04-10-2005, 02:03 PM
திருமலைக்கும் விஸ்தரிக்கப்படும் புலிகளுக்கு எதிரான நிழல் யுத்தம்
<b>* படையினரின் ஆதரவுடனேயே தாக்குதல் நடத்தப்பட்டதாக புலிகள் குற்றச்சாட்டு; கருணா குழுவினரே தாக்குதலை நடத்தியதாக இராணுவ தகவல்</b>
கிழக்கில் அதிகரித்து வரும் படுகொலைகளைத் தடுத்து நிறுத்துவது தொடர்பாக போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு படையினரையும் விடுதலைப்புலிகளையும் சந்தித்த மறுநாள் திருகோணமலை மாவட்டத்தில் புலிகளின் சோதனை நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் இதுவரை நடைபெற்ற இவ்வாறான தாக்குதல் திருகோணமலை மாவட்டத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதை இது தெளிவுபடுத்துகிறது.
கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பில் இடம்பெறும் தாக்குதலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரு மாதங்களில் முப்பதிற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் அதேயளவினர் காயமடைந்துமுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புலிகள், இராணுவ உளவாளிகள், தமிழ்க் குழுக்களென கொல்லப்படுவோரின் பட்டியல் நீள்கிறது.
விடுதலைப்புலிகளுக்கெதிரான `நிழல் யுத்தம்' ஆரம்பிக்கப்பட்ட பின்பே கிழக்கில் கொலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. கருணா குழுவினரையும், இராணுவ உளவாளிகளையும், தமிழ்க் குழுக்களையும் பயன்படுத்தி இராணுவ புலனாய்வுப் பிரிவே தங்கள் மீதான நிழல் யுத்தத்தை நடத்துவதாக புலிகள் தொடர்ந்தும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
புலிகள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்க, இராணுவ உளவாளிகள், மற்றும் தமிழ்க் குழுக்கள் மீதான தாக்குதல்களும் அதிகரிக்கிறது. புளொட் மோகன் போன்றோர் அடுத்தடுத்து கொல்லப்பட்ட நிலையில் இராணுவ புலனாய்வுப் பிரிவே எலும்புக் கூடாகி விட்டதாக இராணுவ புலனாய்வுத்துறை கலங்கி நின்றபோது, கருணா குழுவை பயன்படுத்தி புலிகள் மீதான தாக்குதலைத் தொடரும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.
புலிகள் மீது எங்காவதொரு தாக்குதல் நடைபெற்றுவிட்டால் அது கருணா குழுவின் கைவரிசையே என உடனடியாகக் கூறும் படைத்தரப்பு, பொது மக்கள் அல்லது தமிழ்க் குழுக்களைச் சேர்ந்த எவராவது கொல்லப்பட்டால் உடனடியாக அதற்கான பொறுப்பை புலிகள் மீது சுமத்திவிடுகின்றது. இதுவும் புலிகளுக்கெதிரான நிழல் யுத்தத்தின் ஒரு அம்சமாகவேயுள்ளது.
முன்னர் போர் நடைபெற்ற காலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நீண்ட தூரம் ஊடுருவி தாக்குதலை நடத்தி வந்த இராணுவ புலனாய்வுப் பிரிவு, தற்போது போர்நிறுத்த காலத்தில், தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள், போர்நிறுத்த உடன்பாட்டுக்கமைய அரசியல் பணிகளில் ஈடுபடும் புலிகள் மீது நிழல் யுத்தத்தை நடத்துகிறது. இவ்விரு தாக்குதல்களும் புலிகள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் குழப்பங்களை ஏற்படுத்தும் நோக்கத்தையே கொண்டன.
இதேநேரம் தங்கள் மீதான தாக்குதல்களை, இராணுவ புலனாய்வுப் பிரிவே கருணா குழுவையும், தமிழ்க் குழுக்களையும் பயன்படுத்தி மேற்கொண்டு வருவதை புலிகள் பல்வேறு தடவைகளிலும் ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளனர்.
இந்த நிலையிலேயே இதுவரை காலமும் மட்டக்களப்பிலும் பொலநறுவை மாவட்டத்திலும் புலிகளுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த தாக்குதல்கள் தற்போது திருகோணமலை எல்லைக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
மூதூர் - மட்டக்களப்பு வீதியில் மஹிந்தபுர இராணுவ சோதனை நிலையத்திற்கு சற்று அப்பாலிருந்து பூநகரிலுள்ள புலிகளின் சோதனை நிலையம் மீது வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இந்தத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
மூதூர் - மட்டக்களப்பு வீதியில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியின் எல்லையிலேயே மஹிந்தபுர இராணுவ முகாமுள்ளது. இந்த முகாமைத் தாண்டியே புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்ல வேண்டும். இந்த முகாமின் சோதனை நிலையத்தினூடாகவே, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மக்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைவர்.
