Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
NTT வன்னியிலிருந்து ஐரோப்பாவுக்கு புதிய தொலைக்காட்சி
#16
அரசின் ஊதகமும் புலிகளின் ஊடகமும்

விடுதலைப்புலிகள் தமது புலனாய்வு யுத்தத்தால் உலகையே பிரமிக்கவைத்த அதே வீச்சில் இன்று ஆரம்பித்திருக்கும் அதன் இன்னொரு அத்தியாயம் தென்னிலங்கை அரசியல் வட்டாரத்தை கிலிகொள்ளச் செய்திருக்கிறது. அதாவது சர்வதேச அளவிலும் பிரசாரம் செய்யக்கூடிய வகையில் அவர்கள் ஆரம்பித்திருக்கும் ஈழத்தி;ன் தேசிய தொலைக்காட்சி பலரது கண்களை குத்திக்குடைந்துவிட்டது.

தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட மாத்திரத்திலேயே புற்றீசல்கள் போல கண்டன அறிக்கைகளும் பயங்கரவாத அமைப்பொன்றுக்கு இவ்வளவு சுதந்திரத்தை வழங்குவதா என்ற கோஷங்களும் தென்னிலங்கையில் எழுந்து பறக்கத் தொடங்கிவிட்டன.

புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் யுத்தத்துக்கு தமது புலனாய்வுச்செயற்பாட்டை எவ்வளவுக்கு வலுப்படுத்தி அதற்கு செயலூக்கம் கொடுத்தார்களோ அதே விகிதாசாரத்தில் தமது போராட்டம் பற்றிய உண்மை நிலையை ஈழத்துக்கு அப்பால் தென்னிலங்கை மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் எடுத்துக்கூறுவது தொடர்பான அரசியல் பிரசார வேலைத்திட்டத்தை நிதானமாக முன்னெடுத்து வருகிறார்கள். ஒரு கெரில்லா அமைப்பு என்ற பரிணாமத்திலிருந்து ஒரு அரசாங்கமாக - சுதந்திரப்போராட்ட இயக்கமாக - மக்கள் தேர்ந்த அமைப்பாக உருவெடுத்துள்ள புலிகள் அமைப்பு இன்று தமது கடப்பாடுகளை செவ்வனே நிறைவேற்றி வருகிறார்கள்.

அந்த வகையில் இதுவரை நிறைவுபெறாத தமது போராட்டம் பற்றியும் தமது மக்கள் தொடர்ந்து அனுபவிக்கும் அல்லல்கள் தொடர்பாகவும் சர்வதேச சமூகத்துக்கும் தென்னிலங்கை மக்களுக்கும் எடுத்துக்கூற பல்வேறு வகையிலும் பிரசார வேலைத்திட்டங்களை புலிகள் முன்னெடுத்து வருகிறார்கள்.

1) தேதுன்ன என்ற சிங்களப் பத்திரிகை ஆரம்பித்து அதில் தமிழ் மக்களினதும் புலிகளினதும் போராட்டம், இலட்சியம் அவற்றுக்கு சிங்கள அரசுகளால் மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகள் என்பவற்றை விளக்கி சிங்கள் மக்கள் மத்தியில் ஒர் பிரசார உத்தியை கையாண்டனர்.

2) புலிகளது அரசியல் கொள்கைகள் தேர்தல் விஞ்ஞாபனமாக மக்கள் முன்வைத்து சிறீலங்கா நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்வர்களைக்கொண்டு கொழும்பில் வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகள் ஆகியோருக்கு தமிழ் மக்கள் பிரச்சினையில் சர்வதேச சமூகம் ஆற்றவேண்டிய பங்கு, பணி என்ன என்பவை குறித்து விளக்கமளித்தது. அதற்காக தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஐவர் கொண்ட அரசியல் விவகாரக்குழு புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனால் நியமிக்கப்பட்டது.

