09-10-2003, 04:01 PM
இது குமுதம்
பொறுப்புணர்வே இல்லாமல் பெண்களிடம் ஜொள்விட்டுத் திரியும் ஐந்து விடலைப் பையன்கள் வாழ்க்கையில் அடிபட்டதும், எதார்த்தத்தை உணர்ந்து ஜெயித்துக் காட்டுகிறார்கள்.
அந்தப் பொறுப்பற்றுத் திரியும் காலகட்டத்தில், அவர்கள் செய்யும் காரியங்களை, பேசும் உரையாடல்களை ‘உரித்து’க் காட்டியிருக்கிறார் ஷங்கர். பார்ப்பவர்களைத் திகைக்க வைக்கும் காட்சிகள். டீன்_ஏஜ் வயதில் ஏற்படும் செக்ஸ் ஆர்வம் குறுகுறுப்பானது. புதிர் நிறைந்தது. ஏன், கொஞ்சம் பயம் கொண்டது என்றுகூடச் சொல்லலாம்.
ஆனால், ‘பாய்ஸ்’க்கு கூச்ச நாச்சம் ஏதும் இல்லை. எல்லாவற்றையும் ‘ஙிrமீணீளீ tலீமீ ஸிuறீமீ’ சித்தாந்தப் படி போட்டு உடைக்கிறார்கள். விலைமாதுவை வீட்டுக்குக் கூட்டி வருகிறார்கள். கட்டிலை ஆட்டுகிறார்கள். பையன்கள் படுத்திருக்கும் கார் குலுங்கிக் குலுங்கி ஆடுகிறது. பஸ்ஸில், ரங்கநாதன் தெருவில், துணிக்கடைகளில் பெண்களை முன்பின் உரசுகிறார்கள். (சாணம் பிடிப்பது என்கிற அடைமொழியுடன்) எட்ஸட்ரா... எட்ஸட்ரா... ஷங்கர் படம்தானா என்று சந்தேகமே வந்து விடுகிறது.
ஹாலிவுட் படங்களில் கொச்சை வசனங்களும் நேரடியான காட்சிகளும் சர்வ சாதாரணமாய் ஆகியிருக்கும் நிலையில் தமிழுக்கும் அந்த ஸ்டைல் அசந்தர்ப்பமாக வந்திருக்கிறது.
முதல் பாடல் ‘எனக்கொரு கேர்ள் ஃப்ரண்ட்’ கிராஃபிக்ஸில் அந்த டிஜிட்டல் பெண் வசீகரிக்கிறாள். ஆனால், ‘பூம்பூம்’ பாட்டில் வரும் கிராஃபிக்ஸைப் பலமுறை பார்த்துவிட்ட அலுப்பு. டைம் ஸ்லைஸ், மோஷன் காப்ச்சரிங் டெக்னிக்குகள் இனிமையாகக் கையாளப்பட்டிருக்கின்றன.
ஐந்து பையன்களும் சரி, அந்தப் பெண் ஹரிணியும் சரி, முதல் படம் என்பதே தெரியாத அளவுக்கு உற்சாகமாய் நடித்திருக்கிறார்கள். ஒவ்வொரு காட்சியிலும் இளமை கொப்பளிக்கிறது.
ஏ.ஆர். ரஹ்மானின் இசையும், ரவி.கே. சந்திரனின் காமிராவும் படத்திற்கு பலம். கிளைமாக்ஸ் பாட்டில் ரஹ்மான் ஹை பிட்ச்சில் பிய்த்து உதறுகிறார்.
இளைஞர்கள் கெட்டுப் போவதற்குக் காரணமாய், பத்திரிகைகளையும், டி.வி.யையும் (டிஸ்கவரி சேனல் கூடவாம், வாட் எ லாஜிக்!) சொல்கிறார் விவேக். முக்கியமான மற்றொன்றை விட்டுவிட்டார், சினிமா.
‘பொடா’வில் கைதாகி, சிறையில் எல்லோரும் அடிபட்டு, மிதிபட்டு, உடைந்து போகும் காட்சிகள் பவர்ஃபுல். ஏ.வி. ரமணன் ஒரு மிடில் கிளாஸ் அப்பாவை அற்புதமாய் பிரதிபலித்திருக்கிறார்.
லொகேஷன்கள் ஆடை அலங்காரங்கள், செட்டுகள், கிராஃபிக்ஸ், டெக்னிகல் விஷயங்கள் என்று காசை அள்ளி இறைத்திருக்கிறார்கள். படம் முழுக்க ஒரு ‘ரிச்னஸ்’ தெரிகிறது.
முற்பாதி ஆபாசம், பிற்பாதி உபதேசம்.
நாட்டி பாய்ஸ்!