இராணுவத்தினரின் இந்தச் சோதனை நிலையத்திலிருந்து 500 மீற்றர் தூரத்தில் புலிகளின் முதல் சோதனை நிலையம் பூநகர் பகுதியிலுள்ளது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்பவர்கள், பூநகர் சோதனை நிலைய மூடாகவே நுழைய வேண்டும். படையினரதும் புலிகளதும் சோதனை நிலையங்களுக்கிடையிலான இந்த 500 மீற்றர் தூரமானது இராணுவ சூனியப் பிரதேசமாகும். (No man Zone)
வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இராணுவ சீருடையணிந்த 9 பேர் இந்த இராணுவ சூனியப் பிரதேசமூடாகவே வந்து புலிகளின் பூநகர் சோதனை நிலையம் மீது ஆர்.பி.ஜி. மற்றும் சிறிய ரக துப்பாக்கிகளால் சில நிமிட நேரம் கடும் தாக்குதலை தொடுத்துவிட்டு மஹிந்தபுர சோதனை நிலையத்திற்குள் தப்பியோடி விட்டதாக புலிகள் தரப்பு போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் தெரிவித்துள்ளது.
ஏனைய பகுதிகளைப் போலல்லாது, இரு தரப்பினதும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களின் இறுதிச் சோதனை நிலையங்களென்பதால், போக்குவரத்துக்கான பகுதியை விட ஏனைய பகுதிகளில் கண்ணிவெடிகள், மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கும் அதேநேரம், தத்தமது பகுதிக்குள் மற்ற தரப்பினரின் ஊடுருவல்களைத் தடுப்பதற்காக பதுங்கு குழிகள், காவலரண்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பும் தீவிரமாயிருக்கும்.
இதனால், இராணுவ சூனியப் பிரதேசத்திலிருந்து தாக்குதல் நடத்தியோர் மஹிந்தபுர இராணுவ சோதனை நிலையத்தினூடாகவே வந்து தங்கள் சோதனை நிலையத்தின் மீது தாக்குதலை நடத்தி விட்டு இராணுவ சோதனை நிலையத்திற்குள்ளே மீண்டும் தப்பிச் சென்று விட்டதாக புலிகள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதுடன் கண்காணிப்புக் குழுவிடமும் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணா குழுவே பூநகரில் புலிகளின் சோதனை நிலையம் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறும் படைத்தரப்பு, இந்தத் தாக்குதலுக்கு படையினர் ஆதரவு வழங்கியதாக புலிகள் கூறியுள்ளதை மறுத்துள்ளதுடன், புலிகள் மீது தாக்குதல் ஏதாவது நடைபெற்றால் அதற்கான பழியை புலிகள் எப்போதும் இராணுவத்தினர் மீது சுமத்துவது வழமையென்றும் கூறியுள்ளது.
ஆனால், தங்களது சோதனை நிலையத்திற்கும் படையினரது சோதனைநிலையத்திற்கு மிடையிலுள்ள 500 மீற்றர் தூர இராணுவ சூனியப் பிரதேச மூடாக, இராணுவ சோதனை நிலையப் பக்கமிருந்து இராணுவத்தினருக்குத் தெரியாமல் வந்து எப்படித் தாக்குதலை நடத்த முடியுமென்றும் புலிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
அதேநேரம், இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர், புலிகளின் திருமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலன் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடம் முக்கிய முறைப்பாடொன்றை தெரிவித்திருந்தார்.
தங்கள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் மஹிந்தபுர இராணுவ முகாமில் கருணா குழுவும், அவர்களுடனிணைந்து தாக்குதலில் ஈடுபடும் படைத்தரப்பும் நிற்பதாக தங்களுக்கு இரகசியத் தகவல் கிடைத்திருப்பதாக, கண்காணிப்புக் குழுவிடம் தெரிவித்த தனது முறைப்பாட்டில் எழிலன் தெரிவித்திருந்தார்.
