09-11-2003, 12:32 PM
<b>Weblog ஒன்றில் தட்டுப் பட்டது.
September 09, 2003
[b]Posted <span style='font-size:25pt;line-height:100%'>by balaji at September 9, 2003 12:43 AM</span>
[size=18][b]பாய்ஸ்</b>
இன்னாங்கடா, நம்ம பசங்க எல்லாரும் இந்தப் படத்தைப் பாரு, செம கைமா சீன் எல்லாம் வைச்சிருக்கான், அப்புறமா அதை வெட்டி எடிட் பண்ணிடுவாங்க, அதுக்குள்ள பாத்துடுன்னு சொன்னதினாலே, போன வாரம் தியேட்டர் போயி பாய்ஸ் படத்தை பாத்துப்புட்டேன். ரெண்டாவது வாரத்திலேயும் ஏறக்குறைய ஹவுஸ்·புல்லா ஓடிக்கிட்டிருக்கு. ஊரிலெ இருக்கற அல்ப கேஸெல்லாம் நம்மளை மாதிரியே வந்து இந்தப் படத்திலே என்ன தான் கீது, கண்டுக்குவோம்ன்னு கெளம்பி வந்துட்டானுங்க போலிருக்குது.
படம் குன்ஸாதான் ஆரம்பிக்குது. ஒவ்வொரு பையன் பத்தியும் நறுக்-ன்னு நாலு வார்த்தை. அவங்க வீட்டைக் காமிக்கும்போது பச்ச கலரிலெ ·பாஸ்ட் பார்வர்ட் செஞ்சு காமிக்கிறான். பசங்கல்லாம் வல்லவரு, நல்லவரு, தானைத் தலைவரு, இளைய தளபதி, சிங்கம், காண்டா மிருகம்ன்னெல்லாம் பீலா வுடாமே அவனுங்களை சாதாரண பசங்களாத்தான் காமிக்கறான். ஒருத்தனுக்கு இங்கிலிப்பீசே வரல்லை, நம்மளை மாதிரி. ஒருத்தன் எப்பப் பார்த்தாலும் கவிதை, கிவிதைன்னு அலையறான். ஒருத்தன் சரோஜாதேவி புக்கை கடையிலே வாங்கி பாத்ரூமிலெ படிக்கறான் (சரோஜாதேவி புக்கை பேரம் பேசாம வாங்கின முத ஏமாளி இவன் தான்). ஒருத்தன் முள்ளம்பன்னி மாதிரி தலைமுடி வச்சுக்கினு ரவுண்ட்ஸ் வர்றான். இன்னொருத்தன் எப்பப் பாத்தாலும் ஏதாவது இங்கிலீசு பாட்டப் பாடிக்கிட்டே பீட்டர் விட்டுக்கினு அலையறான். இவங்க அப்பா அம்மாக்கள்ல்லாம் ஒவ்வொரு விதம். எல்லாரையும் நமக்கு காட்டறத்துக்குள்ளே, ஏய், ஹீரோயின் காட்டுங்கடான்னு பக்கத்து சீட்டு பார்ட்டி ரவுசு பண்ணிட்டான். ஹீரோயின் சுமாரா கீது. அப்படி ஒண்ணும் பெரிய பிகரா இல்ல. ஆனா மூஞ்சியிலெ நல்ல குறும்பு தெரியுது. தம்மாத்தூண்டா இருந்துகினு நல்லா நடிச்சிருக்கு.
நம்ம வயசு பசங்க பாய்ஸ் எல்லாரும் பொண்ணுங்க பின்னாடியே அலையறானுங்க. நாலஞ்சு சீன் காமெடிக்காக இங்கே வச்சிருக்கனுங்க. ஆனா, "அல்லாரும் உஷாரா இருங்க. இதப் பாத்துட்டு நம்ம எளவட்டங்களும் பொண்ணுங்க பின்னாடியே அலையப் போறானுங்க, அதனால இந்தப் படத்தை வெட்டுங்க, தடா பண்ணுங்க"ன்னு ஒரு கும்பல் கெளம்பி இருக்குது. இதுக்கு முன்னாடி பசங்க அலஞ்சானுங்களா? ஆமாம். இதுலே காட்டியிருக்கதையெல்லாம் பசங்க செஞ்சானுங்களா? ஆமாம். இந்தப் படத்துனால கெட்டுப் போயிடுவானுங்களா? அதான் இல்லை. ஏன்னா, பசங்க, போன வருஷமே துள்ளுவதோ இளமை பாத்துக் கெட்டுப் போயிட்டானுங்களே! (அந்தப் படம் வந்தப்பவும் இப்படித் தான் சொன்னாங்க). நம்ம எளவட்டங்கல்லாம் ஆயிரம் விஷயம் பாக்கறானுங்க. அதிலே இதுவும் ஒண்ணு. இந்தப் படத்தாலே கெட்டுடும், ஆச்சா பாச்சான்னு குதிச்சா, பசங்க, இந்தப் படத்திலெ என்ன தான் கீதுன்னு பாக்கக் கெளம்பிடுவாங்க. அதனால, ரவுசு பண்ணற கும்பல்லாம், 'இளமையில இதெல்லாம் சகஜமப்பா'ன்னு கம்னு கெடங்க.
