04-12-2005, 03:56 PM
இந்தியவுடனான உறவை சீரமைக்கும் பணியில் விடுதலைப்புலிகள் நாட்டம்
அருணன் செவ்வாய்க்கிழமை 12 ஏப்பிரல் 2005 17:52
பழைய சம்பவங்களை மறந்துவிட்டு ஈழத்தமிழருக்கு அமைதி நியமங்களுக்கு கீழ் நிரந்தர சமாதானத் தீர்வு ஒன்றை பெற்றுக்கொடுக்க சிறீலங்கா அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் நீதி நிர்வாகப்பொறுப்பாளர் பரா தெரிவித்துள்ளார்.
இதன்பொருட்டு இந்தியாவுடன் நல்லுறவுகளை ஏற்படுத்தும் முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இந்திய புலனாய்வு இணையத்தளமான தெகல்கா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்திய அரசுத் தலைவர்களுடன் பேச்சு நடத்துவதற்கு 2002 ஆம் ஆண்டு; வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் செயலக அதிகாரிகளில் ஒருவரான வண. கருணாரட்ணம் அடிகளார் அங்கு சென்றிருந்தார். ஆனால் அப்போது இந்திய-பாகிஸ்தான் உறவில் முறுகல் நிலை தீவிரமாக இருந்ததால் திட்டமிட்டபடி சந்திப்பு கைகூடவில்லை என்று விடுதலைப்புலிகளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவின் நலனுக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய எந்தக்காரியத்தையும் விடுதலைப்புலிகள் செய்யமாட்டார்கள். அதேபோல் தமிழ் மக்களின் நலனுக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய எந்த வேலையும் இந்தியா செய்யக்கூடாது என்று தமிழகக்கட்சிகளுக்கு ஊடாக ஒரு உறுதிமொழி செய்து கொள்ளப்பட்டுள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
லண்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஒருவர் வன்னிக்கு வந்து விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்புக்களில் விடுதலைப்புலிகள் வழங்கிய செய்தியை எடுத்துச்சென்றுள்ள அந்த அதிகாரி அதை லண்டன் தூதரகம் ஊடாக புதுடில்லி அரசிடம் சமர்ப்பித்திருப்பார் என்றும் விடுதலைப்புலிகளின் வட்டாரங்கள் தெரிவித்ததாக அந்தச்செய்தி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக லண்டனில் உள்ள இந்திய தூதரக ஊடகப்பிரிவு அதிகாரி பரத்வாஜ் என்பவரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது அப்படி எதுவும் நடந்ததாக தனக்கு தெரியாது என்றும் அவ்வாறான தகவல் பரிமாற்றம் எதுவும் நடந்ததாகவோ நடக்கவில்லை என்றோ தன்னால் கூறமுடியாதுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி - புதினம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>