04-06-2005, 03:41 PM
காதல் தீயின் தீண்டலை
தாங்காத மலரிவள்
துவண்டு விழுந்து
துடி துடிக்கையில்
தூக்கி நிறுத்தியவனே
தூர செல்வது ஏனோ?
காதலை உன்னிடம்
கையேந்தி யாசிக்க
என்னிடம் துளியளவும்
எண்ணம் இல்லை..!
மலரின் மையத்தில்
மலர்ந்தவன் உன்னை
மறைத்து வைத்தேன்
மனதுக்குள்..!
மங்காத உன் நினைவுகள்
மடியாது என்றென்றும்..!
உந்தன் பார்வையின்
பரிணாமங்களே
எந்தன் கவியாகி
உருப்பெறுகிறதே..!
காலமெல்லாம்
காணவேண்டும்
உன் கண்களை
காவியங்கள்
நாம் படைக்க..!
சூரியனின் வரவிற்காய்
காத்திருக்கும்
சூரியகாந்தியாக
பாத்திருக்கிறேன்
உன் வருகைக்காய்
நீ பதிக்கும் சுவடுக்காய்
பார்த்த விழி பூத்திருக்கிறேன்
பாரா முகம் ஏனோ?
பாவியிவள் பதறுகிறாள்
பஞ்சணையில் தூக்கமா உனக்கு?
தூக்கம் தொலைந்தது எனக்கு
முட்டிமோதும் உன் நினைவால்...!
தொலைந்த தூக்கத்தை
தேடவில்லை நான்..!
அவசியம் இல்லை
அதற்கு - ஏன்னென்றால்
உனக்குள்ளே பத்திரமாய்
உன் இதயத்தில்
மலர்ந்திருக்கிறேன் - நீ
மாலையிடும்
மணநாளை எண்ணி - இனி
சாவித்திரியாக
சத்தியவான் உன்னுடன்
வாழ்வதற்கு...!
தாங்காத மலரிவள்
துவண்டு விழுந்து
துடி துடிக்கையில்
தூக்கி நிறுத்தியவனே
தூர செல்வது ஏனோ?
காதலை உன்னிடம்
கையேந்தி யாசிக்க
என்னிடம் துளியளவும்
எண்ணம் இல்லை..!
மலரின் மையத்தில்
மலர்ந்தவன் உன்னை
மறைத்து வைத்தேன்
மனதுக்குள்..!
மங்காத உன் நினைவுகள்
மடியாது என்றென்றும்..!
உந்தன் பார்வையின்
பரிணாமங்களே
எந்தன் கவியாகி
உருப்பெறுகிறதே..!
காலமெல்லாம்
காணவேண்டும்
உன் கண்களை
காவியங்கள்
நாம் படைக்க..!
சூரியனின் வரவிற்காய்
காத்திருக்கும்
சூரியகாந்தியாக
பாத்திருக்கிறேன்
உன் வருகைக்காய்
நீ பதிக்கும் சுவடுக்காய்
பார்த்த விழி பூத்திருக்கிறேன்
பாரா முகம் ஏனோ?
பாவியிவள் பதறுகிறாள்
பஞ்சணையில் தூக்கமா உனக்கு?
தூக்கம் தொலைந்தது எனக்கு
முட்டிமோதும் உன் நினைவால்...!
தொலைந்த தூக்கத்தை
தேடவில்லை நான்..!
அவசியம் இல்லை
அதற்கு - ஏன்னென்றால்
உனக்குள்ளே பத்திரமாய்
உன் இதயத்தில்
மலர்ந்திருக்கிறேன் - நீ
மாலையிடும்
மணநாளை எண்ணி - இனி
சாவித்திரியாக
சத்தியவான் உன்னுடன்
வாழ்வதற்கு...!
" "
" "
" "

