04-05-2005, 04:45 AM
வெள்;ளைக்காரத் தமிழர்!
இடைகளின்
பகுதிகளில்
இலக்கணம் பேசும்
என் தேசத்து
ஆண் மக்களின்
அறியாமையும்
தம்
பெண்மையின்
விடுதலைக்கு
விலைபேசும்
மாந்தர்களின்
மேற்கத்தைய
மோகத்தையும்
ஒன்றாக்கி
சுதந்திரம்
என்று
எல்லை மீறும்
பண்பாட்டின்
கருவறைகளை
சிதைத்திடுவோர்
டிஸ்கோ என்கின்ற
காமக் களியாட்டத்துக்கு
சுதந்திரம் என்கின்ற
வழிதனை
தம்
குறுக்கு பாதைக்கு
பயன்படுத்துகிறார்!
பெண்ணின் மேனியை
நிகழ்வின் வரவேற்புரையாய்
அலங்கரிக்கும்
இவர்கள்
தம் சோற்று வண்டியை
ஒரு போதேனும்
அவித்துவிடார்!
கவர்ச்சிக்கும்
கருவுக்கும்
மட்டுமே பெண்
அவை
கலைக்கப்படுவதற்காகவே
கருவடைகின்றன
இங்கே போலும்!
வெள்ளைத்தோல்
மேனியின்
தோற்றம் .. கவர்ச்சியின்
வரவு..இதற்காகவேனும்
இவர்கள் முன்னேறிவிட்டதாய்
தம்பட்டம் அடிக்கலாம்!
காட்டக்கூடாததை காட்டிப்
பிளைப்போரை
பின்னர்
நடன விருந்தில்
குடித்து கும்மாளம் போட்டு
வரும் பெண்களை
புன்சிரிப்பில் மயக்கி
தமிழ் வளர்ப்பார்!
பின்னாள் நண்பர்களோடு
அவள் அங்கங்களை
ஒரு பட்டியலில்
போட்டு அங்கலாய்ப்பார்.
புதிய நூற்றாண்டின்
தமிழர் தம் பண்பாடு
காக்கும்
எங்கள் அன்புத் தம்பிமார்!
ஆனால் திருமணம்
என்றதும்
குடும்பப் பெண்ணாய்
ஊரு விட்டுப்போய்
தேடியலைவார்.
இதற்காகவேனும்
பெண்கள் சிந்திக்கக்
கற்றுக்கொள்ளலாம்.
அழகு ராணிப்
போட்டியில்
அறிவிக்குத்தான்
போட்டியன்றி
வடிவுக்கல்ல என்பர்!
நான் சொன்னேன்
என் அம்மம்மாவிற்கு
உலக அறிவு
மேன்மை என்றேன்!
அதற்கு வயது தடையென்றார்!
அப்போ வயதுக்கும்
அறிவுக்கும் என்ன
தொடர்பு?
அடக்குமுறை
குணம் கொண்ட
ஆண்களின்
உள்நோக்கம்
புரியாத பெண்களுக்கு
விடிவு இல்லை..தொடர்
பல வேதனையே அன்றி
வேறு ஒன்றும் அல்ல
இதைச்சொன்னால்
எனக்கு செருப்படிக்கிடைக்கும்
பிற்போக்குவாதியென்று
பிற்போக்குத்தனமான தம்
செயல்களைப் புதைத்துவிட்டு
எம்மை முத்திரையிடுவார்
இந்த நூற்றாண்டின்
தமிழ் வளப்போர்!
இப்போ
வடக்கு இந்தியரின்
சாயலில் தனக்கு ஒரு
பொண்ணும்
அவளோ
வடக்கு இந்தியனின்
சாயலில்
தனக்கு ஒரு
ஆண் மகனும்
தேவையென்போர்
தடுமாறும் பொழுதிலும்
நிலைமாற
எங்கள்
பெண்ணை
என் தாயின் மகளை
தாம்பத்தியம் என்கின்ற
கூட்டு முயற்சிக்கு
அரணாக நிற்கும்
அன்புப் பெண்ணை
நினைத்துப்பார்க்க
அவன் பார்க்கும்
கற்பனைப் பெண்
தடைபோடுகிறாள்!