3) புலிகளி;ன் சில முக்கியஸ்தர்கள் நேரடியாக கொழும்புக்கு வந்தே சில முக்கிய இராஜதந்திரிகளுடன் பேச்சு நடத்தி தமது கொள்கை விளக்கங்களை மேற்கொள்கின்றனர்.

4) புலிகளின் அரசியல் விவகாரக்குழுவினர் மாதமொரு தடவை சுழற்சி முறையில் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை நேரடியாகச் சந்தித்தும் அங்கு இராஜதந்திரிகள் மற்றும் பன்னாட்டு அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்தும் தமது போராட்டத்தின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளித்து வருகின்றனர்.

5) இடையிடையே கொழும்பிலுள்ள சகல பத்திரிகையாளர்களையும் வன்னிக்கு அழைத்து முக்கிய விடங்கள் குறித்த தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியும் சிலவேளைகளில் அறிக்கைகள் வாயிலான அறிவிப்புகளாகவும் தமது கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர்.

இந்த உத்திகளால் இன்று புலிகள் தொடர்பான சர்வதேச நிலைப்பாடு சிறீலங்கா அரசே எதிபாராத அளவுக்கு மாற்றம கண்டுவருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. கனடாவில் புலிகளை தடைசெய்ய மேற்கொள்ளப்பட்ட பகீரதப்பிரயத்தனம் புஸ்வாணமாக மாறியமை இதற்கொரு உதாரணமாகக்கொள்ளலாம்.

இந்த ஒரு பிரசார படிமுறைகளின் அங்கம்தான் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள ஈழத் தேசிய தொலைக்காட்சி. இதன் ஊடாக புலிகள் உடனுக்குடன் தமது செய்திகளை மக்களுக்கு தெரியப்படுத்துவர்.
ஆனால் இந்த பிரசார இயந்திரத்தின் காத்திரத்தை ஊகித்துக்கொண்ட சிறீலங்கா அரசும் அதன் அடிவருடிகளும் புலிகளின் உண்மையான நோக்கத்தை பிழையான வழியில் பிரசாரப்படுத்துவதில் முழுமூச்சாக உள்ளனர்.

அதாவது இனி உண்மைகளை மூடிமறைத்து தென்னிலங்கை மக்களுக்கு கப்ஸா அடிக்கும் அரசின் பாச்சா பலிக்காது.
புலிகளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக இலங்கைக்கு வந்த ஐ.நா. செயலாளர் நாயகம் கொபி அனானையே வன்னி செல்ல அனுமதிக்காத சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, புலிகளின் புதிய முயற்சியால் சர்வதேச சமூகத்தின் மத்தியில் மேலும் மாற்றமடையப்போகும் புலிகள் தொடர்பான நிலைப்பாடு குறித்தும் தான் இவ்வளவு காலமும் ஆஸ்தான வித்தகர் கதிர்காமரை அனுப்பி மேற்கொண்ட பிரசாரமெல்லாம் விழலுக்கு இறைத் நீராகிவிடுமோ என்பது குறித்தும் கலங்கிவிட்டார். உடனே தனக்கு அருகிலேயே வைத்திருக்கும் அரசியல் அடியாட்களான ஜே.வி.பியை கிளறிவிட்டுவிட்டு தான் சத்தமில்லாமல் இருக்கிறார்.

