04-03-2005, 02:43 PM
viyasan Wrote:என்ன நீங்கள் புலம்பெயர்நாட்டில்தானா இருக்கிறீர்கள்? அல்லது இந்த
தொ(ல்)லைக்காட்சிகளை நீங்கள் பார்வையிடுவதில்லையா? இந்த தொ(ல்)லைக்காட்சிகளில் தமிழுக்குஎன்ன செய்கின்றார்கள். தென்னிந்திய கீழ்த்தர நிகழ்ச்சிகளைத்தான் பெரும்பாலும் ஒளிபரப்பு செய்கின்றன. அவை பெரும்பாலும் திரைப்படங்களில் இடம்பெறும்
வெளிநாடுகளில் வாழும் இளையோர்கள் தமிழில் பேசி பழக கூடிய நிலைமை பெரும்பாலானோருக்கு அவர்களின் வீடுகளில் தான் கிடைக்கும். அதுவும் நேரம் இருக்குமா? எல்லோருக்கும்.
நான் என்ன சொல்லவருகிறேன் என்றால் அவர்கள் தமிழை மறக்காமல் இருக்க ஒரு ஊடகம் தேவை. தமிழர் என்ற உணர்வு வர ஓரு ஊடகம் தேவை.
அவற்றின் மூலம் தமிழ் அறிவதை விட வேறு என்ன வழி இருக்கிறது.
நானோ நீங்களோ 100 வீத தமிழை எதிர்பார்க்காமல் 70வீதத்தையாவது தமிழீழம் அடையும்வரை காப்பாற்றலாம் அல்லவா?

