09-13-2003, 08:06 PM
நன்றி கண்ணன்,
தேவையான போது தேவையான விளக்கங்களை எழுதக் கிடைத்ததில் மகிழ்ச்சி.
[u]<b>இந்திய சினிமா தணிக்கை முறை</b>
திரைப்படத் தணிக்கை , திரைப்பட வரலாற்றின் ஆரம்ப கால கட்டத்திலேயே ஏற்பட்டது.
மதம்
அரசியல்
சமூகம்
போன்ற காரணங்களுக்காக தணிக்கை முறை ஏற்பட்டது.
மதச் சட்டங்கள், நம்பிக்கைகள் போன்றவற்றிற்கு கருத்துகளைச் சொல்லும் போதும் கடவுளரை இழிவுபடுத்தி திரைப்படங்களை எடுக்கும் போதும் மதங்களைச் சார்ந்தவர்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர்.
அரசுக்கு எதிராக எடுக்கப்படும் படங்களில் அரசின் கொள்கைகளையும், அரசின் மேல் குற்றச் சாட்டுகளையும் கூறியதால் அரசு இத்தகைய படங்களை எதிர்த்தது.
காமத்தையும், வன்முறையையும், ஏனைய குற்றங்களையும் துாண்டிவிடும் விதத்தில் எடுக்கப்படும் படங்களை சமுதாயக் கண்ணோட்டத்தில் அக்கறையுள்ளவர்கள் எதிர்த்தனர்.
இதன் விளைவால் தணிக்கை முறை ஏற்பட்டது.திரைப்படத் தயாரிப்பு முடிந்ததும், திரையிடுமுன் தணிக்கை குழுவிற்கு திரைப்படம் வரும். தணிக்கையில் தப்பான பகுதிகள் நீக்கப்படும். மாற்றம் செய்யச் சொல்லியும் திரைப்படம் வெளிவரும்.சில படங்கள் திரையிடத் தடையும் விதிக்கப்படும்.
கமியுனிசம், சர்வாதிகாரம் மற்றும் மதச்சார்பு நாடுகளில் அரசே திரைப்படங்களைத் தணிக்கை செய்கிறது.
அமெரிக்கா,பிரிட்டன்,ஜெர்மனி, ஜப்பான் போன்ற ஜனநாயக நாடுகளில் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களே தணிக்கை செய்து கொள்கின்றனர்.இந்த தணிக்கையை போலீஸ் துறை ஏற்கவோ, மறுக்கவோ மாற்றவோ அதிகாரமுண்டு.
சில நாடுகளில் , அதாவது பெல்ஜியம்,சுவீடன், டென்மார்க்,சுவிற்சர்லாந்து போன்ற நாடுகளில் திரைப்படத்தை தணிக்கை செய்யாமலே வெளியிடும் முறை நடைமுறையில் உள்ளது.
இந்தியாவில் அரசால் நியமிக்கப்பட்ட திரைப்படக் குழு திரைப்படங்களை தணிக்கை செய்கிறது. இதில் தலைவர் ஒருவரும் 12 முதல் 20க்கு குறையாத அங்கத்தினர்களும் அங்கம் வகிக்கின்றனர்.
இந்தியாவிலுள்ள தணிக்கை குழுக்கள் மாநில வாரியாக செயல்படுகின்றன.
திரைப்படத் தயாரிப்பாளர் தணிக்கைக் குழுவிற்கு விண்ணப்பித்த பின்னர் , திரைப்படத்தின் நீளத்தைப் பொறுத்து தணிக்கை கட்டணம் செலுத்த வேண்டும்.
தணிக்கை குழு குறிப்பிடும் நாளில் திரைப்படத்தின் பிரதியை , வீடியோவில் பதிவு செய்து,
பதிவு செய்யப்பட்ட வீடியோ கெசட்,
கதை,
வசனம்,
ஷாட் முதலிய விளக்கங்கள் அடங்கிய
சென்சார் ஸ்கிரிப்ட் முதலியவற்றை தணிக்கை குழுவிடம் கையளித்தல் வேண்டும்.
பின்னர் தணிக்கை குழு படத்தை பார்த்து படத்திற்கு என்ன சான்றிதழ் வழங்குவதென முடிவெடுப்பார்கள்.
<b>இந்திய திரைப்பட சான்றிதழ்கள் 4 வகைப்படும்.
அவை [b]U, A , U/A, S</b> எனப்படும்.
<b>U</b> - அனைத்து மக்களும் பார்க்கலாம்.
<b>(Unrestricted Public Exhibition)</b>
<b>A</b> - 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பார்க்கத் தகுந்த படம்.
<b>(Adults only)</b>
<b>U/A</b> -12 வயதற்கு உட்பட்டவர்கள் பெரியோரின் அனுமதியுடன் பார்க்கத் தகுந்த படம். பெரியோரும் பார்க்கலாம்.
<b>S</b> - விசேட பிரிவினர் மட்டும் பார்க்கத் தகுந்த படம். இவை மருத்தவர், இரானுவம் மற்றும் குற்றவியல் நிபுணர்களுக்கென்று தயாரிக்கப்படும் விசேட படங்களாகும்.
இந்த சான்றிதழ் பெறும் படங்கள் அந்தந்தத் துறையைச் சார்ந்தவர்களைத் தவிர்ந்த வேறு எவரும் பார்க்க அனுமதிக்கப் பட மாட்டார்கள்.
இந்த 4 பிரிவுகளில் எந்தப்பிரிவில் படத்திற்கு சான்று வேண்டும் என்று தயாரிப்பாளர் கோரலாம்.
இந்த கோரிக்கைக்கு ஏற்ப திரைப்படத்தில் மாற்றங்களைச் செய்ய தணிக்கை குழு கோரும். அவர்களுடைய கருத்தை தகுந்த காரணங்களுடன் ஏற்கவோ மறுக்கவோ தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் உரிமையுண்டு.
தணிக்கை குழு திரைப்படத்திற்கு தடையும் விதிக்கலாம்.
அப்படி தடை ஏற்படும் போது தலைமை தணிக்கை குழுவான ட்ரிப்யுனலுக்கு அப்பீல் செய்யலாம்.
அங்கு தம் நியாயங்களை எடுத்துக்கூறி முடிவாகக் கிடைக்கும் சான்றிதழைப் பெற்று திரைப்படத்தை வெளியிடலாம்.
உங்கள் கவனத்திற்கு:-
(Boys திரைப்படம் U/A சான்றிதழ் பெற்ற திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.)
தொடரும்..................
நன்றி:மதன் கேப்ரியேல்
சென்னை திரைப்பட கல்லுாரி விரிவுரையாளர்.
[b]"A cultural value that is disappearing from the Earth."
-Werner Herzog
நட்புடன்
AJeevan
info@ajeevan.com