04-09-2005, 02:45 AM
<b>தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக நேரடி ஒளிபரப்பு... 'கப்ஸா உங்கள் சாய்ஸ்'!</b>
<i>இதோ நிகழ்ச்சி ஆரம்பம்...</i>
<img src='http://img163.exs.cx/img163/3539/p1810oz.jpg' border='0' alt='user posted image'>
<b>கலைஞர்:</b> ''ஹலோ! ஹாய்... வணக்கம்... வெல்கம்! உடன்பிறப்பே உனக்கு என் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! 'கண்ணம்மா' பார்த்து ரசித்திருப்பாய், 'மண்ணின் மைந்தன்' கண்டு மலைத்திருப்பாய். உன்னை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடிக்க இதோ இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்தவும் வந்துவிட்டேன். நானும் சகோதரி ஜெயலலிதாவும் சேர்ந்து தேனினும் இனிய பாடல்களை உன் காதுகளில் ஊற்றப்போகிறோம். தமிழினமே தயாரா?''
<b>ஜெயலலிதா (குறுக்கிட்டு): </b>''நமஸ்தே ஃப்ரம் இட்ஸ் மீ ஜெயலலிதா! எங்களுக்கு ஓட்டுப் போட்ட உங்களுக்கு பாட்டுப் போடுறோம்... ஓகே, நிகழ்ச்சிக்குப் போலாமா? முதல் 'காலர்' யாருனு பார்க்கலாம். ஹலோ டூப் டி.வி... கப்ஸா உங்கள் சாய்ஸ். யார் பேசறீங்க?''
<b>எதிர்முனை:</b> ''சம்போ... சிவசம்போ. நான் ரஜினி பேசறேன்ங்க. அஷ்ட லட்சுமியும் உங்ககிட்டே இருக்கு. அதனால நீங்க தைரிய லட்சுமி. கலைக் குடும்பத்துக்கு இஷ்ட லட்சுமி. ஐ மீன் மதர்!''
<b>கலைஞர் (கடுப்பாகி):</b> ''என்ன ரஜினி தம்பி. பக்கத்தில் நானும் இருக்கேன். என்னை ஞாபகமிருக்கா?''
<b>ரஜினி (ஜெர்க்காகி):</b> ''அய்யா, நீங்க பெரியவங்க. நாங்க சின்னவங்க. உங்க ஆசி வேணும். அப்டி இப்டினு கைடு பண்ணணும். சந்திரமுகி பாருங்கய்யா, உஷ்ஷ்... சிவ சிவா!''
<b>ஜெயலலிதா:</b> ''ஓகே ரஜினி! உங்க கிட்டே ஒரு கேள்வி. நதி நீர் இணைப்புன்னா என்னனு ஞாபகம் இருக்கா?''
<b>ரஜினி (பதற்றமாகி):</b> ''வாட்டர் பிராப்ளம்... வாட் பிராப்ளம்..? சந்திரமுகி ரிலீஸ் சம்போ சிவசம்போ! எனக்கு என் மருமகன் தனுஷ் நடிச்ச 'தேவதையைக் கண்டேன்' படத்திலே இருந்து ஒரு பாட்டு போடுங்க! இந்தப்பாட்டை தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா அரசியல் தலைவருங்களுக்கும் டெடிகேட் பண்றேன்!''
<b>ஜெயலலிதா:</b> ''ஓ '' என்றதும் உங்க அப்பாவைப் பார்த்தாலும் பயம் பாட்டு அதே டியூனில் வரிகள் மட்டும் மாறி வருகிறது
<i>'போயஸ் அம்மாவைப் பார்த்தாலும் பயம்
கலைஞர் அய்யாவைப் பார்த்தாலும் பயம்
ராமதாஸ் அண்ணனைப் பார்த்தாலும் பயம்
எனக்கு நல்லா ஓடுமா புதுப் படம்?' </i>
<b>கலைஞர்:</b> ''சூப்பர் தம்பிக்காகப் போட்ட அந்த சூப்பர் பாடலை எல்லோரும்கேட்டீங்க...'' என்று சொல்லும்போதே, அடுத்த அழைப்பாளர்...
<b>கலைஞர்:</b> ''வணக்கம். யார் பேசுவது..?''
<b>எதிர்முனை:</b> ''நான் ஜெயலட்சுமி பேசறேன். அன்னிக்கு வீட்ல நான் டி.வி. பார்த்துட்டிருந்தேனா... இளங்கோவன் போன் பண்ணி மெரட்டுனாரு. அதுக்கடுத்தது ஏட்டு கண்ணன் போன் பண்ணி வீட்டுக்கு வரவாÕனு கேட்டாரு. வேண்டாம்னு சொல்லி வெச்சதும் மலைச்சாமிகிட்டே இருந்து போனு. அந்த நேரம் பார்த்து, வக்கீல் அழகர்சாமி உள்ளே நுழைஞ்சான். ஆங்... இங்கே தொடரும்...''