எத்தினையோ படமும், புக்ஸ¤ம் கீது, அதிலெ இதுவும் ஒண்ணு. சனங்க எல்லாரும் படத்திலெ வர்ற மாதிரியா பண்ணறாங்க? எத்தினி பேரு இந்தியன் பாத்துட்டு லஞ்சம் வாங்கறதை நிறுத்தினான்? எத்தினி ஆளு கிழக்கு சீமையிலெ பாத்துட்டு வக்காளி-ன்னு திட்டிட்டு அலையறான்? அதனாலெ, ஒரு படத்தால 'யூத்' எல்லாம் கெட்டுடுவாங்கன்னு சொல்றது எல்லாம் சும்மா டூப்பு. கெட்டுப்போற பசங்களை ரெண்டு மணி நேரம் 'புதிய கீதை' பாக்க வை. அதோட அறிவுரையை கேட்டு கேட்டு பசங்க திருந்திடுவானுங்க :-) அதான் இந்த பாய்ஸ் படத்துக்கு UA செர்ட்டிபிகேட் குடுத்துட்டானுங்களே, குழந்த குட்டியெல்லாம் படத்துக்கு கூட்டிக்கினு போகாம இரு. அம்புட்டுதேன். இந்த மாதிரி ஏ ஜோக்கு, எளவட்ட காமெடி அல்லாம் ரசிக்கற ஆளா நீ, அப்போ போ இந்தப் படத்துக்கு. இல்லியா, போகாதே. ஏதாவது விக்ரமன் படத்துக்கோ, வி.சேகர் படத்துக்கோ போ. ஆனா, மத்தவன் பாக்கக் கூடாதுன்னு சொல்லாதே. மத்தவன் ராமனா இருக்கணுமா, ஜொள் பார்ட்டியா வரணுமான்னு நீ யாருய்யா சொல்றதுக்கு?
படம் வேகமாத்தான் ஓடுது. சிரிக்கறத்துக்கு நெறைய எடங் கீது. ரகுமான் பாட்டெல்லாம் தியேட்டரிலெ கேக்கும்போது நல்லா தான் கீது. எழுந்து ஆடணும் போலக் கீது. காமெரா வொர்க்கு பிரமாதம். அசத்திப்புட்டானுங்கோ! இதுக்காகவே படத்த இன்னொரு தடவ பாக்கணும். நம்மூரிலெ நடந்த பூகம்பம், பொடா சட்டம், எம் டி வி-ன்னு டாபிக்கலா விஷயங்களை கலந்திருக்காங்க. வில்லன் கில்லன்-ல்லாம் இல்ல. பாய்ஸ் வீட்ட விட்டு வெளியே வந்து, வெளி ஒலகத்த எப்படி சமாளிக்கறாங்க, சம்பாரிச்சு, பாடி பெரிய ஆளா வர்றானுங்கன்னு காமிக்கறாங்க. ஐயப்பன் காசெட்டு போடறது, கோயில் சாப்பாட்டிலெ வயத்தை வளக்கறது-ன்னு சமாசாரங்க குன்சா தான் சொல்றாங்க. பசங்க வீட்ட விட்டு வந்ததுமே பெரிசா செஞ்சு கிழிச்சு சாதிக்கற மாதிரி காட்டலெ. அவங்க கஷ்டப்படறது, ஏண்டா வீட்ட விட்டு வந்தோம்ன்னு நொந்துக்கெறதுன்னு சரியாத்தான் காட்டியிருக்கானுங்க. கடசியிலெ சாலமன் பாப்பையா வந்து அறுத்துட்டு படத்த முடிச்சுடறாரு.
ஏதோ, மூணு மணி நேரம் நல்லா போச்சுப்பா. ஜாலியா பாக்கறதா இருந்தா பாய்ஸ் பாக்கலாம். எளவட்டங்களா, படத்தப் பாத்துக் கெட்டுப்போயிடாதீங்க. நம்ம பாலு மகேந்திரா ஏதோ கில்பான்ஸ் படம் பண்ணறாராம் (தனுஷ், அதான்ப்பா காதல் கொண்டேன் பார்ட்டி, அவன் தான் ஹீரோ). அந்தப் படத்தப் பாத்துட்டு கெட்டுப் போங்கப்பா. ஒண்ணும் அவசரமில்ல. இல்லாட்டி இருக்கவே இருக்கு, செல்வராகவனோட அடுத்த படம்.
<b>- பாலாஜி. - </b>
Posted by balaji at September 9, 2003 12:43 AM

Nadpudan
Chandravathanaa
Chandravathanaa