Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இப்பிடியும் பாக்கலாம் தானே?
#4
ஈழநாதன் பதில்


இப்படியும் சவுண்டு விடலாமே
நம்ம கறுப்பி இல்ல கறுப்பி அவ இப்படியும் பேசலாமே என்று தனது அங்கலாய்ப்பை கொட்டோ கொடென்று தனது பதிவிலை கொட்டிவிட்டுப் போயிருக்கிறா.அவவின்ரை பார்வையிலை படாத சில அரஜாகங்களையும் அட்டூழியங்களையும் எடுத்துக் கொடுக்கிறதுக்குத் தான் இந்தப் பதிவு.

அவ போராட்டத்திற்குச் சார்பாகப் பேசுறவர்களையும் ஆதரவாளர்களாகத் தங்களை வெளிக்காட்டிக்கொள்பவர்களையும் பார்த்து நீங்களெல்லாம் ஒண்ட வந்த நாட்டிலை நிண்டு கொண்டு எதுக்கு வீரவசனம் பேசுறியள் நாட்டிலை போய்ப் போராடுங்கோவன்,மற்றவன் பிள்ளை உயிரைக் கொடுக்க நீங்கள் இஞ்சை சுகம் அனுபவிக்கிறீங்கள் என்று சொல்லியிருக்கிறா.
கனடாவிலையும் ஜேர்மனியிலையும் பிரான்சிலையும் இருந்துகொண்டு ஐயோ அங்கை எங்கடை சகோதர சாகிறார்களே என்று சொல்லுறவையைப் பற்றி அவ ஒண்டும் சொல்லேலைத்தான் எண்டாலும் அவைக்கும் இது பொருந்துமெண்டு நினைக்கிறன்


தான் சுயநலவாதிதானாம்.அங்கை இருக்கிற வசதிகளை அனுபவிச்சுக் கொண்டு ஈழத்திலை நடக்கிற பிரச்சனைகளைப் பற்றிப் பேசப்போறதில்லையாம்.ஆமி அடிச்சாலும் புலி அடிச்சாலும் அந்த அப்பாவி மக்கள் தங்கடை பாட்டிலை எதுவும் செய்யட்டுமாம்.தான் தன்ரை பாட்டிலை இருப்பாவாம் அப்பப்ப மனச்சாட்சி உறுத்தினா ஆருக்கும் உதவி செய்வாவாம்.

அம்மாவானை நான் என்ன செய்யிறனோ அதைத்தான் கறுப்பி தானும் செய்யுறதாச் சொல்லியிருக்கிறா.நானும் சரியான சுயநலவாதி.நாங்களெல்லாம் அதைப் பற்றிப் பேசாமல் படமும் பார்த்து புளொக்கும் எழுதி இடைக்கிடை நாலைஞ்சு பதிவுக்கு தாளமும் தட்டினாப் போதும்.அப்பப்ப மிஸ்டர் மனசாட்சி உறுத்தினா அஞ்சோ பத்தோ ஆரும் போராலை கஷ்டப்பட்டவைக்கு கொடுத்து மன உறுத்தலை தவிர்த்தாப் போதும்.அப்படிக் குடுக்காட்டிலும் பர்வாயில்லை யாருக்கும் தெரியவே போகுது குடுத்ததெண்டு சொன்னாலே போதும்.

என்னாலை அங்கை நிண்டு அடிபட ஏலாது நானுண்டு என்ரை பாடுண்டு எண்டு இஞ்சை ஓடிவந்திட்டன்.இஞ்சை வந்து பார்த்த எனக்கு முன்னாலை நிறையப் பேரெல்லாம் இங்கை வந்து நிண்டு கொண்டு எங்களுக்கு தமிழீழம் கிடைக்கவேணும் எண்டு எழுதினம்,அரசாங்கம் செய்யுற அட்டூழியங்களை எழுதினம்,போராட்டத்தின்ரை வரலாறை புட்டுப் புட்டு எழுதினம்.பார்க்க எரிச்சலாகத் தான் இருக்குது.