எழிலனின் இந்த முறைப்பாடு குறித்து கண்காணிப்புக் குழுவினர், திருமலை மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் குலதுங்கவிடம் தெரிவித்தபோது, அவ்வாறான குற்றச்சாட்டுகளை மறுத்த அவர் இது ஆதாரமற்றதென்றும் இதில் எதுவித உண்மையுமில்லையெனக் கூறவே, அவரது இந்தப் பதிலை கண்காணிப்புக் குழு எழிலனிடம் தெரிவித்தது.
இது நடந்து இரு தினங்களில் மஹிந்தபுர சோதனை நிலையத்திற்கு அப்பாலுள்ள இராணுவ சூனியப் பிரதேசமூடாகச் சென்ற 9 பேர், புலிகளின் சோதனை நிலையம் மீது திடீர் தாக்குதலை நடத்திவிட்டு வந்த வழியே தப்பியோடி விட்டனர். இந்தத் தாக்குதலில் புலிகளின் உதவியாளரொருவர் உயிரிழந்ததுடன் துணைப்படை வீரரொருவர் காயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் பற்றி உடனடியாக கண்காணிப்புக் குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்த எழிலன், மஹிந்தபுர முகாமில் கருணா குழுவினர் சிலரும் அவர்களுடனிணைந்து தங்கள் மீது தாக்குதலை நடத்தும் படையினரும் வந்திருப்பதாக தாங்கள் புதன்கிழமை கூறியிருந்ததையும் சுட்டிக் காட்டிப் படையினரே இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பெனவும் கூறியுள்ளனர்.
கிழக்கில், அம்பாறை - மட்டக்களப்பில் - பொலநறுவையில் மட்டுமல்ல திருகோணமலையிலும் புலிகள் மீது தாக்குதலை நடத்தும் வல்லமையை கருணா குழு பெற்றுள்ளதாகக் காண்பிக்கும் நோக்கிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் புலிகள் தரப்பில் எவ்வளவு பேர் கொல்லப்படுகிறார்களென்பது தாக்குதலின் நோக்கமல்ல, ஆனால், திருகோணமலையிலும் புலிகள் மீது தாக்குதலை நடத்தக் கூடிய வலுவான நிலையில் கருணா குழு இருப்பதாகக் காண்பிப்பதே இதன் நோக்கமாகும்.
இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு முதல் நாள் கூட, மட்டக்களப்பில் கண்காணிப்புக் குழுவின் பதில் தலைவர் ஹக்ரப் ஹொக்லண்ட் உடனான சந்திப்பில் புலிகளின் மட்டு.-அம்பாறை சிறப்புத் தளபதி கேணல் பானு சில விடயங்களைச் சுட்டிக் காட்டியிருந்தார். தங்கள் மீதான தாக்குதல்களையெல்லாம் இராணுவ புலனாய்வுப் பிரிவே மேற்கொள்வதாகவும் சிலவேளைகளில் அவ்வாறான தாக்குதல்களில் கருணா குழுவிலுள்ளவர்களைச் சேர்த்துக் கொள்வதாகவும், ஆனால், இராணுவமே முழுக்க முழுக்க இவ்வாறான தாக்குதலுக்குப் பொறுப்பென்றும் கூறியிருந்தார்.
திருகோணமலையில் நிலவும் அமைதியைச் சீர்குலைக்க இராணுவம் திட்டமிட்டுச் செயற்படுவதாகவும் இது திருகோணமலையில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றதெனவும் எழிலன் கண்காணிப்புக் குழுவிடம் எச்சரித்துள்ளமையானது, திருகோணமலையில் புலிகளுக்கெதிரான தாக்குதல்கள் தொடரப் போகின்றதென்பதை புலிகள் உணர்ந்துள்ளதை தெளிவுபடுத்துகின்றது.
புலிகளின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை எல்லைப் பகுதிகளில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் திருகோணமலையிலும் தாக்குதல் நடைபெற்றமையானது அங்கும் பெரும் குழப்பம் உருவாகப் போவதைத் தெளிவுபடுத்தியுள்ளது. தாக்குதல், பதில் தாக்குதலென இங்கு நிலைமை மோசமடைந்து விடுமோ என்ற அச்சம் இந்தச் சம்பவத்துடன் மக்களை வாட்டத் தொடங்கியுள்ளது.
