04-03-2005, 09:28 PM
நன்றி வியாசன்
நான் எந்த நாட்டையோ அல்லது மக்களையோ உதாரணமாக வைத்து எழுதவில்லை. இங்கு நாமும் ஒரு அமைப்பை உருவாக்கி அவ்வமைப்பின் மூலமாக தமிழ் நடன சங்கீத வகுப்புக்கள் பல வருடங்களாக நடாத்திக் கொண்டுதானிருக்கின்றோம். பெற்றோர்களின் மனநிலை பிள்ளைகளின் மனநிலை என்பவற்றை நன்றாக புரிந்தே வைத்துள்ளேன். ஒரு மொழியை எவ்வளவுதான் நன்கு கற்றாலும் அதை பயிற்ச்சியினால்த் தான் நன்கு பதிய வைக்க முடியும். அப்பயிற்ச்சியை முழுக்க முழுக்க பெற்றோர்கள் கொடுப்பதென்பது புலம்பெயர் வாழ்வில் மிகவும் கடினம். அதே போல் எந்த ஒரு மொழியும் கற்பதொன்று பேசுவதொன்று. நீங்கள் இங்கு கருத்தெழுதும்போது சாதாரணமாக கதைப்பது போலவா கருத்தெழுதுகின்றீர்கள்?? இல்லையே. இதில் பெற்றோர்களின் பங்களிப்பை ஓரளவாவது ஊடகங்கள் நிவர்த்தி செய்கின்றன என்பதே என் கருத்து. இலணடனிலிருந்து ஊருக்கு போன பெற்றோரின் நிலையை எழுதியிருந்தீர்கள். ஆனால் இலண்டனிலுள்ள பல பிள்ளைகள் இப்போ தமிழ் கற்றுக் கொள்வதே ஊடகங்களில் பங்கு பற்ற வேண்டும் என்ற ஆர்வத்தினால்த்தான். நீங்கள் சில நிகழ்ச்சிகளில் தரக்குறைவான தமிழ் பேசுவதாக குறிப்பிட்டீர்கள். அது உண்மை. அதனை சிறுவயதுப் பிள்ளைகள் கையாள்வதாகவும் குறிப்பிட்டீர்கள். ஆனால் அப்பிள்ளைகள் வளர்ந்து வரும்போது அது தவறென தெரீந்து கொள்கின்றார்கள் தானே. இப்படியான நிகழ்ச்சிகளை பெரும்பாலும் தவிர்த்துத்தானே வெக்டோன் தொலைக்காட்சி நடக்கின்றது. அத்தொலைக்காட்சியும் கட்டணம் செலுத்தித்தான் பார்க்க வேண்டுமாயின் எத்தனை பேர் முன்வருவார்கள்???????? அன்னப்பட்சி போல் நல்லதை எடுத்துக் கொண்டு தீயதை விட்டு விடுவோம்.
:?: