09-13-2003, 02:46 PM
தித்திக்குதே திரைப்படத்திற்கான வைரம்பாய்ந்த வரிகள் இவை
தாயாரும் அறியாமல்
ஊராரும் காணாமல்
மொட்டொன்று பட்டென்று மலரும்
என்னென்று தெரியாமல்
ஏதென்று புரியாமல்
பெண் நெஞ்சில் பேரச்சம் பரவும்
பயம்போக சீராட்டி
பாலூற்றி நீராட்டி
திருமேனி மருதாணி இடுக
உழுந்தாலே களிசெய்து
வெல்லம்தானிட்டு
நல்லெண்ணைதான் விட்டு தருக
பொன்னோடு சீர்கொண்டு வருக
இந்த புூவிற்கு புதுச்சேலை புனைக
இயற்கைதரும் புூப்போடு இன்னுமொரு புூப்பெய்தி
வண்ணமகள் குலம் வாழ்க வாழ்க
தாயாரும் அறியாமல்
ஊராரும் காணாமல்
மொட்டொன்று பட்டென்று மலரும்
என்னென்று தெரியாமல்
ஏதென்று புரியாமல்
பெண் நெஞ்சில் பேரச்சம் பரவும்
பயம்போக சீராட்டி
பாலூற்றி நீராட்டி
திருமேனி மருதாணி இடுக
உழுந்தாலே களிசெய்து
வெல்லம்தானிட்டு
நல்லெண்ணைதான் விட்டு தருக
பொன்னோடு சீர்கொண்டு வருக
இந்த புூவிற்கு புதுச்சேலை புனைக
இயற்கைதரும் புூப்போடு இன்னுமொரு புூப்பெய்தி
வண்ணமகள் குலம் வாழ்க வாழ்க
[b] ?

