09-12-2003, 10:57 PM
நன்றி செய்தி புதினம்.
இயக்குனர் இமயம் பாரதிராஜா கனடாவுக்கு வருகை தந்துள்ளார்
சங்கீத் வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2003, 18:21 ஈழம்
இவ்வார இறுதியில் ரொறன்ரோவில் இடம்பெறவுள்ள விழாவொன்றில் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளும் முகமாக, இயக்குனர் இமயம் பாரதிராஜா கனடாவுக்கு வருகை தந்துள்ளார்.
நேற்று முன்தினம் ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தை வந்தடைந்த இயக்குனர், அங்கிருந்து பெருந்திரளான ரசிகர்களிடையே விழா அமைப்பாளர்களால் அழைத்துச் செல்லப்பட்டார்.
நேற்று மாலை ரொறன்ரோவில் இயங்கும் வானொலியொன்றுக்குச் சிறப்புப் பேட்டியளித்த பாரதிராஜா, நேயர்களின் அன்பான பாராட்டுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களது கேள்விகளுக்கும் பதிலளித்தார். அவரோடு விழா அமைப்பாளர்களும், கனடிய இயக்குனர்கள் எஸ். மதிவாசன், கே. சிறீமுருகன் போன்றவர்களும் கலந்து கொண்டார்கள்.
இவரது தயாரிப்பில், இவரது மகனைக் கதாநாயகனாகவும் ஈழத்துக் கலைஞர்கள் சிலரை நடிகர்களாகவும் இணைத்து, ஈழப்பிரச்சனை பற்றிய ஒரு யதார்த்தமான திரைப்படத்தைத் தயாரித்து வழங்க வேண்டும் என்று நேயர்கள் கேட்டுக்கொண்டபோது, பாரதிராஜா உணர்ச்சிவயப்பட்ட நிலையில், இதை அவசியம் செய்வதாக ஒத்துக்கொண்டார். ஈழத் தமிழர்களின் இதயங்களில் தனக்கு நிலையான இடம் கிடைத்துள்ளமை கண்டு தான் நெகிழ்ச்சியடைவதாகவும், ஈழத்தமிழர்களின் நேர்மையான அன்புக்கு தான் என்றும் நன்றியுள்ளவன் என்றும் பாரதிராஜா மேலும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும், தமிழ் கலை கலாச்சாரம் பண்பாடு விழுமியங்களை நெறிப்படுத்தி மீண்டும் தமிழ் வாசனை வீசும் தமிழ்நாட்டைக் கட்டியெழுப்ப, தமிழ்நாட்டின் முதலமைச்சராக நீங்கள் வரவேண்டும் என்று நேயர்கள் பாரதிராஜாவிடன் கேட்டுக்கொண்டார்கள். அப்படியான எண்ணமெதுவும் தற்போது தன்னிடம் இல்லை என்று சிரித்துக்கொண்டே பதில் சொன்னார் இயக்குனர்.
இன்று மாலை ரொறன்ரோவில் இயங்கும் தமிழ் தொலைக்காட்சிக்குப் பேட்டி வழங்கவுள்ள பாரதிராஜா, நாளை சனிக்கிழமை மாலை ரொறன்ரோவின் நடைபெறவுள்ள சுகந்தமாலை என்னும் விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.