09-12-2003, 07:22 PM
பாட்டியின் கெட்டித்தனம் அபாரம். கூட்டிப்பெருக்கி பிரிச்சுக் கழிச்சு சரியான விடையை தேடி கண்டு பிடிச்சு கொண்டு வந்து நிறுவி இருக்கிறியள். பெண்ணியத்தின் சிறப்பு தெரியாமல் பழிசுமத்தல்கள் இவை வேணுமென்று ஒரு சில ஆதிக்கமனப்பான்மை உள்ளவர்களால் உருவாக்கப்படும் காகதாலியநியாப்போலிகள். இவர்கள் கூக்குரல் எழுப்பினால் போல் பெண்கள் தம் நிலை உணராமலா போய் விடப்போகிறார்கள் தங்கள் திறமைகளை அபார பலத்தை கூக்குரல் எழுப்புபவர்களால் ஒன்றுமே செய்து விட முடியாது. புறக்குடத்தின் மேல் வாற்த நீர் போன்றது. பெண்ணியத்தை தப்பாக விளங்கிக்கொண்டு புதிர்போடுபவர்களை நாம் ஒன்றுமே செய்து விடமுடியாத. பெண்ணியம் என்பது அத்தனை எமது சமூக விழுமியங்களோடும் ஒரு பெண் தனக்கான இருப்பை பெருக்கி வளாந்து முன்னேறுவதே. அவளின் திறமையை எந்த காரணம் கொண்டும் மழுங்கடிக்க முடியாது. அவளுக்கான சிந்தனைக்கருத்துக்களை உள்வாங்க வேண்டியவர்களாக இந்த ஆதிக்க மனப்பான்மை உடையோர் திகழவேண்டும். தாம் சொல்லும் மருத்துவாPதியான பரப்புரைகள் மரபணுhPதியான பரப்புரைகள் உடற்பலம் தொடர்பான தேவையற்ற பரப்புரைகள் யாவற்ரையும் புறந்தள்ளி முன்னேற வேண்டியவர்களாக ஒவ்வொரு பெண்ணும் இருக்கிறாள். பெண்கள் தொடர்பான மருத்துவ உடற்பல ஆய்வுகளையே பொய்யாக்கி மிளிர்கிறார்கள் எமது தேசத்து பெண்கள்.
[b]Nalayiny Thamaraichselvan

