09-10-2003, 06:17 PM
Kanani Wrote:ஆனால் குருவியண்ணை இதை ஒரு விஞ்ஞான அல்லது உளவியல் விவரண சித்திரமாக இன்னும் கூடிய விளக்கங்களோடு கொடுத்திருக்கலாம்....இந்திய சினிமாக்காரருக்கு காசுதான் குறி...எப்பொழுதுதான் சமுதாய நலனுக்காக படம் எடுக்கப் போகிறார்களோ?என்ன கணணி பயப்பிடுறியள். நாங்கள் சினிமாவுக்குள்ளதான் வளர்ந்தனாங்கள். ஆங்கிலப்படங்கள் வன்முறைப் படங்கள் நீலப்படங்கள் எல்லாம் அப்பவும் ஓடினது. அதுகளாலை எந்தப் பிரச்சனையும் வரயில்லை. பிறகு ரிவி யும் வந்திட்டுது. அதாலையும் பிரச்சனை வரேல்லை. அதுகள்தான் நாட்டைக் கெடுத்ததுபோலை உங்கட கதை. நீங்கள் இங்கை பார்க்கலாம்.. எல்லாம் செய்யலாம் ஒண்டுமில்லை. அங்கையும் உயரதிகாரியள் எல்லாம் பார்க்கலாம் ஒண்டுமில்லை. சின்னவை பார்க்கக்கூடாதெண்டுறது.. ஹிப்போக்கிறசி. உங்களுக்கு பார்க்கப் பிரச்சனையில்லாதபோது.. அவைக்கும் பிரச்சனையிருக்காது இல்லையோ..?
இநதப் படத்திலிருந்து கன விடயம் அறியக்கூடியதாக உள்ளது....விசித்திரநாட்டின் விசித்திர நகர் பற்றியும் அங்குள்ள இளசுகள் பற்றியும்....விசித்திர நகரில் புகுந்துள்ள டேற்றிங் கலாசாரம், எவ்வளவு இலகுவாக பள்ளி மாணவருக்கு கிடைக்கும் விபச்சாரிகள், காதலுக்கு புதிய வரைவிலக்கணம் (அது தான் பால்போல பதினாறில் எனக்கொரு கேள்பிரண்டு வேணும்...என்று பாடுறாங்கள்) காதல் இயற்கையாக வரும் என்றுதான் நினைச்சன்...இவங்களுக்கு காதல் ஒரு அத்தியாவசியத் தேவை போல கிடக்கு
இது புலம்பெயர் எம்மவரிடையே காணக்கூடியதாக உள்ளது...ஆனால் ஈழத்தில் இன்னும் வந்து சேரவில்லை...அங்கு பெற்றோருக்குத் தெரியாமல் புகைத்தல், மது அருந்தல் என்பன நடைபெறுவது கண்டிருக்கிறேன்.....இருந்தாலும் விசித்திர நாடு அருகில்தான் வியாதி தொற்றலாம்...அதைவிட புலம்பெயர் எம்மவர் மூலமும் தொற்றலாம்....ஈழத்துப் பெற்றோரே வருமுன் காப்பீர்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

