04-06-2005, 11:47 AM
இப்பிடியும் பாக்கலாம் தானே?
கறுப்பி புலிக்கு எதிரானவ, போராட்டத்துக்கு எதிரானவ, தேசியவிடுதலையில அக்கறை இல்லாதவ எண்டு சிலர் பல இடங்களில துள்ளிக் குதிக்கிறத பாத்துக்கொண்டுதான் வாறன். கறுப்பிக்கு விதம் விதமாச் சாப்பிட வேணும். அனேகமா கனடாவில இருக்கிற எல்லா நாட்டு ரெஸ்ரோறண்டுக்கும் போய் ஒரு பிடி பிடிச்சிருக்கிறன். விதம் விதமா உடுப்புப் போட விருப்பம். கனடாவில என்னென்ன சௌபாய்க்கியங்கள் எல்லாம் இருக்கோ ஒரு ரவுண்டு போய் வர விருப்பம். வாழ்க்கை வாழத்தானே. இப்பிடிச் சுயநலமா உலாவிக்கொண்டிருக்கிற கறுப்பி பொங்கி எழு தமிழா ஈழம் எமது கையில் எண்டு கவிதையும், கட்டுரையும் எழுதினால் யாராவது பின்னால நிண்டு ஓங்கி உதைய மாட்டீனம் எண்டு என்ன நிச்சயம்.
கறுப்பிக்கு(ம்) மனச்சாட்சி இருக்கு. அந்த வெய்யிலுக்க கல்லு, முள்ளுப் பத்தைக்க எப்ப வெடிவெடிக்கும், உடல் சிதறும், தலை விழும் எண்டு தெரியாமலும் பெத்த அம்மாவை அப்பாவைச் சகோதரங்களை இனிப் பாப்பனா எண்டும் தெரியாமல் தலைமைக்கும், கடமைக்கும், உத்தரவுகளுக்கும் தலைவணங்கித் துவக்குத் தூக்கிற எங்கட இளைஞர்களையும், யுவதிகளையும் பற்றி ஏதாவது கருத்துச் சொல்ல கறுப்பிக்கு என்ன அருகதை இருக்குச் சொல்லுங்கோ. உயிரைக் கையில பிடிச்சுக்கொண்டு கையில காசிருந்ததால பிளேன் ஏறி இப்ப பிளானா வாழுற கறுப்பிக்கு என்ன யோக்கியதை இருக்கு போராட்டதைப் பற்றிக் கதைக்க. மனச்சாட்சி உறுத்துததால அப்ப அப்ப கொஞ்சம் காசை போரால பாதிக்கப்பட்ட யாருக்காவது கொடுத்து கறுப்பி தன்ர மனச்சாட்சிக்குத் தீனி போட்டுக் கொண்டு இருக்கிறா. அப்பதான குற்றஉணர்வு இல்லாமல் படங்களுக்கும் கலைநிகழ்சிகளுக்கும் போய் வரலாம்..
ஆனால் ஒண்டு மட்டும் சொல்லுறன் பிளேன் ஏறி வந்து முற்று முழுதான லௌகீக வாழ்க்கை வாழந்து தொலைக்கிற எங்கட தேசியபற்றுக்காறரிலும் விட கறுப்பி எவ்வளவோ மேல். லௌகீகத்தில் திளைத்த படியே வீரவசனங்கள எழுதிக் குவித்தும் குரல் உயத்திக் கத்தியும் ரீல் விடுகிற ரகம் இல்லக் கறுப்பி. சுயநலம் துலைந்தால் நிச்சயம் தளத்தில நிக்க வேணும். இல்லாட்டிக் கம்மெண்டு இருக்க வேணும். நல்லாத் திண்டு கொழுத்து எல்லா டாம்பீகங்களையும் அனுபவிச்சுக் கொண்டு யாருக்குப் படம் காட்ட வீரவசனமா எழுதித் துலைக்கிறியள். பேசாமல் தளத்தில போய் அந்தப் பிள்ளைகளுக்குத் தோள் குடுங்கோவன்.
