09-13-2003, 09:27 AM
முன்பு; வந்தவர்களால் தான் ஏகப்பட்ட பிரச்சனை என்றதும் என்னமாதிரி கோவம் வருகுது. பழுத்த பழம் வெம்பல் இல்லை.அதென்ன பிறகு உங்கை எண்ட கதை அங்கை தானே நீங்களும் இருக்கிறியள். நடந்தா மட்டும் காணாது உங்கடை பிள்ளையளை கவனமா பாருங்கோ.பலர் கோட்டை விட்டிடுவினம் மற்றவையை பற்றி கதைச்சு கதைச்சு தங்கடை பிள்ளையள் அதை விட நடுரோட்டிலை நிக்கிற காட்சி. நாங்கள் அறியாததா? பிள்ளைகள் பாவம் என்ன செய்வார்கள் பொற்றோரின் சரியான வழிநடத்தல் இன்மை தான் இவற்றுக்கெல்லாம் காரணம். அவர்களுக்கான சிந்தனைகளை யாரும் மதிப்பது கிடையாது. அவர்களின் பால் எழுகின்ற கேள்விகளிற்கு தக்க பதிலை பலர் கொடுப்பதில்லை. அவர்களிற்கான பொழுதுபோக்கை பலர்; திட்டமிடுவதுமில்லை. பொழுதை எப்படி போக்குவது என புரியாது சிதைந்து விடுகிறார்கள். யோகா கராத்தே இரண்டுமே மனதை ஒரு நிலைப்படுத்தும் நெறி கொண்டவை. அதேபோல் வாத்தியக்கருவிகள் பிள்ளைகளின் மனதை மகிழச்செய்பவை. மனபாரங்களை இறக்கி வைக்க உதவுபவை. உடற்பயிற்சி புத்துணர்வை தருபவை இசைக்கருவிகள் அதாவது விரல்களால் மீட்டப்படுபவை மூழையை பலமடையச்செய்வதாகவும் வலுவடையச்செய்வதாகவும் பல உணர்திறன்களை கூட்டுபனவாகவும் ஞாபக சக்கியை அதிகப்படுத்துவனவாகவும் இருப்பதாக கூறப்படகிறது. பாடசாலை முடிய அவர்களின் பொழுதுபோக்கை இத்தகைய வழிகளில் ஈடுபடுத்துவோமேயானால் அனேகமாக தீய வழிகளில் இறங்கவதை ஓரளவுக்கேனும் குறைத்துக்கொள்ளலாம்.
எத்தனை பிள்ளைகளை லைபிறறிக்கு கூட்டிச்சென்று வாசிப்பு பழக்கத்தை பெற்றோர் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள் என பாற்தால் அரிதாகவே காணப்படுகிறது.இவற்ரை எல்லாம் தாண்டி எத்தனையோ சிறார்கள் நல் ஒழுக்கத்தோடு வாழ்வதை பாக்க கூடியதாகத்தான் உள்ளது .ஒரு பிள்ளை தானாக ஒரு போதுமே கெட்டொழிந்து போக ஆசைகொள்வதில்லை. பெற்ரோரின் வழிநடத்தலும் அன்புப்பரிமாற்றமும் அரவணைப்பும் அதிபங்கு வகிக்கிறது எனலாம்.

[b]Nalayiny Thamaraichselvan