--------------------------------------------------------------------------------
‘பூம்...பூம்’ பாடலுக்கு லாஸ் ஏஞ்சலஸில் இருக்கும் ‘டிஜிட்டல் ஆர்ட் மீடியா’வின் மார்க் கோபே, விஷ§வல் சூப்பர்வைசராகப் பணியாற்றி இருக்கிறார். பிரசாத் ஸ்டூடியோவில் எட்டு நாட்கள் ஷ¨ட் செய்த பின்பு, ஷங்கரும், ராஜுசுந்தரமும் லாஸ் ஏஞ்சலஸ் சென்று ‘மோஷன் கேப்ச்சர்’ முறைப்படி நான்கு நாட்கள் ஷ¨ட் செய்திருக்கிறார்கள்.
அண்ணாசாலையில் ஹீரோ ஆடையில்லாமல் ஓடும் காட்சிக்காக விசேஷ அனுமதி பெற்று ஐந்து நாட்களாக தினமும் இரவு பதினொரு மணியிலிருந்து காலை ஆறு மணி வரை ஷ¨ட் செய்திருக்கிறார்கள். அக்காட்சியில் வரும் பஸ், கார், டூ வீலர்கள், சைக்கிள்கள், லாரிகள் எல்லாமே ஷ¨ட்டிங்குக்காக வாடகைக்கு அமர்த்தப்பட்டவைதான்.
டாஸ்மேனியாவிலுள்ள மிகப் பெரிய லாவண்டர் தோட்டத்தில் ஷ¨ட் செய்திருப்பது இதுதான் முதல் முறை. ஷ¨ட்டிங்கின்போது, லாவண்டர் பூக்களைத் தொட யாரையும் அனுமதிக்கவில்லை. காரணம், அப்பூக்களிலுள்ள லட்சக்கணக்கான தேனீக்கள் கொட்டிவிடும் என்பதால்தான்.
‘மாரோ மாரோ’ பாடலுக்காக கொச்சியிலுள்ள ஸ்டேடியத்தில் அங்குள்ள 2000 ஜூனியர் ஆர்டிஸ்டு களை வைத்து ஷ¨ட் செய்திருக்கிறார்கள். பிறகு ‘இமேஜ் குளோனிங்’ முறைப்படி ஸ்டேடியம் முழுவதும் ரசிகர்கள் இருப்பதுபோல கிராஃபிக்ஸில் மாற்றினார்கள்.

ஷங்கரிடம் ஒரு கேள்வி
இளைஞர்களிடம் எத்தனையோ பாஸிட்டிவ்வான விஜயங்கள் இருக்க, வெறும் செக்ஸிற்காக அலையும் கூட்டமாக அவர்கள் சித்திரிக்கப்பட்டிருப்பது சரியா? ஷென்டில்மேனிற்கு அப்புறம் உங்கள் படங்களில் வல்காரிட்டி படிப்படியாகக் குறைந்து அழுத்தமான படங்களைக் கொடுத்த நீங்கள், திடீரென்று இந்த அளவுக்கு இளைஞர்கள் றிஷீrtrணீஹ் பண்ண வேண்டிய அவசியம் என்ன?
ஷங்கர்: வெற்றிபெற்ற இளைஞர்களின் வாழ்க்கையை பாசாங்கு இல்லாமல் நேர்மையாகச் சொல்லியிருக்கிறேன். பொறுப்பு இல்லாமல் சுற்றித் திரியும்போது பொறுப்பு இல்லாதவர்களாகவும், பொறுப்பு வந்தவுடன், பொறுப்பானவர்களாகவும் காட்டியிருக்கிறேன். அந்த வயதிற்குண்டான தெரிந்துகொள்ளும் ஆர்வங்கள், அத்துமீறல்களை, குழப்பங்களை, கற்பனையாகச் செய்யாமல் நிஜவாழ்க்கையில் நடக்கின்ற, நடந்த சம்பவங்களை வைத்துத்தான் சொல்லியிருக்கிறேன்.
அது இளமையின் ஒரு பகுதி மட்டுமே! அதை மட்டும் இல்லாமல் அவர்களின் காதலை, கலாசார பயங்களை, கௌரவம் பார்க்காமல் எந்த வேலையையும் செய்யும் மனப் பக்குவத்தை, சொந்தக் காலில் நிற்கும் மன உறுதியை, நட்புக்காகச் செய்யும் தியாகத்தை, உழைத்து முன்னேறுவது போன்ற பல பாசிடிவான விஷயங்களைச் சொல்லியிருக்கிறேன். கதை நியாயப்படித்தான் காட்சிகளும். ஒருசில காட்சிகளை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தால், அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் காட்சிகள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

படத்தில் அதிர்ச்சிதரக்கூடிய அளவில், நேரடியான வசனங்கள் இருக்கின்றன. பலத்த எதிர்ப்பு வரும் என்று தெரிந்தேதான் அவை எழுதப்பட்டனவா?
சுஜாதா: நீங்களே அதிர்ச்சி தரும் வசனம் என்று தீர்மானித்து, அதற்கு எதிர்ப்பு இருப்பதாகவும் தீர்மானித்து விடுகிறீர்கள். ஒருமுறை தியேட்டருக்குப்போய் மக்களுடன் இந்தப் படத்தைப் பாருங்கள். தெரிந்தே யாரும் தப்பு செய்யமாட்டார்கள். நல்ல காரியம்தான் செய்வார்கள்.