04-10-2005, 08:03 PM
இந்தோனேசியாவில் மீண்டும் பூமி அதிர்ச்சி: இலங்கைக்கு ஆழிப்பேரலை பாதிப்பு இல்லை!!
கொழும்பு நிருபர் ஞாயிற்றுக்கிழமை 10 ஏப்பிரல் 200520:28 ஈழம்
இந்தோனேசியாவில் இன்று பிற்பகல் ஏற்ப்ட்ட பூமி அதிர்ச்சியினால் இலங்கைத் தீவிற்கு எதுவித நேரடித்தாக்கங்களும் ஏற்ப்படாது என்று சிறீலங்கா வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
தாயக நேரப்படி இன்று பிற்பகல் 4.29க்கு இந்தோனேசியாவில் ஏற்ப்பட்ட இப்பூமி அதிர்ச்சி 6.8 ரிக்டர் அளவில் பதிவாகியிருக்கிறது. சுமாத்திரா தீவின் படாங்க் பகுதியில் இப்பூமி அதிர்ச்சி ஏற்ப்பட்டது.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்த்தப்பட்டனர். இதுவரையில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்று படாங்க் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இன்று ஏற்ப்பட்ட பூமி அதிர்ச்சி சில நேரங்களில் சிறிய அளவிலான ஆழிப்பேரலைகளை உருவாக்கக் கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக ஆழிப்பேரலை தகவல் நிலையத்தை தொடர்புகொண்டு கேட்டபோது இப்பூமி அதிர்ச்சியினால் இலங்கைத் தீவிற்கு எதுவித நேரடித்தாக்கமும் ஏற்ப்படாது என்றும் ஆழிப்பேரலை அலைகள் உருவாகுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்றும் வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
Puthinam

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>