04-01-2005, 05:16 PM
Quote:சாதகம் பார்த்துதான் இப்போதும் பெரும்பாலான திருமணங்கள் ஈழ தமிழரிடையே நடக்கின்றன. ஆணா பெண்னோ ஒருவர் சாதகம் பார்க்காமல் திருமணம் செய்ய விரும்பினாலும் மறுதரப்பு அப்படி செய்ய ஒத்துழைக்க வேண்டுமே.
காதலித்து திருமணம் செய்து வாழ்தல் நல்ல வழிதான் ஆனால் காதலிப்பத்தற்கு ஒருவரை தெரிந்திருக்க வேண்டும் புரிந்துணர்வு வேண்டும் இதற்கு ஆண் பெண் பேசி பழக சமுகம் பெரும்பாலும் அனுமதிப்பதில்லையே?
சிலர் இப்பவும் பழமைவாதம் பேசிக்கொண்டிருந்தாலும் காலப்போக்கில அவர்கள் எல்லாம் மாறிவிடுவார்கள். இப்போது ஆண்பெண் கதைத்து பழகிறத தப்பாய் யாரும் எடுப்பதில்லை. ஆனால் காதல் என்று வரும்போதுதான் பிரச்சினையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள. இன்னும் ஒரு தலைமுறைக்குப் பிறகு இதெல்லாம் மாறிவிடும் என்று நம்புகிறேன். எப்ப இந்த மூடநம்பிக்கைகளும் சாதியமும் இல்லாமற் போகுதோ அப்பத்தான் காதற் திருமணத்திற்கு முழுமையான அங்கீகாரம் கிடைக்கும்.

