Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உருப்படியாய்... என்ன செய்தேன்...?
#3
வாழ்த்துக்கள் நண்பனே.. (சாPஷ்..)
நுன் கவிதைத்திறன் வளர்ந்து நிற்க
என் மனப்புூர்வமான வாழ்த்துக்கள்.

<b>உருப்படியாய் என்ன சேய்தேன்.......?</b>

கேட்கிறேன் - என்
சிதறுண்டிருக்கும்
இதயத்தைக் கேட்கிறேன் !

மண்ணின் வாசனையை
இழந்த என் உள்ளத்தைக்
கேட்கிறேன்..

மதிகெட்டு மானுடன்
தறிகெட்டுத் திரிவதை
விதியென்று து}ரநின்று
பலமிழந்து பார்க்கும் போது - மீண்டும்
என் இதயத்தைக் கேட்கிறேன்..

உண்மை உண்மையென்று
உலகில் நடக்காததெல்லாம்
உலகம் தெரியாதவர்
இருப்பர் என்றெண்ணி
உருட்டிச் செல்கிறார் களத்திலே !

இப்போதும் கேட்கிறேன்
என் இதயத்திடம் -
என்னதான் உருப்படியாய் செய்தேன் என்று..

கார்முகில் மறைத்தாலும்
சுூரியன் அழிவதில்லை..சற்றே
மறைகிறான் அவ்வளவுதான்..
அவரவர் பெருமைக்காய்
அந்தி பகலென்றின்றி
பாடாய் மாடாய் உழைக்கிறார்...

ஏனிந்த உழைப்பை
அந்தத் தேசம்........
குண்டுச் சத்தங்களால்
பம்பர் தாக்குதலினால்
கன்னி வெடிகளினால்
அவலக் கோஷங்களால்

உடைமை இழந்து
உணர்வினை இழந்து
உயிரின் உயிரையே இழந்து
திசை போன போக்கெல்லாம்
என் பாட்டனும் பாட்டியும்
பேத்திகளும் மைத்துனன்களும்
அண்ணன் மாரும் அக்கா மாரும்
அயல் வீட்டாரும்
அடுத்த ஊராறும்
அன்பின் உறவுகளும்
உடன் பிறவாச்
சகோதர சகோதரிகளும்
உற்றார் உறவினர்களும்....

தஞ்சம் தஞ்சம் - எனக்கல்ல எனக்கல்ல
பசி பசி - எனக்கல்ல எனக்கல்ல
கடவுளே கடவுளே - எனக்கல்ல எனக்கல்ல
உயிரே உயிரே - எனக்காகவல்ல..

என் புத்திரனுக்காய் புத்திரிக்காய்
பேரனுக்காய் பேத்திக்காய்
கொள்ளுப்பேரனுக்காய்........
கொஞ்சம் என்னை வாழவிடு என்று
ஒவ்வொரு அம்மையும் அப்பனும்
பாட்டனும் பாட்டியும்
சோதரங்களும்.........கதறி அழுதனவே !
கதறி அழுதனவே.....!

அப்போது உழைப்பாய்த் தரவில்லை ?

அந்தக் காட்சிகளைக்
கண்ட பின்பும்
நாளைய தேசமது
நமக்காய்ப் பிறக்குமென்று - நம்பி

சென்று விடு மகனே சென்றுவிடு
ஊரை விட்டுச் சென்று விடு
உன் தாயை விட்டுச் சென்றுவிடு
உன் மண்ணைவிட்டுச் சென்றுவிடு

நாளையொரு நாள்
நாம் வென்றிடும் காலம் வரும்.. !
சென்றுவிடு என்று.........

என்னைத் தட்டித் தடவி
தாமாகத் துன்பங்களை
நாளைய சமுதாயத்திற்காய்
தாங்கி நின்ற..

வீட்டுக்கொரு மைந்தனை
விடுதலைக்காய் தந்திட்ட
அத்தனை உறவுகளையும்...

மீண்டும்........

எண்ணிப்பார்த்தபோது - என்
இதயத்தைக் கேட்கிறேன்..
உருப்படியாய் இதுவரை
என்ன சேய்தேன் என்று..

புரியவில்லை...
விடை சொல்ல
இதயத்திற்கும் தெரியவில்லை !

ஏதோ ஒன்றை
இருந்தும் இல்லாததாய்
உணரமறுத்து உறங்கிக்கிடக்கிறது
மானுட இதயம் !

அது மட்டும் தெரிகிறது - புரிகிறது.
Reply


Messages In This Thread
[No subject] - by Paranee - 09-10-2003, 09:47 AM
[No subject] - by vaiyapuri - 09-10-2003, 10:35 AM
[No subject] - by nalayiny - 09-10-2003, 02:05 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)