04-01-2005, 06:31 PM
இப்போதென்றல்ல...இப்ப பலகாலத்துக்கு முன்னாள் இருந்தே ஆண் - பெண் கதைக்கிறத யாரும் தப்பாப் பாக்கிறதில்ல...இருந்தாலும் முன்னர் அப்படிப் பார்க்காதவர்கள் திருமணத்தின் பின்னர் தன் கணவனோ மனைவியோ மற்றவர்களுடன் கதைப்பதைப் பலர் சந்தேகத்தோடு பார்ப்பது நடைமுறையில் இருக்கு....அது மேற்கில் இருந்து கிழக்கு வரை இருக்கு... அதையும் போக்கினால் நல்லது...கதைக்கிறதால கற்புப் போயிடும் என்ற சனங்கள் இருக்கத்தான் செய்யுதுகள்..கற்பென்பது தனி நபர் ஒழுக்கம்...ஒழுக்கம் என்பது உயிரினும் மேலானது...அதுவும் ஆறறிவு படைத்த மனிதனை மனிதனாக காட்ட அவசியமும் கூட...! அது சாதாரணமாக ஆணும் பெண்ணும் கதைப்பதால் பறிபோயிடாது...அவரவர் தங்கள் தங்கள் ஒழுக்கதுக்கான எல்லைகளை மீறாத வரை...! சிலர் அப்படி எல்லை மீற எண்ணுவோரையும் மீறாமல் வழி நடத்தக் கூடிய பக்குவத்தில் இருப்பார்கள்...சிலர் அதைக் கடந்து இருப்பார்கள்...! எனவே தனி நபர்தான் தீர்மானிக்க வேண்டும்...தனது எல்லை எதுவரை இருக்க வேண்டும் என்பதை...!
இதையெல்லாம் கருத்தில் கொண்டு பார்த்தால் இருவரும் மனதால் தம்மைத் தாமும் ஒருவரை ஒருவரும் புரிந்து கொண்டு காதலித்து... திருமணம் ஆகிய பந்தததுள் வந்து இல்லறத்தை நடத்துவதே பாதுகாப்பானதும் நீடித்து நிலைக்ககூடிய அன்பைப் பெற சிறந்ததும் ஆகும்....!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>