<b>கலைஞர்:</b> ''ஐயகோ... போதும் ஜெயலட்சுமி, போதும். உங்களுக்காக காற்றிலே வருகிறது 'காதல்'படத்தில் இருந்து ஒரு பாடல்.இதை கல்லீரல் கெட்டுப்போன காவல் துறைக்கு டெடிகேட் செய்கிறோம்'' என்றதும் பாடல் ஒலிக்கிறது.
<i>'தொட்டுத் தொட்டு என்னை
எம்.எல்.எம். களிமண்ணை
சி.பி.ஐ\யில் யார் சேர்த்ததோ?
தொட்டுத் தொட்டு என்னை
பப்ளிமாஸ் பெண்ணை
பாப்புலராய் யார் செய்ததோ?'</i>
<b>ஜெயலலிதா:</b> ''ஜெயலட்சுமிக்காக ஒரு கருத்துள்ள பாட்டைக் கேட்டோம். அடுத்ததா லைன்ல யார்னு பார்ப்போம்'' சொல்லும் போதே போன் அழைக்கிறது. எடுத்தால்,
<b>எதிர்முனை:</b> ''மதுரையிலிருந்து விஜயகாந்த். கூடிய சீக்கிரமே கோட்டையிலிருந்து விஜயகாந்த்'' என்ற குரல் கேட்கிறது.
<b>ஜெ (மெதுவாக):</b> ''வி.சி.டி\யை தடை பண்ணினப்பவே இந்த விஜயகாந்த்தையும் தடை பண்ணி இருக்கணும். (சத்தமாக) ஹலோ விஜயகாந்த்... வெல்கம் டு அரசியல். கூடிய சீக்கிரமே நீங்க 'பெரிய இடத்துக்குப்' போகணும். அதுக்கு என்னால முடிஞ்ச உதவியைக் கண்டிப்பாசெய்வேன்.''
<b>விஜயகாந்த்:</b> ''தமிளன்னு சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடானு நான் சொன்னா நெட்டுக்குத்தா நிக்கறதுக்கு என் ரசிகருங்க 27 லட்சம் பேர் இருக்காங்க. அதுல ஆம்பளைங்க 15 லட்சத்து 19 ஆயிரம், பொம்பளைங்க 9 லட்சத்து 8 ஆயிரம் பேருங்க, குழந்தைங்க...''
<b>ஜெ:</b> ''ஹலோ மிஸ்டர் இன்டர்நெட்ல ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைக்கிறதுக்கு பொதுத் தேர்தல் ஒண்ணும் மீனாட்சி அம்மன் கோயில் இல்லை. ஓகே, ஓகே... உங்களுக்காக 'ஆட்டோகிராஃப்' படத்திலயிருந்து ஒரு பாட்டு வருது. இந்தப் பாட்டை உங்க டெபாஸிட்டுக்கு டெடிகேட் பண்றோம்'' என்றதும் பாடல் வருகிறது,
<i>'மனசுக்குள்ளே அரசியல் ஆசை
வந்துச்சோ வந்துச்சோ...
மதுரையிலே மாநாடு நடத்தச்
சொல்லுச்சோ சொல்லுச்சோ
கரை வேட்டி கட்ட ஆசை
வந்துச்சோ வந்துச்சோ
கட்சி ஆரம்பிக்க பட்சி
சொல்லுச்சோ சொல்லுச்சோ
அட போலீஸ் வேஷம்
போரடிச்சி சி.எம். வேஷம் கட்டச்
சொல்லி செவந்த கண்ணில்
கனவு வந்துச்சோ'' </i>
பாடல் முடியும்போதே, அடுத்த அழைப்பாளர் லைனில்!
<b>ஜெ:</b> ''ஹலோ திஸ் இஸ் டூப் டி.வி... கப்ஸா யுவர் சாய்ஸ்...''
''அம்முனையில் அன்பு அண்ணன் கலைஞர். இம்முனையில் தங்கத் தம்பி தைலாபுரம் தம்பி ராமதாஸ்'' என்கிறது எதிர்முனை.
<b>கலைஞர்:</b> ''தம்பீ... என் அன்புத் தும்பீ. மொழிப் போருக்கு வாளோடு புறப்பட்டுவிட்டாய். இதோ உங்களுக்காக 'அட்டகாசம்' படத்திலிருந்து அட்டகாசமான பாடல் வருகிறது. இதை உங்கள் சார்பாக கமலுக்கும் ரஜினிக்கும் டெடிகேட் பண்ணுகிறோம்.''
<i>''உனக்கென்ன உனக்கென்ன
நான் பேர் மாத்தச் சொன்னால் உனக்கென்ன
நான் படப்பொட்டி தூக்கினால் உனக்கென்ன
தம்பி திருமாவோடு சேர்ந்தால் உனக்கென்ன
அன்புமணியை மந்திரி ஆக்கினால் உனக்கென்ன
உனக்கென்ன உனக்கென்ன''</i>
<b>ஜெ:</b> ''ஆமா உனக்கென்ன...உனக்கென்ன? என்னைப் பார்த்து அமைச்சர்கள் ஆடினா உனக்கென்ன? நான் காம்பியர் ஆனா உனக்கென்னன்னுட்டு? ஓகே இப்ப நெக்ஸ்ட் காலர் யாருனு பார்க்கலாம்...''