ஐயோ ஐயோ ஐயோ.. அப்ப ஆர் காசு சேக்கிற பொறுப்பை ஏற்கிறது. வெளிநாட்டு உதவிய ஆர் பெற்றுக்குடுக்கிறது எண்டு கறுப்பியக் கவிக்கப் பாக்கிறீங்களாக்கும். கறுப்பி போல எத்தினை சுயநலவாதிகள் புலம்பெயர்ந்து வாழீனம் அவையளிட்ட அந்தப் பொறுப்பைக் குடுங்கோவன் (என்ன நம்பிக்கை இல்லையே- கறுப்பி கொஞ்சம் உருவினா என்ன? கண்டுகொள்ளாதேங்கோ) ஒரு குடும்பத்தில எத்தின பேர் இருப்பீங்கள் ஒருத்தர் இஞ்ச இருந்து உதவலாம் மற்றாக்கள் தளத்தில போய் நிண்டு எங்கள ஆட்டிப்படைக்கிற ஆராஜக அரசாங்கத்தை ஒளிக்கலாமே..
அட திடீரெண்டு "ஃபரனைட் 911" திரைப்படத்தின்ர கடைசிக் காட்சி மனதில ரீலா ஓடுது. "மைக்கல் மோர்" அதுதான் அந்தப்படத்தின்ர இயக்குனர் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களிட்ட நேராப் போய் உங்கட பிள்ளைகள ஆமியில சேக்கிறதுக்கு விண்ணப்பத்த நிரப்பித்தாங்கோ எண்டு கேக்க அவையள் துண்டக்காணம் துணியக் காணம் எண்டெல்லோ ஓடீனம். பின்ன என்ன சேத்து வைச்ச காசில பிள்ளைகள கேம்பிறிச்சுக்கும், கார்வேட் யூனிவேர்சிட்டிக்கும் அனுப்பிப் படிப்பிச்சு டாம்பீக வாழ்க்கையை பரம்பரை பரம்பரையாகத் தொடருவீனமா? இல்லாட்ட அப்பாவிப் போராளிகளோட தங்கட பிள்ளைகளையும் விட்டு அந்தக் கொடூரத்தை தங்கட பிள்ளைகள் அனுபவிக்க வைச்சு ஐயோ பெத்த மனசு பத்தியெல்லே எரியுது.. அவையின்ர பிள்ளைகள மட்டும்தான் தாய் பெத்ததாம் அப்பாவி போராளிகளைப் பெத்தது உணர்வற்ற இயந்திரமாம். (புஸ்சின்ர பெட்டைகளைப் பாத்தாலே தெரியுதே)
எப்ப புலம்பெயர்ந்தியளோ அப்பவே பேசாமல் கம்மெண்டு இருந்திட்டால் நல்லது. உண்மையிலையே உணர்சியால கொந்தளிச்சா வீட்டில ஒருத்தரை மட்டும் உதவிக்கு எண்டு இஞ்ச விட்டிட்டு மற்றாக்கள் தளத்துக்குப் போறது மேல். அதவிட்டிட்டு எத்தின மணித்தியாளங்களை புளொக்கிள விரையம் செய்யிறியள் அங்கை எங்கட பிள்ளைகள் செத்து மடியுதுகள். இந்த காதிலபூச்சுத்துற வேலைய விட்டிட்டு ரீல் விடுறாக்கள் உங்கட சொத்துப் பத்தை வித்திட்டு சொந்தங்களோட போய் தளத்தில இறங்கினால் எப்பவோ ஈழம் கிடைச்சிருக்கும். சத்தியமாச் சொல்லுறன். யாரோ ரெத்தம் சிந்தி, உடல் சிதற, உயிர் இழந்து, எடுத்த ஈழத்தை லௌகீக வாழ்க்கை வாழ்ற மானம் கெட்டு பிளேன் ஏறி வந்த கறுப்பி ஒருநாளும் சொந்தம் கொண்டாட மாட்டாள். அந்த எங்கட மாங்கொட்டைத் தீவில இருந்து கிடைக்கிற குட்டி ஈழம் ரெத்தம் சிந்தின அந்த அப்பாவிகளுக்கு மட்டும் தான் சொந்தம்.
இவ என்னைத்தான் சொல்லுறா எண்டு தலையச் சொறியாதேங்கோ. தொப்பி அளவா இருந்தா ஆரும் போட்டுக் கொள்ளலாம்
கறுப்பி

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>