Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ்ஊடக பங்களிப்பு
#9
வசம்பு இலண்டனிலிருந்து ஒளிபரப்பாகும் தொல்லைக்காட்சிகளில் பாடல் கேட்க வருபவர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் உரையாடுகிறார்கள். சின்னத்திரை தொடர்கள் பெரும்பாலும் இந்தியமொழியை திணிக்கின்றன. சமீபத்தில் ஆரம்பமான ஒருதொடர்(செல்வி)யில் இலங்கைத்தமிழ் கொச்சைப்படுத்தப்படுகிறது. தமிழ் பேசுவதற்கு தொலைக்காட்சிகள் ஒன்றும் செய்யவில்லை. பெற்றோர்கள் சிரமத்திடையே தமிழ்ப்பாடசாலைக்கு பிள்ளைகளை அழைத்துச்செல்கின்றார்கள். நீங்கள் இலண்டனை மனதில்வைத்து கருத்துக்களை வைக்கின்றீர்கள் போலும்.
சென்ற ஆடிமாதம் இலண்டனிலிருந்து ஊருக்குச்சென்ற ஒரு தகப்பன் தன்னுடைய மகன் உறவினர்களுடன் பேசமுடியாமல் அங்குவைத்து ஒரு மாதத்துக்குள் தமிழ் கற்றுக்கொடுக்க (?) முயன்ற சம்பவம் என்னை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.
நீங்கள் தமிழை வீட்டில் பேசி தமிழ் பாடசாலைக்கு அனுப்பி வந்தால் பிள்ளை தமிழை கற்றுக்கொள்ளும். அதைவிடுத்து தமிழ் கற்றால் என்னுடைய பிள்ளை வசிக்கும் நாட்டுமொழியை கற்றுக்கொள்ள முடியாது என்று ஒரு தப்பான எண்ணத்தை நீங்களாகவே உருவாக்கிக் கொண்டு தமிழ்பேச தடைபோடுகிறீர்கள். அப்படியானவர்கள் தமிழ் தொலைக்காட்சி பார்வையிடுவதற்கு பிள்ளைகளை அனுமதிப்பார்களா?
இங்குள் பாடசாலைகளில் இரண்டுக்கு மேற்பட்டமொழியை கற்றுக்கொடுக்கிறார்கள். மற்றையது அவர்கள்(ஆசிரியர்கள்) சொல்கின்றார்கள் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு தாய்மொழியை கற்றுக்கொடுங்கள் நாங்கள் எங்கள்மொழியை கற்றுக்கொடுக்கின்றோம் என்று.
தொலைக்காட்சியைவிட அம்புலிமாமா போன்ற புத்தகங்கள் மொழிவளர்ச்சிக்கு பெரிதும் குழந்தைகளுக்கு உதவும். நாங்கள் தொலைக்காட்சிகளை நம்பியிருந்தால்
கவுண்டமணி செந்தில் உச்சத்திலிருந்த நேரத்தில் பல குழந்தைகள் சொறிநாய்தலையா பனங்கொட்டைத்தலையா என்ற வார்த்தைகளை பேசி தமிழை வளர்த்ததுபோன்ற நிலைதான் வரும்.
இந்திய சின்னத்திரைகளில் வரும் வார்த்தைகள் பலவற்றுக்கு தமிழ் அகராதியில் அர்த்தங்களை தேடவேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் உருவாகும்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply


Messages In This Thread
[No subject] - by thamilvanan - 04-03-2005, 11:16 AM
[No subject] - by வியாசன் - 04-03-2005, 11:37 AM
[No subject] - by Mathan - 04-03-2005, 12:15 PM
[No subject] - by வியாசன் - 04-03-2005, 02:01 PM
[No subject] - by Mathan - 04-03-2005, 02:18 PM
[No subject] - by thamilvanan - 04-03-2005, 02:43 PM
[No subject] - by Vasampu - 04-03-2005, 06:30 PM
[No subject] - by வியாசன் - 04-03-2005, 07:00 PM
[No subject] - by Vasampu - 04-03-2005, 09:28 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)