போன் சிணுங்க... எடுத்தால் ஒரு சோகமான குரல், ''யம்மா யம்மா... நான்தாம்மா சுதாகரன் பேசறேன்'' என்கிறது.
<b>ஜெ:</b> ''சுதாகரனா... யாரு, கிழக்கே போகும் ரயில் படத்தில் 'மாஞ்சோலைக் கிளிதானோ''னு பாடுவாரே அந்த சுதாகரனா?''
<b>எதிர்முனை (அலறி):</b> ''அய்யய்யோ! யம்மா, நான் மாஜி வளர்ப்பு மகன் சுதாகரன். கோர்ட்டு கேஸ§னுஅலைஞ்சி கால் பழுத்துருச்சும்மா... ம்ம்ம்...'' என அழ ஆரம்பிக்கிறார்.
<b>கலைஞர்:</b> ''கலங்காதே தம்பீ! உனக்காக ஒரு சொத்துப் பாட்டு ச்சீ குத்துப் பாட்டு. இது திருப்பாச்சி ஸ்பெஷல்!'' என்றதும் பாடல் ஆரம்பிக் கிறது.
<i>'வெள்ளசொள்ள கோட்டு போட்டு
நக நட்டு மாட்டிக்கிட்டு
குவி சொத்தைய்யா
ஸ்டேட்டுவிட்டு ஸ்டேட்டுவிட்டு
கோர்ட்டுவிட்டு கோர்ட்டுவிட்டு
அலை முத்தைய்யா
வாடா... வாடா... வாடா... வாடா...
வளர்த்த கடாவே....
போடா... போடா.... போடா.... போடா...
திரும்ப வராதே...' </i>
<b>கலைஞர்:</b> ''அடடா! தமிழர் புத்தாண்டும் அதுவுமாக மிகவும் பரபரப்பான பாட்டு நிகழ்ச்சியை உங்களுக்காக வழங்கிக்கொண்டு இருப்பவர்கள்...''
<b>ஜெ:</b> ''அண்ணன் கலைஞர்...''
<b>கலைஞர்:</b> ''தங்கச்சி ஜெயலலிதா... இதோ அடுத்த அழைப்பாளர்...''
''யாரடா பேசுவது தம்பி''
<b>எதிர்முனை:</b> ''பேசறது விஜய டி.ஆரு, அதை கேட்க நீ யாரு? ஸ்டாலினுக்குதான் அங்கே பவரு, மத்தவங்க எல்லாம் நகரு, டெலிபோன்ல போடு சாங்கு, சிம்புவுக்கு சேருது சூப்பர் கேங்கு, ஏய்... ஊய்...''
அதைக் கேட்டு போனை சைலண்டாக ஜெ கையில் கொடுக்கிறார் கலைஞர்.
<b>ஜெ:</b> ''உங்ககிட்டே ஒரு கொஸ்டின். சமீபத்துல கட்சி ஆரம்பிக்கிறேன்னு சொன்ன நடிகரு யாரு?''
<b>விஜய.டி.ஆர்:</b> ''சொல்றேம்மா... வெவரமா சொல்றேன். அவரு சங்கத்துக்குதான் கேப்டன். நான் சங்கத்தமிழுக்கே டாப் டென். அரசியல் இல்லை வெங்காய பஜ்ஜி, எல்லாரும் ஆரம்பிக்க முடியாது புதுக் கட்சி...''
<b>ஜெ: </b>''ஓகே... ஓகே... உங்களுக்காக ஒரு சூப்பரான பாட்டு.''
<i>'நடிச்சி நடிச்சி வந்தான் வீராசாமிடோய்
அடிச்சி அடிச்சி வந்தான் அடுக்கு மொழிடோய்
சிம்புவுக்கே டஃப் ஃபைட்டைக் குடுத்துப்புட்டாண்டோய்
அரசியல்ல அடுத்து என்ன முழிச்சிப்புட்டாண்டோய்'</i>
<b>கலைஞர்:</b> ''இந்த இனிய தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சியிலே உங்களையெல்லாம் சந்தித்து சிந்தித்து பல பாடல்களைப் போட்டதிலே...
அப்போது திரும்பவும் போன் அடிக்க எடுத்தால் மீண்டும் விஜய டி.ஆர்,
''அருவாள புடிக்கணும் சாணை, பாதியிலேயே கட் பண்ணிட்டீங்க போனை, இது திட்டமிட்ட சதி, விளையாடுது விதி, கலைஞரு அய்யா, ஜெயா அம்மா, விடமாட்டேன் சும்மா...'' விஜய டி.ஆர் ஆக்ரோஷமாகப் பேசும்போதே நிகழ்ச்சி நிறைவுபெறுகிறது.
நன்றி விகடன்.

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>