04-11-2005, 11:27 PM
இளைஞன் Wrote:<b>வெளிச்சக் குப்பை</b>
<img src='http://www.yarl.com/forum/files/velichcha.jpg' border='0' alt='user posted image'>
இரவுகள் அழகாய்ச் சிரிக்கின்றன
வா வா தோழி
சென்று பார்ப்போம்
எடிசனின் அழகிய கண்டுபிடிப்பு
வீதியில் இருக்கு
நின்று பார்ப்போம்
என் கைகள் பற்றி வெளியே வா
இரவுகள் கழியச்
சுற்றி வருவோம்
வேகமாய் விரைந்து தோழியே வா
மறைவுகள் வெளிக்க
வலம் வருவோம்
தாலி கட்டுமோர் சடங்கு எதற்கு?
பதிவில் கிடைக்கும்
சலுகை எதற்கு?
போலி வாழ்க்கை வாழ்தல் முடித்து
பொய்யில் சேர்தல்
பழமை துடைப்போம்
வெளிச்சக் குப்பை கிளறிக் கிளறி
எங்கள் தீனி
கண்டு பிடிப்போம்
நெருப்பில் மூழ்கி நீரில் காய்ந்து
காற்றில் எரிந்து
உலகம் தின்போம்
நன்றி: அப்பால் தமிழ்
நவநாகரிகம் என்ற போர்வையில் எமது கலாச்சார பண்பாடுகள் பகலிலேயே திருட்டுப்போகிறது. இதற்கு வழி சமைத்துää சிவப்பு கம்பளமும் விரிக்க தயாரக இருக்கிறது இளைய யுகத்தின் ஒரு பிரிவு. அவர்களுக்கு குட்டு வைத்த கவிதையாகவே கருதுகிறேன் இக்கவிதையை!
:: ::
-
!
-
!

