிகளின் நீதி நிர்வாகத் துறைப் பொறுப்பாளர் பரா மற்றும் காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஆகியோரையும் சந்தித்துள்ளார்.
இதன் பின் அவர் வெளியிட்டுள்ள செய்தியில்:
லண்டனிலுள்ள விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் அங்குள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளைச் சந்தித்து பேச்சுகள் நடத்திய பின், வன்னிக்கு வந்து புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் மற்றும் முக்கிய தலைவர்களைச் சந்தித்து பேச்சு நடத்தினார்.
அதன் பின் விடுதலைப் புலிகளின் தலைவரது செய்தியொன்றை எடுத்துச் சென்ற அவர் லண்டனிலுள்ள இந்தியத் தூதரகம் ஊடாக புதுடில்லிக்கு அனுப்பியதாக பரராஜசிங்கம் (பரா) தெரிவித்தார்.
இதேநேரம், ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் இடம்பெற்ற தவறிற்கு விடுதலைப் புலிகள் மன்னிப்புக் கோர தயாராய் இருப்பதாக தெரிவித்துள்ள பரராஜசிங்கம், அதேநேரம் விடுதலைப் புலிகளுக்கெதிராக இந்தியா மேற்கொண்ட இராணுவ தலையீட்டிற்காக இந்தியாவும் மன்னிப்புக் கோரவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சமாதானத் தீர்வு எட்டப்பட இலங்கை அரசை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள நடேசன், இதற்காக 2002 ஆம் ஆண்டு போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதும், புலிகளின் குழுவொன்று இந்தியா சென்றதாகவும், தற்போது லண்டனிலுள்ள இந்திய தூதரகம் ஊடாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2002 ஆம் ஆண்டு இந்திய அரசுடன் பேச்சு நடத்துவதற்காக டில்லி சென்ற தூதுக்குழு பின் தலைவரான வண. பிதா கருணாரட்ணம், அச்சமயம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடும் போர் நடந்து கொண்டிருந்த காரணத்தினால் முன்னர் திட்டமிட்டிருந்தபடி அப்போதைய பாதுகாப்பமைச்சர் ஜோர்ஜ் பெர்னான்டஸை சந்திக்க முடியாது போய் விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், இது குறித்து லண்டனிலுள்ள இந்திய தூதரக ஊடகத் துறை அதிகாரியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இப்படி எதுவும் நடந்ததாகவோ அல்லது நடக்கவில்லை என்றோ தன்னால் உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் அந்த இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
Thinakkural

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>