04-07-2005, 01:40 AM
kuruvikal Wrote:அதுமாத்திரமன்றி... கம்பன் பெண்களை கலைக் கண்ணேட்டத்தில காட்ட நீங்க <b>காமக் கண்ணோட்டதில</b> பாக்கிறியள்...
................
ஒரு ஓவியன் வரையும் அல்லது ஒரு சிற்பி செதுக்கும் நிர்வாண சித்திரங்களும் சிலைகளும் கலையாகும் போது கம்பனின் தமிழ் ஆளுமையால் எழுந்த செந்தமிழ் வர்ணனைகள் மட்டும் <b>காமமாகப் பார்க்கப்படுவது</b> பார்வையாளனின் தவறே அன்றி கம்பனதல்ல...
கம்பனது வருணனை படிப்பவரது காம இரசனைக்கு விருந்தாகுமாறு தான் கம்பன் அமைத்திருக்கிறார்.
காமம் தவறான உணர்வு என பலரும் பொருள் கொள்ளுமாறு குருவிகள் எழுதியிருப்பது திருவள்ளுவரை அவமதிப்பதற்கு சமமாகும். அதற்கு பரிகாரமாக குருவிகள் திருக்குறளின் காமத்துப்பாலை முற்றாக மனனம் செய்ய வேண்டுமென தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

