Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அமைதியின் புறா!
#5
Quote:இறைவா!
இவர்போல் இன்னும் இடையர்கள் எமக்கு வேண்டும்!
இவ்வுலகுக்கு இடையறாத அமைதி வேண்டும்!!

இவர் இருந்தும் அமைதி வந்ததா..???! கடந்த 25 வருடத்தில் எத்தனை உயிர்களைப் போர் காவு கொண்டிருக்கும்...எத்தனை அநியாயங்கள் கண் முன் நடந்திருக்கும்...மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட வறுமை பிணி என்று எவ்வளவு அழிவுகள் நிகழ்ந்திருக்கும்...அவற்றைத் தடுக்க முயன்றிருக்கலாமே....இயற்கை அழிவைத்தான் தடுக்க முடியாது விட்டாலும்....!

இருந்தாலும் கருக்கலைப்பு ஒருபால் திருமணம் முழு மனிதக் குளோனிங் என்று மனித அநாகரிகங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்ததற்கும் மத்திய கிழக்கில் யூதர்களுக்கும் அரேபியர்களுக்குமான இடையேயான மத ரீதியான இழுபறியைத் தணிக்க முயற்சி செய்ததற்கும் சில சந்தர்ப்பங்களில் உலகில் வறுமை அடக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் தந்ததற்கும் பாராட்டலாம்...!

வத்திக்கான் பெண்களை இன்னும் இரண்டாந்தரப் பிரஜைகளாக நோக்குகிறது...அது இவராலும் தடுக்க முடியாமல் போய்விட்டிருப்பது வருத்தமளிக்கும் விடயம்...! கடவுளின் முன் மனிதர்கள் உயிர்கள் எல்லோரும் சமம்...அதை இவரும் பல சந்தர்ப்பங்களில் நிறைவேற்றத் தவறியே விட்டார்....! கடவுளின் தூதுவர் களத்தில் மனிதரோடு உயிர்களோடு நின்றாரே தவிர கட்டிடத்துள் இருந்து அறிக்கை விடவில்லை....! இவர் உலகில் மத ரீதியான நம்பிக்கையை வளர்த்திருக்கலாம்...ஆனால் மனிதத்திற்கு போதிய சேவை அளித்ததாகத் தெரியவில்லை....! Idea Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by eelapirean - 04-10-2005, 05:33 PM
[No subject] - by tamilini - 04-10-2005, 05:43 PM
[No subject] - by KULAKADDAN - 04-10-2005, 05:46 PM
[No subject] - by kuruvikal - 04-10-2005, 06:02 PM
[No subject] - by stalin - 04-10-2005, 10:38 PM
[No subject] - by kavithan - 04-11-2005, 01:20 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)