மனதில் மட்டுமே
கருவுற்ற
காதலுக்காய்
வாழும்
எங்கள்
ஆண் மகனை
வெறுக்கும் இப்பெண்
வடக்கு ஆண்மகனின்
உயரத்தில் மயங்குகிறாள்!
அந்த பசுமை நிறைந்த
வயல்வெளிகளில்
புல்லுப்பிடிங்கி
வெய்யிலில் நின்று
மேனி கருத்தது
உண்மைதான்!
ஆனாலும்
சுட்டெரித்த
வெய்யிலானாலும்
உள்ளே பக்குவமாய்
பாதுகாக்கப்படும்
குணத்துக்கு
எங்கே இங்கு
மதிப்பு?
அரிதாரம் பூசும்
முகத்துக்கள்ளவோ
இங்கே மதிப்பு!
எங்கள் கடைக்குட்டி
இப்போது தமிழ்
டிவியை பார்த்துப்போட்டு
கேக்கிறான்
ஏனப்பா
எங்கட சனம் எல்லாம்
டிவியில் முகத்துக்கு
வெள்ளைப்
பவுடர் போட்டிரிக்கினம்
என்டு!
அதற்கு நான் சொன்னேன்
வெள்ளைக்காரன் கண்டுபிடிச்ச
டி.வியில நாங்க முகம்
காட்டேக்க அவங்கட
நிறத்திலதான் காட்ட வேண்டும்!
தமிழை தடக்கி கதைப்போரும்
தமிழனின் நிறத்தை
மாற்றுபவனும் தான்
இன்று
தமிழ் வளர்க்கிறான்!
தமிழை தமிழாகவும்
பண்பாட்டை பண்பாடாயும்
காக்கு நினைப்போர்
இனி கல்லறைகளில்
தங்கள் கண்ணீரால்
மடல் எழுதவேண்டியதுதான்!
அதையாவது தமிங்கிலத்தில்
மாற்றாமல் இருந்தால்
சரி இந்த
புலம்பெயர் தமிழர்!
கனடாவிலிருந்து தம்பிதாசன்
இடைகளின்
பகுதிகளில்
இலக்கணம் பேசும்
என் தேசத்து
ஆண் மக்களின்
அறியாமையும்
தம்
பெண்மையின்
விடுதலைக்கு
விலைபேசும்
மாந்தர்களின்
மேற்கத்தைய
மோகத்தையும்
ஒன்றாக்கி
சுதந்திரம்
என்று
எல்லை மீறும்
பண்பாட்டின்
கருவறைகளை
சிதைத்திடுவோர்
டிஸ்கோ என்கின்ற
காமக் களியாட்டத்துக்கு
சுதந்திரம் என்கின்ற
வழிதனை
தம்
குறுக்கு பாதைக்கு
பயன்படுத்துகிறார்!
பெண்ணின் மேனியை
நிகழ்வின் வரவேற்புரையாய்
அலங்கரிக்கும்
இவர்கள்
தம் சோற்று வண்டியை
ஒரு போதேனும்
அவித்துவிடார்!
கவர்ச்சிக்கும்
கருவுக்கும்
மட்டுமே பெண்
அவை
கலைக்கப்படுவதற்காகவே
கருவடைகின்றன
இங்கே போலும்!
வெள்ளைத்தோல்
மேனியின்
தோற்றம் .. கவர்ச்சியின்
வரவு..இதற்காகவேனும்
இவர்கள் முன்னேறிவிட்டதாய்
தம்பட்டம் அடிக்கலாம்!
காட்டக்கூடாததை காட்டிப்
பிளைப்போரை
பின்னர்
நடன விருந்தில்
குடித்து கும்மாளம் போட்டு
வரும் பெண்களை
புன்சிரிப்பில் மயக்கி
தமிழ் வளர்ப்பார்!
பின்னாள் நண்பர்களோடு
அவள் அங்கங்களை
ஒரு பட்டியலில்
போட்டு அங்கலாய்ப்பார்.
புதிய நூற்றாண்டின்
தமிழர் தம் பண்பாடு
காக்கும்
எங்கள் அன்புத் தம்பிமார்!