எந்த ஒரு போராட்ட அமைப்பினது ஊடகத்தையும் அதற்கு எதிரான அரசு வளரவிட்டதாக சரித்திரம் இல்லை. ஏனெனில் யுத்தத்தில் படையணி ஒட்டுமொத்தமாக பாவிக்கும் ஆயுதங்களுக்கு சரிசமமான வலுக்கொண்டது ஒரு ஊடகம். அதனால்தான் ஆப்கானுக்குள் தனது ஆக்கிரமிப்பு கால்களை எடுத்து வைக்கமுன்னர் அமெரிக்கா செய்த முதல் வேலை பின்லேடனின் பேட்டிகள் மற்றும் அமெரிக்காவின் அட்டூழியங்களையும் பட்டவர்த்தனமாக காண்பித்துவந்த 'அல் ஜஸீரா" தொலைக்காட்சியை முதலில் தாக்கியது.
ஈராக்கில் அமெரிக்கா போரை ஆரம்பித்த பின்னரும் சதாமின் காட்சிகளை ஒளிபரப்பிவந்த பக்தாத் தொலைக்காட்சிச் சேவையை குண்டுவீசி தகர்த்தது. சிறீலங்கா அரசும் சும்மா நின்று விடவில்லை.
யுத்தகாலத்தல் யாழ். குடாநாட்டில் அரசு குண்டுவீச்சுகளால் கொன்றொழிக்கப்பட்ட மக்களின் படங்களையும் செய்திகளையும் அப்போது வெளியிட்டுவந்த பத்திரிகை ~உதயன். அதன் செய்திகளை அப்போது தூக்கிப்பிடித்த மனித உரிமை அமைப்புக்களும் பன்னாட்டு சமூகமும் சிறீலங்கா அரசை கடிந்தன.
உடனே சிறீலங்கா அரசு உதயன் பத்திரிகையை தடைசெய்தது. அதேபோல அரசின் அட்டூழியங்களை தென்னிலங்கையில் விமர்சித்தவந்த ~சண்டே லீடர் பத்திரிகையையும் தடைசெய்தது. இந்தக் கைங்கரியங்களை செய்தவர் அப்போது ஆட்சியிலிருந்த இதே சந்திரிகா குமாரதுங்கதான். இன்று மீண்டும் கொடுகொட்டி ஆடத்தொடங்கிவிட்டார்.

ஜே.வி.பி உட்பட சில புலி எதிர்ப்பு அமைப்புக்களின் ஊடாக புலிகளின் புதிய ஊடகத்துக்கு எதிரான பிரசாரத்தை முடுக்கிவிட்டிருப்பதுடன் தென்னிலங்கை ஊடகங்களிலும் சில பத்தி எழுத்தாளர்கள் மற்றும் செய்தியாளர் ஊடாக எதிர்பிரசார வேலைகளை தட்டிவிட்டிருக்கிறார் ஜனாதிபதி சந்திரிகா.
வான்புலிகள் விவகாரத்தின்மூலம் புலிகளை இக்கட்டில் மாட்டிவிட முழுமூச்சாக நின்ற அரசின் வாய்க்கு தற்போது தொலைக்காட்சி விவகாரம் ருசியான அவல். மென்று கொண்டிருக்கிறது.

by தெய்வீகன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 03-26-2005, 05:02 PM
[No subject] - by kuruvikal - 03-26-2005, 06:23 PM
[No subject] - by AJeevan - 03-26-2005, 06:30 PM
[No subject] - by Mathan - 03-26-2005, 07:11 PM
[No subject] - by KULAKADDAN - 03-26-2005, 07:17 PM
[No subject] - by vasisutha - 03-26-2005, 08:29 PM
[No subject] - by eelapirean - 03-26-2005, 08:56 PM
[No subject] - by tamilini - 03-26-2005, 09:57 PM
[No subject] - by வியாசன் - 03-26-2005, 10:02 PM
[No subject] - by glad - 03-27-2005, 10:07 AM
[No subject] - by hari - 03-27-2005, 04:25 PM
[No subject] - by adithadi - 03-27-2005, 05:03 PM
[No subject] - by ¸ÅâÁ¡ý - 03-27-2005, 05:06 PM
[No subject] - by Mathan - 04-07-2005, 09:01 PM
[No subject] - by hari - 04-08-2005, 05:02 AM
[No subject] - by iruvizhi - 04-08-2005, 02:12 PM
[No subject] - by Sriramanan - 04-08-2005, 08:46 PM
[No subject] - by selvanNL - 11-17-2005, 02:15 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)