இவையெல்லாம் அங்கை நிண்டு அடிப்பட்டிருந்தால் இவையள் கேட்கிற ஈழம் கிடைச்சிருக்குமே.சமாதானம் கிடைச்சிருக்குமே என்கிறா கறுப்பி எனக்கும் அப்பிடித்தான் தோன்றுது.இவை மட்டுமல்ல புலி பாசிசம் அடக்குமுறை அரஜாகம் என்று சொல்லுற அத்தனை பேரும் வெளிநாடுகளிலை இருந்து எழுதிக் கிழிக்காமல் ஒத்து நிண்டு அடிப்பட்டிருந்தா இண்டைக்கு முழுப் புலியளையும் ஒழிச்சுக் கட்டியிருக்கலாமே.

இல்லை எங்களுக்கு புலியளிலை எதிர்ப்பில்லை பாழாப்போன போரிலைதான் கோபமெண்டா அவங்களோடை நிண்டு அடிப்பட்டிருந்தா இண்டைக்கு ஈழம் கிடைச்சு சமாதானம் வந்திருக்குமே.அதென்ன போராட்டத்துக்கு ஆதரவா எழுதுறவைதான் போய்ப் போராட வேணும்.போரை நிறுத்த என்ன வழி போராடி முடிக்கிறதுதானே எல்லாருமாச் சேர்ந்து போராடி முடிச்சா போர் முடிஞ்சு போயிடுமே.

இல்லை ஆர் என்ன கேடுகெட்டாலும் எங்களுக்கு கவலையில்லை அங்கை உயிரைக் குடுத்துப் போராடுற இளஞர்கள் பாவமெண்டா அங்கை போய்நிண்டு அவங்களுக்கு உதவி செய்யலாமே.முன்னுக்குப் போய் நிண்டு சன்டைபிடிக்க பயமாயிருந்தா பின்னுக்கு நிண்டு சாப்பாடு செய்து குடுக்கலாம் காயக்காரருக்கு மருந்து கட்டலாம்.

சவுண்டு விடுறாக்களைப் பற்றி கறுப்பி சொன்னாவே ஒரு சொல்லு.ஏன் அந்தப் பதிவுக்கு ஆரும் வந்து வாழ்த்துக்கள் சொல்லேலை எண்டுதான் எனக்கு ஐமிச்சமாக் கிடக்கு.

நானும் கறுப்பியோடை சேர்ந்து சவுண்டு விடுறாக்களைக் கேட்கிறன்.

ஈராக்கிலை அமெரிக்காவும் அங்கிலாந்தும் அநியாயம் பண்ணுது எண்டு ஐரோப்பாவிலை நிண்டு கொண்டும் அமெரிக்காவிலை நிண்டு கொண்டும் சவுண்டு விடுறவை,கனடாவிலை நிண்டு கொண்டு பத்தி எழுதிறவை,அட இலங்கையிலும் இந்தியாவிலையும் கண்டனப் பேரணி நடத்துறவை.நீங்கள் எல்லோரும் இனி சவுண்டு விடுறதை நிப்பாட்டுங்கோ அடுத்த பிளேனைப் பிடிச்சு ஈராக்கு போய் அமெரிக்காவோடை சண்டைபிடிச்சு ஈராக்கைக் காப்பாத்துங்கோ.

இந்தியாவிலை லஞ்சம் ஊழல் மலிவெண்டுறவை,அரசாங்கத்திலை பிழை சொல்லுறவை,நாட்டைத் திருத்தோணும் எண்டுறவை எங்கடை நாடு வளர்வேணும் எண்டுறவை.உடனை பிளேன் பிடிச்சு ஊருக்குப் போங்கோ வெளிநாட்டிலை நிண்டு சவுண்டு விட்டா இப்பிடி புளொக்கிலை திட்டுவம்.

சோமாலியாவிலை பிள்ளைகள் பசியிலை சாகுதெண்டு பரிதாபப் படுறவை அதை புளொக்கிலை எழுதியே நேரத்தைப் போக்காட்டுறவை கையிலை இருக்கிற சொத்துப் பத்தை வித்திட்டு அதுக்கு சாப்பாடு வாங்கிக்கொண்டு சோமாலியா போங்கோ அல்லது வாயை மூடிக்கொண்டு கம்மெண்டு இருங்கோ.

எங்கேயோ அடக்குமுறைக்கு உள்ளாகும் முஸ்லிம் பென்ணுக்கு இஞ்சை இருந்து போலிக்கண்ணீர் வடிக்காதிங்கோ. முக்கியமா எழுதிக் கிழிக்காதையுங்கோ அங்கை போய் முடிஞ்சா அந்தப் பெண்ணுக்கு உதவப் பாருங்கோ.இல்லாவிட்டால் வாயைப் பொத்திக்கொண்டு கம்மெண்டு இருங்கோ.

