04-07-2005, 05:51 AM
tamilini Wrote:இதையே கம்பன் அவர்களது களைப்பு தீரும் வரை பெண்கள் ஓடத்தை செலுத்தினார்கள் என்று சொன்னால் எவ்வளவு நல்லாய் இருந்திருகு;கும்.. ஆ. ஆஆ. பெண்களது உடலழகைக்கண்டவுடன் அவர்கள் களைப்பை மறந்து ஓட்டினார்கள் என்றால் என்ன அர்த்தம்..??? அந்த கம்பனுக்கு கூ பெண் ஒரு போகப்<b>பொருளாய்</b> தான் தெரிந்திருக்கிறாள். இதில தப்புச்சொல்ல என்ன இருக்கு..
தமிழினி,
கம்பன் எங்கே பெண்ணை பொருளாக்கியிருக்கிறான் ? ஆணுக்கு பெண் மீது மோகமும் பெண்ணுக்கு ஆண்மீது மோகமும் வருவது எதிர்ப்பாலார் மீது கவர்ச்சி கொண்ட மானிடர்களுக்கு இயற்கை. படகை ஓட்டுவது வலிமைமிக்க (எல்லா ஆண்களும் செய்யக்கூடியதல்ல) ஆண்களுக்கு உரிய செயற்பாடாக அந்த நாட்களில் இருந்தது. பயணிகளான பெண்களின் அழகு அவர்களை உற்சாகம் கொள்ள வைத்ததாக கம்பன் எழுதியிருப்பதில் போகப்<b>பொருள்</b> எப்படி உருவாகிறது?
போகப்பொருளாக பெண் வருணிக்கப்பட்டதற்கு இதோ ஒரு பழைய உதாரணம்.
"கைச்சாத்திரியுடன் ஓடிய பூசாரியின் மனைவியை பொலிசார் <b>கைப்பற்றி</b> உரிமையாளரான (கணவரான) பூசாரியிடம் <b>ஒப்படைத்தனர்.</b>"
இங்கே பெண் பூசாரியின் போகத்துக்கான பொருளாக சித்தரிக்கப்பட்டுள்ளாள்.
இதே கம்பன் அதே இராமாயணத்தில் இராமனின் அழகைக்கண்டு சீதை மயங்கியதையும், இலட்சுமணன் அழகில் மயங்கி மோகம் கொண்டு சூர்ப்பநகை மூக்கறுபட்டதாகவும் சித்தரித்துள்ளான். இங்கே ஆண்கள் பெண்களின் போகப்பொருளாக சித்தரிக்கப்பட்டுள்ளார்கள் என்று வாதிடுவது, தங்களது வாதத்துக்கு மாற்றீடாகும்.