ஆனால் திருமணம்
என்றதும்
குடும்பப் பெண்ணாய்
ஊரு விட்டுப்போய்
தேடியலைவார்.
இதற்காகவேனும்
பெண்கள் சிந்திக்கக்
கற்றுக்கொள்ளலாம்.
அழகு ராணிப்
போட்டியில்
அறிவிக்குத்தான்
போட்டியன்றி
வடிவுக்கல்ல என்பர்!
நான் சொன்னேன்
என் அம்மம்மாவிற்கு
உலக அறிவு
மேன்மை என்றேன்!
அதற்கு வயது தடையென்றார்!
அப்போ வயதுக்கும்
அறிவுக்கும் என்ன
தொடர்பு?
அடக்குமுறை
குணம் கொண்ட
ஆண்களின்
உள்நோக்கம்
புரியாத பெண்களுக்கு
விடிவு இல்லை..தொடர்
பல வேதனையே அன்றி
வேறு ஒன்றும் அல்ல
இதைச்சொன்னால்
எனக்கு செருப்படிக்கிடைக்கும்
பிற்போக்குவாதியென்று
பிற்போக்குத்தனமான தம்
செயல்களைப் புதைத்துவிட்டு
எம்மை முத்திரையிடுவார்
இந்த நூற்றாண்டின்
தமிழ் வளப்போர்!
இப்போ
வடக்கு இந்தியரின்
சாயலில் தனக்கு ஒரு
பொண்ணும்
அவளோ
வடக்கு இந்தியனின்
சாயலில்
தனக்கு ஒரு
ஆண் மகனும்
தேவையென்போர்
தடுமாறும் பொழுதிலும்
நிலைமாற
எங்கள்
பெண்ணை
என் தாயின் மகளை
தாம்பத்தியம் என்கின்ற
கூட்டு முயற்சிக்கு
அரணாக நிற்கும்
அன்புப் பெண்ணை
நினைத்துப்பார்க்க
அவன் பார்க்கும்
கற்பனைப் பெண்
தடைபோடுகிறாள்!
மனதில் மட்டுமே
கருவுற்ற
காதலுக்காய்
வாழும்
எங்கள்
ஆண் மகனை
வெறுக்கும் இப்பெண்
வடக்கு ஆண்மகனின்
உயரத்தில் மயங்குகிறாள்!
அந்த பசுமை நிறைந்த
வயல்வெளிகளில்
புல்லுப்பிடிங்கி
வெய்யிலில் நின்று
மேனி கருத்தது
உண்மைதான்!
ஆனாலும்
சுட்டெரித்த
வெய்யிலானாலும்
உள்ளே பக்குவமாய்
பாதுகாக்கப்படும்
குணத்துக்கு
எங்கே இங்கு
மதிப்பு?
அரிதாரம் பூசும்
முகத்துக்கள்ளவோ
இங்கே மதிப்பு!
எங்கள் கடைக்குட்டி
இப்போது தமிழ்
டிவியை பார்த்துப்போட்டு
கேக்கிறான்
ஏனப்பா
எங்கட சனம் எல்லாம்
டிவியில் முகத்துக்கு
வெள்ளைப்
பவுடர் போட்டிரிக்கினம்
என்டு!
அதற்கு நான் சொன்னேன்
வெள்ளைக்காரன் கண்டுபிடிச்ச
டி.வியில நாங்க முகம்
காட்டேக்க அவங்கட
நிறத்திலதான் காட்ட வேண்டும்!
தமிழை தடக்கி கதைப்போரும்
தமிழனின் நிறத்தை
மாற்றுபவனும் தான்
இன்று
தமிழ் வளர்க்கிறான்!
தமிழை தமிழாகவும்
பண்பாட்டை பண்பாடாயும்
காக்கு நினைப்போர்
இனி கல்லறைகளில்
தங்கள் கண்ணீரால்
மடல் எழுதவேண்டியதுதான்!
அதையாவது தமிங்கிலத்தில்
மாற்றாமல் இருந்தால்
சரி இந்த
புலம்பெயர் தமிழர்!
கனடாவிலிருந்து தம்பிதாசன்

