04-06-2005, 10:00 PM
வெலிக்கந்தையில் கருணா குழுவின் முகாம் இருப்பது உண்மையே: ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கண்காணிப்புக்குழு
சிறீலங்கா இராணுவ கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட வெலிக்கந்தை பிரதேசத்தில் கருணா குழுவின் முகாமொன்று இருப்பதாக இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் மட்டக்களப்பு மாவட்ட தலைமைப் பிரதிநிதி பி.ஆர்.ஸ்டீன் உறுதிப்படுத்தியுள்ளார்.
சிறீலங்கா ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதிக்கும் மார்ச்; மாதம் இரண்டாம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் விடுதலைப்புலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களின் பின்னணி குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி நாள் விசாரணை இன்று மட்டக்களப்பு நீதிமன்ற கட்டத்தொகுதியில் நடைபெற்றது.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஜே.விஸ்வநாதன் தலைமையிலான இவ் ஆணைக்குழு முன்னிலையில் அவர் அளித்த சாட்சியம்:
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறீலங்கா இராணுவம் மற்றும் விடுதலைப்புலிகள் தவிர ஏனைய ஆயுதக் குழு நடமாட்டத்தைப் பொறுத்த வரை எனக்குத் தெரிந்தவரை கருணா குழுவின் நடமாட்டம் உள்ளது.
அதுவும் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியில் தான் உள்ளது.
எனக்குத் தெரிந்தவரை வெலிக்கந்தை பிரதேசத்திலுள்ள தீவுச்;சேனையில் கருணா குழுவின் முகாம் உள்ளதாக அறிகின்றேன்.
இக்குழுவிற்கு இராணுவ உதவி இருப்பது குறித்து எனக்குத் தெரியாது. இதற்கான ஆதாரங்களும் இல்லை.
கருணா குழுவின் முகாம் இருப்பது போர் நிறுத்த உடன்படிக்கை மீறலாகும். துணைப்படை என்பதற்கான சரியான அர்த்தம் எனக்கும் தெரியாது.
ஆனால் கருணவின் ஆதரவாளர்கள் ஆயுதங்களுடன் இருக்கின்றார்கள்.
போர் நிறுத்த உடன்படிக்கையின் படி துணைப்படைகளின் ஆயுதங்களை களைய வேண்டியது அரசின் கடமை.
கருணா குழுவினரின் ஆயுதக்களைவ குறித்து எனது தலைமையகத்திற்கு மார்ச்; மாதம் 21 ஆம் திகதி அறிவித்துள்ளேன்.
அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பது குறித்து எனக்குத் தெரியாது.
விடுதலைப்புலிகள் மீது இப்படியான தாக்குதல் தொடர்வது போர் நிறுத்த உடன்படிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? இல்லையா? என்பது குறித்து என்னால் கருத்துக்கூற முடியாது.
எதிர்காலத்தில் இப்படியான தாக்குதல்களை தவிர்ப்பது என்றால் எனது அபிப்பிராயப்படி சிறீலங்கா அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையிலான தொடர்புகள்ää உரையாடல்கள் மிக நெருக்கமானதாக இருக்க வேண்டும் என்றார்.
விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளரான லெப். கேணல் கௌசல்யன் படுகொலை சம்பவம் தொடர்பாக ஆணைக்குழுவினால் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் பின்வருமாறு கூறினார்.
அவர் கூறியதாவது:
சம்பவதினமிரவு 10.00 மணியளவில் இது குறித்த தகவல் கிடைத்தது. உடனே புறப்பட்டு பொலனனறுவை வைத்தியசாலையை சென்றடைய அதிகாலை 2.00 மணியாகிவிட்டது.
அங்கு ஐந்து சடலங்களை கண்டேன்.
மீண்டும் மறுநாள் காலை 10.00 மணிக்குச்; சென்று சடலங்கைள எடுத்து வருவதற்கு எங்களால் வழித்துணை வழங்கப்பட்டது.
இது குறித்து பொலிஸ் விசாரனை அறிக்கை எதிர்பார்க்கப்படுகின்றது.
அதுவரை இச்சம்பவமானது போர் நிறுத்த உடன்படிக்கை மீறலா? இல்லையா? என்பது குறித்து கூற முடியாது.
விடுதலைப்புலிகளின் பயணத்திற்கு பாதுகாப்பு வழங்குவது பொலிசாரும் இராணுவத்தினரும் தான். நாம் வழங்குவது வழித்துணையாகும்.
நான் அறிந்த வரை குறிப்பிட்ட பயணத்திற்கு விடுதலைப்புலிகள் பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பு கோரி விண்ணப்பிக்கவில்லை.
இத்தாக்குதல் சம்பவத்திற்கு யார் பொறுப்பு என்று இதுவரை கண்டறியப்படாத காரணத்தினால் இச்சம்பவமானது போர் நிறுத்த உடன்படிக்கையை பாதிக்குமா? இல்லையா? என்பது குறித்து எத்தகைய கருத்துக்களையும் இப்போது கூற முடியாது என்றார் அவர்.

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]