எங்களுக்குத் தமிழீழம் கிடைக்கவேணும்,எங்கலுக்கு விடிவு வரவேணும்,அரசாங்கம் எங்களை கொடுமைப் படுத்துது எண்டு வெளிநாட்டிலை டாம்பீகமாகவும் பகட்டாகவும் வாழ்ந்துகொண்டு புளொக்கிலையும் போரத்திலையும் எழுதுறாக்களே உங்களுக்கு விடிவு இல்லை மற்றாக்களுக்கு முந்தி நீங்கள்தான் ஊருக்குப் போகவேணும்.எங்கடை நாட்டிலை சமாதானம் வரவேணும் சாந்தி நிலவவேணும் தமிழன் சிங்களவனையும் முஸ்லிமையும் சிங்களவன் தமிழனையும் மதிக்க வேண்டுமெண்டுறவை உங்களுக்குப் பின்னாலை வருவினம்.

நல்லகாலம் லெனினோ ஹோசிமினோ சுபாஷ் சந்திரபோசோ உயிரோடை இல்லை.இருந்திருந்தா உங்கடை சகோதரர் உள்நாட்டிலை கஷ்டப்பட்டுச் செத்துக்கொண்டிருக்க நீங்கள் பிரான்சிலையும் சிங்கப்பூரிலையும் இருந்துகொண்டு எழுதிக்கிழித்துக்கொண்டும் கூட்டத்திலை பிளந்து கட்டிக்கொண்டும் இருக்கிறியள் எண்டு அவையைப் பார்த்தும் சவுண்டு விட்டிருக்கலாம்.

கறுப்பி சொன்னமாதிரி புலியின்ரை ஆதரவு ஆதரவு எண்டு சொல்லிச் சொல்லியே நிறையப் பேர் சொத்துப் பத்துச் சேர்த்துப் போட்டினம்.அதைவிட புலியை எதிர்த்து எதிர்த்தே வெளிநாடுகளிலை நிறையப் பேர் பெரியாக்களாகிட்டினம் இதெல்லாம் பொறுக்க முடியாமல்தான் சொல்லுறம்.கறுப்பி ஏற்கனவே இதை சொன்னதாலை என்னையும் கறுப்பியையும் தவிர்த்து ஆருக்காவது தொப்பி அளவாயிருந்தால் போட்டுக்கொள்ளலாம்.

இந்த உலகம் அரஜாகத்தாலை நிரம்பியிருக்கு மனிதாபிமானம் குறைஞ்சுபோச்செண்டு புளொக்கிலை புலம்பாதையுங்கோ இதுக்கு எங்கை போய் அடிபடுறதெண்டு எனக்குத் தெரியேலை.வேணுமெண்டா சந்திரமண்டலக்காரரோடை அடிபடலாம்
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 04-06-2005, 12:05 PM
[No subject] - by KULAKADDAN - 04-06-2005, 01:04 PM
[No subject] - by tamilini - 04-06-2005, 01:35 PM
[No subject] - by KULAKADDAN - 04-06-2005, 02:24 PM
[No subject] - by eelapirean - 04-06-2005, 06:43 PM
[No subject] - by tamilini - 04-06-2005, 08:35 PM
[No subject] - by Danklas - 04-07-2005, 01:12 PM
[No subject] - by MUGATHTHAR - 04-07-2005, 03:27 PM
[No subject] - by tamilini - 04-07-2005, 04:16 PM
[No subject] - by Danklas - 04-07-2005, 04:31 PM
[No subject] - by tamilini - 04-07-2005, 04:33 PM
[No subject] - by Danklas - 04-07-2005, 04:35 PM
[No subject] - by tamilini - 04-07-2005, 04:57 PM
[No subject] - by Danklas - 04-07-2005, 05:09 PM
[No subject] - by tamilini - 04-07-2005, 05:11 PM
[No subject] - by Danklas - 04-07-2005, 05:19 PM
[No subject] - by Mathan - 04-07-2005, 06:46 PM
[No subject] - by KULAKADDAN - 04-08-2005, 01:58 AM
[No subject] - by tamilini - 04-08-2005, 01:59 AM
[No subject] - by Mathan - 04-08-2005, 03:11 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)