04-09-2005, 06:33 PM
இந்த ஆண்டு இறுதிக்குள் எனது திருமணம் நிச்சயம் நடக்கும் என்கிறார் நடிகர் பிரஷாந்த். கோலிவுட்டில் திருமண வயதை தாண்டிய ஒரே பேச்சிலர் நடிகர் பிரஷாந்த் தான். அவருக்கு பின்னால் நடிக்க வந்தவர்கள் கூட குழந்தை, குட்டி என செட்டிலாகி விட்டனர். இவர் மட்டும் தான் இன்னும் கட்டை பிரம்மச்சாரியாக உள்ளார்.
இதற்கிடையே ஏற்காட்டை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பிரஷாந்துக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் என்ன காரணத்தினாலோ அது தடைபட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு வேறு இடத்தில் பெண் பார்க்கிறார்களாம்.
பெண் பார்க்கும் படலம் மிக மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறதாம். இந்த வருடமே கெட்டி மேளம் கொட்டப் போகிறது பிரஷாந்துக்கு.
இதை அவரே நேற்று தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது கூறினார். இனி அவர் சொல்வதைக் கேட்போம்.
நான் அம்மா செல்லம். இதனால் எனக்கு பெண் பார்க்கும் பொறுப்பை அம்மாவிடமே விட்டுவிட்டேன். அவர் அப்பாவுடன் சேர்ந்து தீவிரமாக பெண் தேடிக்கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் எனது திருமணம் நிச்சயம் நடைபெறும்.
மணமகள் சினிமா துறையைச் சேர்ந்தவராக இருக்க நிச்சயமாக வாய்ப்பில்லை.
என்னையும் நடிகை உமாவையும் இணைத்து கதை கட்டி விட்டார்கள். அதில் சிறிதும் உண்மை கிடையாது. அடைக்கலம் படத்தில் உமா எனது தங்கையாக நடித்தார். ஜோடியாக நடிப்பவரைப் பற்றி கிசுகிசு வந்தால் கூட பரவாயில்லை.
அந்தப் படத்தில் என்னுடன் தங்கையாக நடித்தவரை பற்றி கிசுகிசு வந்தது தான் எனக்கு வருத்தம் என்று நிஜமாகவே வருத்தப்பட்ட பிரஷாந்தை நாம் சிறிது தேற்றி விட்டு, என்ன ஆச்சு உங்களுக்கு, சமீப காலமாக படங்கள் எதுவுமே சரியாக கிளிக் ஆகவில்லையே என்று ஒரு கொக்கியைப் போட்டோம்.
வெற்றியும், தோல்வியும் இறைவன் கையில் தான் உள்ளது.(புல்லரிக்கிறதுப்பா) நான் நடித்த படங்களில் என் பங்கை சிறப்பாக செய்துள்ளேன். பல புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்தேன்.
நண்பர்களுக்காக சில படங்களை விட்டுக் கொடுத்தேன். இனி என்னுடைய படங்களின் இயக்குநர் தேர்விலும், கதையிலும் மிக கவனமாக இருப்பேன்(கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா?) என்ற பிரஷாந்த், எப்படியும் விரைவில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கிறேனா இல்லையா பாருங்கள் என்று சவால் விட்டார்.
அடப்பாவமே இவருமா?
நன்றி தற்ஸ் தமிழ்

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>