04-07-2005, 12:40 AM
<img src='http://img193.exs.cx/img193/1271/birdhouseflowers5xq.gif' border='0' alt='user posted image'>
<b>மோகித்து
மோட்சம் ஏகவன்றி
அன்புக்காய் ஏங்கி
மலரே உனைத் தேடி வந்தேன்..!
நினைவெனும் நோய் கொடுத்து
தேம்ப வைத்தாய் இன்று...!
தோப்பாகும் என் வாழ்வென்று
மனதோடு மடி வாங்கி
காலமெல்லாம் கவி பாடி
சீராட்டிய மலரின் மெளனம்
சம்மதமல்ல சாமர்த்தியம்
புரிந்து கொண்டேன்...!
குருவி நான் பார்த்திருக்க
வம்பாகி வந்த வண்டுக்காய்
ஏங்கி நீ துரத்திட்டாய்
எனைத் தூரவே....!
கனவு கலைத்து
நிஜம் காட்டினாய் நன்றி..!
ஆனால்...
உன் நினைவு மட்டும்
என்னோடு நிலைக்க
ஏங்குகிறேன் தனிமையில்....!
உன் முடிவு கண்டு.....
வைக்க எனக்குத் தாடியும் இல்ல
கையில் மதுவும் இல்ல
கொள்ள எனக்கு தேவதாஸ் வேடமும் இல்ல
தொங்க ஒரு கயிறும் இல்ல
உண்ண ஒரு நஞ்சுமில்ல
இவை செய்ய ஆறறிவும் எனக்கில்ல...!
குருவி நான் சுதந்திரச் சிட்டு
நினைவுகள் பாரமாக
சிறகுகள் விரிய மறுக்க
கூண்டோடு அடைபட்டு
பரிதவிக்கிறேன்..!
நினைவுச் சிறை உடைத்துப்
பறக்க முயல்கிறேன் முடியவில்லை...!
பார் மலரே...
எந்தன் பரிதாபம்
உன் நினைவுகள்
என் சிங்காரச் சிறகுகள்
சிறை செய்ய
மீண்டும் உன்னிடமே சிறையாகிறேன்...!
இது யார் குற்றம்...??!
என் செய்வேன்...
தவிப்பே வாழ்வாகித்
தவிக்கிறேன்
கருணை காட்டாயோ....!
தாராயோ...
நீ கொண்ட பேரன்பை
குருவி என் சொத்தாக்க...!</b>
<b>மோகித்து
மோட்சம் ஏகவன்றி
அன்புக்காய் ஏங்கி
மலரே உனைத் தேடி வந்தேன்..!
நினைவெனும் நோய் கொடுத்து
தேம்ப வைத்தாய் இன்று...!
தோப்பாகும் என் வாழ்வென்று
மனதோடு மடி வாங்கி
காலமெல்லாம் கவி பாடி
சீராட்டிய மலரின் மெளனம்
சம்மதமல்ல சாமர்த்தியம்
புரிந்து கொண்டேன்...!
குருவி நான் பார்த்திருக்க
வம்பாகி வந்த வண்டுக்காய்
ஏங்கி நீ துரத்திட்டாய்
எனைத் தூரவே....!
கனவு கலைத்து
நிஜம் காட்டினாய் நன்றி..!
ஆனால்...
உன் நினைவு மட்டும்
என்னோடு நிலைக்க
ஏங்குகிறேன் தனிமையில்....!
உன் முடிவு கண்டு.....
வைக்க எனக்குத் தாடியும் இல்ல
கையில் மதுவும் இல்ல
கொள்ள எனக்கு தேவதாஸ் வேடமும் இல்ல
தொங்க ஒரு கயிறும் இல்ல
உண்ண ஒரு நஞ்சுமில்ல
இவை செய்ய ஆறறிவும் எனக்கில்ல...!
குருவி நான் சுதந்திரச் சிட்டு
நினைவுகள் பாரமாக
சிறகுகள் விரிய மறுக்க
கூண்டோடு அடைபட்டு
பரிதவிக்கிறேன்..!
நினைவுச் சிறை உடைத்துப்
பறக்க முயல்கிறேன் முடியவில்லை...!
பார் மலரே...
எந்தன் பரிதாபம்
உன் நினைவுகள்
என் சிங்காரச் சிறகுகள்
சிறை செய்ய
மீண்டும் உன்னிடமே சிறையாகிறேன்...!
இது யார் குற்றம்...??!
என் செய்வேன்...
தவிப்பே வாழ்வாகித்
தவிக்கிறேன்
கருணை காட்டாயோ....!
தாராயோ...
நீ கொண்ட பேரன்பை
குருவி என் சொத்தாக்க...!</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

