04-06-2005, 04:53 PM
புலிகளின் பயத்தால் நாட்டை விட்டோடிய புலனாய்வுப் பிரிவு தலைவர் நிலாம்
முன்னர் நிகழ்ந்த மிலேனியம் சிற்றி பொலிஸ் புலனாய்வு நடவடிக்கைகளைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் அமைப்பினரின் கொலைப் பயமுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் கப்டன் நிலாம் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். அவருடைய புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்களும், மற்றும் உளவாளிகளும் தொடர்ச்சியாகப் புலி உறுப்பினர்களால் கொலை செய்யப்பட்ட பின்னர் தற்போது மேற்படி கப்டன் நிலாம் மீதும் புலிகள் தாக்குதலைத் தொடுக்கக்கூடும் என்ற பயத்திலேயே தம் பாதுகாப்புக்காக அவர் வெளிநாடு சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவுத் தலைவராக இருந்த காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் பல தலைவர்களைக் கொலை செய்தவர் என்று கருதப்படும் கப்டன் நிலாம் பல்வேறு கட்டங்களிலும் புலிகளின் கொலை எச்சரிக்கைகளுக்கு இலக்காகி இருந்தார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் உதவிப் பொலிஸ் அதிபர் குலசிறி உடுகம்பொலவால் எடுக்கப்பட்ட "மிலேனியம் சிற்றி" நடவடிக்கையைத் தொடர்ந்து பொலிஸ் பாதுகாப்பில் இருந்த கப்டன் நிலாம் இவ்வாறு நாட்டைவிட்டுச் சென்றிருப்பது பாதுகாப்புத் துறையினருக்கும் புலனாய்வுப் பிரிவினருக்கும் மட்டுமல்ல, முழுநாட்டுக்குமே ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் எனப் பாதுகாப்பு துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திவயின 4/4/2005

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>