Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இப்போது அவர்கள் என்ன செய்யவேண்டும்?
#1
ஒரு ஊரில் ஒரு பெரியவர் தனது பேரனை தனது கழுதையில் ஏற்றிவிட்டு, தான் நடந்தவாறு அடுத்த ஊருக்கு போய்க்கொண்டிருந்தார். அப்போது தெருவழியாக போனவர்கள் " பாருங்கோ அந்த சின்னபெடியனை, வயது போன மனுசனை நடக்கவிட்டிட்டு அவர் கழுதையில் ஏறிப்போற அழகை பாருங்கோ" என கதைத்தவாறு சென்றனர். இதனால் கவலையடைந்த முதியவர், தான் கழுதையில் ஏறிக்கொண்டு, சிறுவனை நடந்துவரச்சொன்னார். அவ்வாறு போய்க்கொண்டிருக்கையியல், வேறு சிலர் " பாருங்கோ இந்த கிழவனை, சின்னப்பெடியனை நடந்துவரச் சொல்லிப்போட்டு கிழவன் ஹாயா கழுதையில் ஏறிப்போகுது" என கதைத்துக்கொண்டிருந்தனர்.

இதனால் மேலும் கவலையடைந்த முதியவர், இருவரும் நடந்து செல்ல முடிவெடுத்தனர். இவ்வாறு இருவரும் நடந்து செல்லும்போது, இன்னும் சிலர் அவர்கள் இருவரையும் பார்த்து, " கழுதையை வைச்சுக்கொண்டு ஏன் இப்படி நடந்து போகிறார்கள். " என பரிகாசம் செய்தனர். ஊரில் இப்படி கதைப்பதை அவமானமாக எண்ணிய முதியவர் தாங்கள் இருவரும் கழுதையில் ஏறிச்செல்வோம் என முடிவெடுத்தனர்.

அதன்படி அவர்கள் சென்றாலும் விட்டார்களா ஊரவர், "வயது போன கழுதையெண்டும் பார்க்காமல் இரண்டுபேரும் ஏறிப்போகினம்" என்று திட்டாத குறையாக பேசிக்கொண்டிருந்தார்கள்.

இறுதியாக கேள்விக்கு வருகின்றேன்.

இப்போது அவர்கள் என்ன செய்யவேண்டும்?
Reply


Messages In This Thread
இப்போது அவர்கள் என்ன செய்யவேண்டும்? - by thamilvanan - 04-06-2005, 05:50 PM
[No subject] - by Double - 04-06-2005, 06:03 PM
[No subject] - by thamilvanan - 04-06-2005, 06:40 PM
[No subject] - by Mathan - 04-07-2005, 03:47 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)