09-12-2003, 09:46 PM
திண்ணையில் அக்கினிபுத்திரனிற்கு பதில் கடிதம்.
திரு. அக்னி புத்திரன் அவர்களுக்கு, :?
தங்களின் 'பாய்ஸ்' விமர்சனக் கட்டுறை பார்த்தேன். நான் இன்னும் படம் பார்க்கவில்லை. தங்களின் கட்டுறையை படித்தபோது எனது கல்லூரி நினைவுகள் வந்து போயின. தாங்கள் குறிப்பிட்டது போன்று படத்தில் இச்சம்பவங்கள் சித்தரிக்கப்பட்டிருப்பின், எமது வாழ்வின் குறிப்பிடத்தக்க ஒரு காலகட்டத்தை இயக்குனர் சங்கர் பதிவு செய்திருக்கிறார் என்றே நம்புகிறேன், மகிழ்கிறேன்.
தாங்கள் குறிப்பிட்டிருந்தது போல் 'அந்தக்காலத்தில்' இவை இலை மறை காய் மறையாக வைக்கப்படவில்லை. மாறாக சமூகத்திலும், பல்வேறு குழுக்களிலும் இத்தகு விஷயங்கள் தாராளமாக பரிமாரிக்கொள்ளப்பட்டன. இவ்வளவு ஏன், எங்கள் கோவில்களில் எம் முன்னோர் இத்தகு விஷயங்களை பாமரர்களுக்கு சிற்பங்கள் வாயிலாக வடித்து எம் மனதில் இருந்த 'sex related guilt conscious' ஐ நீக்க முயன்றனர்.
சமீப காலமாக,இவ்விஷயங்கள் இலை மறை காய் மறையாக வைக்கப்பட்டதன் விளைவு, இன்று தமிழகம் 'AIDS' நோயின் தலைமை இடமாக திகழ்கிறது ! இதுதான் நீங்கள் கட்டிக் காத்திட நினைக்கும் 'இலைமறை காய்மறை' யின் மகிமை!!
நான், என்னளவில் கண்டிருக்கிறேன், என் நண்பர்கள் விலைமாதுக்களிடம் விலை பேசி, பணம் பகிர்ந்து , வரிசை வைத்து புணர்ந்து மகிழ்வதை ( மகிழ்வது மட்டுமல்லாது, சற்றே வித்தியாசமான 'expressions of guilt' ஐயும் கண்டதுண்டு - தற்போது ஒரு ஆன்மீக-தேசீய கட்சியில் இருக்கும் தமிழ்கத்தில் பிரபலமான நண்பன் ஒருவன் பக்கத்தறையில் புணர்ந்து முடிந்ததும் ஓவென்று கதறி அழுதான் என்று மற்றொரு நண்பன் ஒரு முறை கூறினான்).
அது போல, கேள்விப்பட்டிருக்கிறேன், ஒரு விலைமாதுவுக்கு இரு குழுக்கள் சண்டையிட்டுக் கொண்டதை (வென்ற குழு மாதுவை இட்டுச்சென்றதாம் - சங்கத்தமிழர்கள் அல்லவா??). விலைமாதென்று வீடு திரும்பும் மகளிரை தொந்தரவு செய்த நிகழ்வுகள் அனேகமாக அனைத்து தமிழ் நாட்டு இல்லங்களிலும் ஒரு முறையாவது விவாதிக்கப்பட்டிருக்கும், வேதனையை உண்டாக்கியிருக்கும்.
இவ்வாறு நடைமுறைத் தமிழகம் இருக்கும்போது (we remain the most sexually suppressed society in India - in my view), இவற்றை வெளிக்கொணர்ந்த ஒரு மகத்தான இயக்குனரை பணத்திற்க்காக இவற்றை காட்டியுள்ளார் என்று விமர்சிப்பது நியாயம் அல்ல என்பது எனது கருத்து. Let these things be brought to the notice of all , let there be debates into the forbidden, suppressed areas of our society. புழக்கடையில் முடை நாற்றம் என்றால், ஊதுபத்தி ஏற்றி அதை மூடிமறைக்கும் மனப்பாங்கு இனியாவது மாறட்டும்.
நண்றி. வணக்கம்.
மும்முடிச்சோழன்

[b]Nalayiny Thamaraichselvan