Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிறீலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளது
#4
,அடுத்த சனாதிபதி வேட்பாளருக்காக யாரை நிறுத்தலாம் என்று சர்வதேச வானொலி ஒன்று நடாத்திய கருத்துக்கணிப்பீட்டில் லக்ஷ்மன் கதிர்காமரின் பெயருக்கு அதிக வாக்கு கிடைத்து வருவதாக செய்தி வந்ததோ இல்லையோ-
கதிர்காமர் மீண்டும் காற்றில் மிதக்க... கனவில் மிதக்க தொடங்கிவிட்டார் போலும்.



இப்போது அவர் தானே சனாதிபதி என்ற தோரணையில் கருத்துக்களையும் அறிக்கை களையும் விடத்தொடங்கிவிட்டார்.

நாளுக்கொரு நாடாகச் சென்று வேளைக்கொரு அறிவுக்களை செய்துதான் சொன்னாலென்ன… சனாதிபதி சென்னாலென்ன… எல்லாம் ஒன்று தான் என்ற தொனிப்பட வாயில் வருவதையெல்லாம் உளற வரும் கதிர்காமர்.

சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வென்றினை மேற்கொள்ளுமாறு எவரும் எவரும் எம்மை நிர்பந்திக்க முடியாது என்றுள்ளார்.

அதுமட்டுமல்ல ஒரு நாட்டில் இரு இராணுவம், இரு கடற்ப்படை இருக்கவே முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த இரு விடயங்களும் சில செய்திகளை சொல்வதாகவே உள்ளன.

அதாவது இலங்கையரசு சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வுக்கு தயாரில்லை. எனவே அதையாரும் எம்மீது திணிக்க வேண்டாம் என்றே கதிர்காமர் எச்சரிக்கை சமிக்ஞையை முதலாவது கருத்தில் தெரிவித்துள்ளார்.

அடுத்து, ஒரு நாட்டில் இரு இராணுவம் இரு கடற்படை (இரு விமானப்படை என்று அவர் சேர்த்திருக்கலாம்…) இருக்க முடியாதென்றால். விடுதலைப் புலிகளை போரில் தோற்கடிக்க வேண்டும் என்ற கருத்து நிலைப்பாட்டிலேயே அரசு இன்னமும் உள்ளது என்பதை அவர் குறிப்பாக உணர்த்தியுள்ளார்.

அது மட்டுமல்ல இந்தியா முன்வைக்கும் தீர்வையே அரசு ஏற்றுக்கொள்ளும் என்பதை உணர்த்த விரும்பிய இவர் இலங்கையில் எந்த வகையான இறுதித்தீர்வை இந்தியா எதிர்பார்கின்றதென்பதை அது கூறுவதற்குரிய நேரம் இதுவாகும என்ற கூற்றின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஆக மொத்தம் தமிழ் மக்களின் அபிலாஷ்களை உள்ளடக்கியதாக ஒரு நியாயமான அரசியல் தீர்வுக்கு அரசு தயாரில்லை என்ற செய்தியை எதிர்காலச் சனாதிபதி கதிரைக் கனவில் காற்றில் பறக்கும் கதிர்காமர் லண்டனில் வைத்து தெரிவித்துள்ளார்.

சுரி அது அவரின் வழமையான எஜமான விசுவாச ‘ஊளை’ என ஒதுக்கிவிடுவோம் -

ஐயா கதிர்காமரே முன்னர் இப்படித்தான் பிரதமர் கதிரைக்கணவில் நீங்கள் இருந்த போது எல்லோரும் காலை வாரி விட்டது நினைவிருக்குத்தானே…! கவனம்… ஜாக்கிரதையாக காற்றில் மிதவுங்கள்.

Eelanaatham
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply


Messages In This Thread
[No subject] - by eelapirean - 04-03-2005, 12:27 AM
[No subject] - by thamilvanan - 04-03-2005, 03:09 AM
[No subject] - by eelapirean - 04-03-2005, 03:45 AM
[No subject] - by sinnappu - 04-03-2005, 03:49 PM
[No subject] - by Mathan - 04-03-2005, 04:44 PM
[No subject] - by kuruvikal - 04-03-2005, 04:54 PM
[No subject] - by Mathan - 04-03-2005, 04:56 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)