09-14-2003, 01:13 PM
கண்ணன் Wrote:ஒரு பொருளை வாங்கும் போது அந்தப்பொருள் பற்றிய குறிப்புக்கள் வெளியே இருக்க வேண்டுமேஅன்றி உள்ளே அல்ல அதே போல்த்தான் Video பிரதிகளுக்கும் உள்ளேயும் வெளியேயும் அந்த முத்திரைகள் இருக்கவேண்டும்.
இந்த எச்சரிக்கைகள் எந்ததமிழ் video, dvd யிலும் இருப்பதாக தெரியவில்லை என வர்ததகநிறுவன ஊழியர் ஒருவர் மூலம் அறிகிறேன்.
அதைவிட அந்த படத்தை பார்க்க போகிறவர்கள் தமிழர்கள் எனவே அது பற்றிய அறிவித்தலும் தமிழில் தெளிவாக இருக்கவேண்டும். அப்படி நான் பார்த்த எந்தப்படங்களிலும் இருந்ததாக எனக்குத்தெரியவில்லை. சில வேளை ஆங்கிலத்தில் சின்னஞ்சிறிய எழுத்தில் இருந்ததோ தெரியாது ஆங்கில மொழி அறிவு எனக்கில்லை அதனால் அதை புரிந்து கொள்ள முடியாதிருத்திருக்கலாம்.
ஆங்கில அறிவுள்ளவர்கள் தான் மேதாவிகளே எனக்குத்தெரியாது ஆனால் நான் சுத்த பாமரன்
இது வீடியோ உரிமையைப் பெற்று வெளியிடுபவர்களின் தவறு என்றுதான் நான் நினைக்கிறேன். அவர்கள் வீடியோ கெசட்களை அல்லது DVD,VCD போன்றவற்றை வெளியிடும் போது அதற்கான கவர் டிசைன்களைச் செய்பவர்களுக்கு இதுபற்றி தெரிவிக்க வேண்டும்.அத்துடன் இதுவும் ஒரு சட்ட வரையறைக்குட்பட்ட கலைதான்.ஆனால் நம்மிடையே உள்ள பெரும்பாலானவர்ர்கள் இதுபற்றிய எந்தவித கல்வியோ அல்லது அறிவோ இல்லாமல் இவற்றில் ஈடுபடுவதால் இச்சிக்கல் உருவாகிறது.இது பற்றி உரிய இடங்களில் முறையிட்டால் இது தொடராமல் தடுக்கலாம். குறிப்பாக எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம் எப்படிப்பட்டவர்கள் இவ் உரிமைகளைப் பெறுகிறார்கள் என்பது? இவர்களது குறிக்கோள் பணம் புரட்டுவதே தவிர கலைச் சேவையல்ல.
புலம் பெயர் நாடுகளில் உள்ள தொலைக் காட்சிகளை நடத்துபவர்களும் இப்படிப்பட்டவர்களே என்பது கவனிக்க வேண்டிய ஒரு விடயமும் வேதனைக்குரியதுமாகும். இதில் முக்கியமான தகுதிகளில் இருப்போர் எத்தகைய தகுதியுள்ளவர்கள் என்று ஆராய்ந்தால் புரியும். அண்மையில் ஒருவர் தொலைக் காட்சி ஒன்றுக்கு முக்கியமானவராக தோந்தெடுக்கப்பட்டதற்கான காரணம், அவருக்கு இந்திய சினிமா நடசத்திரங்களைத் தெரியுமென்பதாம்.தலைவிதி...........
சாதாரணமாகவே தியட்டர்களில் வெளியே ஒட்டப்பட்டுள்ள சுவர் விளம்பர அறிக்கைகளில் இந்த தணிக்கை எழுத்து பொறிக்கப்பட்டு இருக்கும்,இருக்க வேண்டும்.ஆனால் இதை வெகுவானவர்கள் இந்தியாவிலேயே பார்ப்பதில்லை.இதை ஏன் சொல்கிறேன் என்றால் சில பொடிசுகள் டிக்கெட் வாங்கி தியெட்டருக்குள் நுழைய வரும் போது டிக்கட் கிழிப்பவர் உள்ளே விட மறுப்பார். தர்க்கம் வரும்.
பொடிசு: நீ முடியாதுண்ணா,ஏன்யா டிக்கட் குடுத்தாங்க? என்று கத்துவான்.
டிக்கட் கிழிப்பவர்:"கண்ணு என்ன குருடா , போய் போஸ்டரை பாருடா கசமாளம்........" என்று கத்துவார்.
பொடிசு: வா வெளியே வச்சுக்கிறேன் " என்பான் பதிலுக்கு.
டிக்கட் கிழிப்பவர்:எந்த வண்டிண்ணு கூட பார்க்காம ஏறிட்டானுக, பொறம் போக்கு........."
என அமளி துமளியே ஏற்படுவதுண்டு.
இலங்கையில் கூட ஆங்கிலப்படங்கள் திரையிடப்பட்டால், திரைப்பட தலைப்புக்குள் விளம்பரத்தில் Adults only அதாவது வயது வந்தவர்களுக்கு மட்டும் என எழுதப்பட்டிருக்கும். மற்றப்படி தமிழ்,Hindi படங்களுக்கு எழுதியதை நான் கண்டது குறைவு. ஆனால் தோரகா என்ற Hindi படத்துக்கும் அதே படம் தமிழ் மொழி மாற்றமாக வந்த விசுணுவர்த்தன் நடித்திருந்த அலை என்று ஞாபகம் (சரியாக பெயர் சொல்ல முடியவில்லை)Adults only என குறிப்பிடப்பட்டிருந்தது.சிங்கள மொழி படங்களில் ஒரு சில இக் குறியீட்டோடு வெளிவந்தன.
ஒன்றுமே விரசமில்லாத ஆங்கிலப் படங்களுக்கும் சில தியெட்டர்களில் Adults only என எழுதியிருந்ததைப் பார்த்திருக்கிறேன்.
அக்காலத்தில் "என்ன படம் பார்த்தீர்கள்?" என்று யாராவது கேட்டால் நாங்களும் Adults only என்றுதான் நண்பர்களுக்கு சொன்னோம். வீட்டில் மட்டும் பக்கத்து தியெட்டரில் ஓடிய ஏதோ தமிழ் படத்தின் பெயரைச் சொன்னோம். நாணும் அப்போ உங்களைப் போல சுத்த பாமரன்தான்.
ஆனால் கண்ணா,
இந்த
http://www.kijkwijzer.nl/engels/epictos.html[/color]
இணைய தளத்தை தேட மட்டும் எங்கிருந்து வந்தது ஆங்கில அறிவு???????????????
துாங்குவோரை எழுப்பலாமாம்.
ஆனால் துாங்குவோர் போல நடிப்போரை எந்தக் கொம்பனாலும் எழுப்ப முடியாதெண்டு சொல்கிறர்ாகள் கண்ணா,உண்மையா?
உன் அன்பு நண்பன்
AJeevan