வெலிக்கந்தை தீவுச்சேனைப் பகுதியில் கருணாவின் முகாமிருந்தது அம்பலத்திற்கு வந்த நிலையில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்த முகாமிருப்பது குறித்து கண்காணிப்புக் குழுவும் சுட்டிக்காட்டியுள்ளது. மட்டு.- அம்பாறை மாவட்டங்களில் அண்மைக் காலங்களில் புலிகள் மீதான தாக்குதல்களின் பின்னணி குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையிலேயே கண்காணிப்புக் குழுவின் மட்டு. மாவட்ட அதிகாரியான ஸ்ரீன் தீவுச்சேனையில் கருணா குழுவின் முகாமிருப்பது குறித்து கூறியுள்ளார்.
இந்த ஆணைக்குழுவின் முன் 15 பொலிஸ் அதிகாரிகளும், ஐந்து இராணுவ அதிகாரிகளும், நான்கு விசேட அதிரடிப்படை அதிகாரிகளும், இரு கண்காணிப்புக் குழு அதிகாரிகளுமென 26 பேர் சாட்சியமளித்துள்ளனர். இதில், வெலிக்கந்தையில் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாகவிருந்து அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றஞ் செய்யப்பட்டதாகக் கூறப்படும் கப்டன் பண்டார கடந்த புதன்கிழமை இரகசியமாகச் சாட்சியமளித்திருந்தார்.
கிழக்கில் கருணா குழுவென்றொன்றுள்ளதாகவும், புலிகள் மீதான தாக்குதல்களை அவர்களே மேற்கொண்டு வருவதாகவும், இந்த ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த இராணுவ, பொலிஸ், அதிரடிப் படை அதிகாரிகள் வலியுறுத்த முற்பட்டுள்ளனர். அதேநேரம், புலிகள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் எவ்வாறு தாக்குதல்களை நடத்துகிறார்களோ அவ்வாறே கருணா குழுவும் செயற்படுகிறதே தவிர, கருணா குழுவுக்கு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் முகாம்களெதுவுமில்லையெனவும் அடித்துக் கூறினர்.
ஆனால், தீவுச்சேனையில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கருணா குழுவின் முகாமிருப்பதாகக் கண்காணிப்புக் குழுவினர் இந்த ஆணைக்குழு முன்னிலையில் சுட்டிக் காட்டியதன் மூலம், கருணா குழுவுக்கும் படையினருக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதைக் கண்காணிப்புக் குழு அம்பலப்படுத்தியுள்ளது. இதனை ஆணைக்குழு அம்பலப்படுத்துமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இதேநேரம், இந்த ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த இராணுவ அதிகாரிகளின் தகவல்களில் பல முரண்பாடுகளுமுள்ளன. குறிப்பாக, இராணுவ முகாம்களில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் பணியாற்றுவது குறித்து வெலிக்கந்தை பிரதேச இராணுவ அதிகாரிகள் இருவர் அளித்த சாட்சியங்களில் பெரும் முரண்பாடுகளுள்ளன.
சகல படை முகாம்களிலும் புலனாய்வுப் பிரிவினர் கடமையாற்றுவதாக, 231 ஆவது படையணித் தளபதி மேஜர் எச்.எம்.ஏ.ஹேரத் இங்கு கூறினார். ஆனால், இங்கு சாட்சியமளித்த, இப்பிரதேசத்திலுள்ள 212 ஆவது படைப் பிரிவின் 14 ஆவது தேசியப் பாதுகாப்புப் பிரிவு கட்டளை அதிகாரி மேஜர் எஸ்.பி.சுதர்மசிறி, இப்பிரதேசத்திலுள்ள எல்லா முகாம்களிலும் இராணுவ புலனாய்வுப் பிரிவு இல்லையென்றும் வெலிக்கந்தை, நாமல்கம முகாம்களில் மட்டுமே அவர்களிருப்பதாகக் கூறினார்.
கௌசல்யனின் கொலைக்குக் காரணமான தாக்குதலை கருணா குழுவே மேற்கொண்டதாக புலனாய்வுத் தகவல்கள் கூறுவதாக இவர் கூறிய போதும், இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் கண்டறியப்படவில்லையென்றும் ஆனால், ஆயுதக் குழுவொன்றே இதனை நடத்தியதாக மேஜர் ஹேரத் சாட்சியமளித்ததும் முரண்பட்டுள்ளன.
இவை குறித்தெல்லாம் இந்த ஆணைக்குழு கவனத்திலெடுக்குமா அல்லது வழமை போல் பத்தோடு பதினொன்றாக இந்த ஆணைக்குழுவின் முடிவும் அமைந்துவிடுமா என்ற கேள்வியும் எழுகிறது.
Thinakkural

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>