09-13-2003, 06:13 PM
Manithaasan Wrote:Quote:எண்ணற்ற கலைஞர்களது படைப்புகள் அவர்களது பெயர்கள் குறிப்பிடப் படாமலே சில ஊடகங்கள் மூலம் வெளியிடப்படுகின்றன என்றும்இ இது ஒரு மாபெரும் பகற் கொள்ளை என்றும் குறிப்பிட்டார்.அஜீவன்
இந்தக் களத்தில் இருந்துகூட படைப்பாளருக்குத்தெரியாமல் ஆக்கங்கள் திருடப்பட்டு வீரகேசரிவரை போயிருந்ததே
மணிதாசன் அவர்களே,
அப்படி நடந்திருந்தால், நான் எழுதியுள்ள செய்தியோடு வீரகேசரிக்கு உண்மையான ஆக்க விபரங்களுடன் எழுதுங்கள். விழிக்க வேண்டிவர்களாவது விழித்துக் கொள்வார்கள்.
வழக்கு தொடுக்க நினைத்தால் உங்கள் நாட்டு ஊடகவியலாளர் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தோ அல்லது அவர்களது உரிமைக் குழுவிடம் தக்க சான்றுகளை சமர்ப்பித்தோ நீதி கேட்கலாம்.
இதற்கு மொழி ஒரு தடையாக இருப்பதில்லை.இதற்காக மொழி பெயர்ப்பாளர்களை நீதி மன்றம் ஒழுங்கு செய்வதோடு,அதற்கான செலவுகளை தவறுக்கு பொறுப்பானவரிடமிருந்தே அறவிடுகிறது.
காரணம் சுவிசில் இருந்து வெளிவரும் துருக்கிய வாரப் பத்திரிகைக்கு , சுவிசில் வாழும் துருக்கிய நாட்டு நிருபர் கொடுத்த செய்திகளை தமது செய்தியாக மொழி பெயர்த்து வெளியிட்ட ஒரு சுவிசின் பத்திரிகைக்கு சுவிசின் ஊடகவியலாளர் நீதிமன்றம் 1998ம் ஆண்டு Sfr.25ஆயிரம் பிராங் நஸ்ட ஈடாக வழங்கியிருக்கிறது.
அத்துடன் அச் செய்தியை களவாடி எழுதிய ஊடகவியலாளருக்கு இரண்டு வருடங்கள் வரை எந்த ஒரு ஊடகத்திலும் எழுதக் கூடாது எனவும் தடை விதித்துள்ளது.
Thanks: Swiss News Association

