09-13-2003, 02:31 PM
Kanani Wrote:இளைஞா படத்திலுள்ள நல்லவைகளையே மட்டும் விமர்சித்திருக்கிறாய்? எல்லாம் பார்க்கும் கோணத்தில்தான் இருக்கிறது...
ஆனால் பல இளசுகள் இப்படிப் பார்க்குமா என்பது கேள்விக்குறியே...அதனால்தான் நல்லதையே பார் நல்லதையே கேள் என்று சொல்வார்கள்...
பெரும்பாலும் எமது இளசுகள்...கெட்ட விடயங்களை விரைவில் உள்ளெடுக்கிறார்கள்....என்ன செய்யலாம்?
இனியவனே,
நாம் மட்டும் நல்லதையே பார்த்து நல்லதையே கேட்பதாக நம் மீது நம்பிக்கை கொள்ளும் போது, எமது இளசுகள்...கெட்ட விடயங்களை விரைவில் உள்ளெடுப்பார்கள்....என்று எப்படி சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது? நம்மைப் பார்த்து நமது பெற்றோர்களும் இப்படித்தானே சொன்னார்கள்? நாம் என்ன .........ஆகிவிட்டோம். கெட்டுவிட்டோம் என்றால்............அது நானும் நீயும்தான். வென்று விட்டோம் என்றால்.......அதுவும் நானும் நீயும்தான்..........இது தான் உருளும் உலகம்.
இன்றைய இளைஞர்களுக்கு தேவை நம்பிக்கை கலந்த அரவணைப்பும்,அன்பு கலந்த அறிவுரையும்தானே தவிர , அவர்களை நோக்கும் சந்தேகப் பார்வையல்ல. தயவுடன் நம்பிக்கையோடு பார்ப்போமே.........
நேற்றைய இளசுகள்தானே இன்றைய தலைவர்கள். நாளைய எமது தலைவர்களை நாமும் நம்புவோமே.
எமது இளசுகள் மீது நமக்கே நம்பிக்கை இல்லை என்றால், அடுத்தவன் எப்படி நம்புவான்?
"ஒவ்வொருத்தர்கிட்டயும் ஏதாவதொரு திறமை ஒளிஞ்சுக்கிட்டிருக்கும்.
அதை கண்டு பிடிச்சு உழைச்சா உலகமே திரும்பி பார்க்கிற அளவுக்கு பெரியவர்களாகலாம்"
(Boys சில் உள்ள ஒரு வசனம்)

