09-10-2003, 08:14 AM
<b>மண்ணில் வந்த நாள்...!</b>
என்றும் என்
நெஞ்சில் உயிர்கொண்டாய்
அன்புக் காதலுக்கு
ஆணிவேராய்...!
ஆனந்தக்காற்றின்
அவதாரமே...
இன்று நீ
மண்ணில் வந்த நாள்
இன்றும் உன்னை
வாழ்த்துகிறேன்...
புகழும் மலருமாக
மகிழ்வோடிருப்பாய் நீ...!
ஒன்று பொருள் இன்பம்
என உணர்ந்தேன்
தாயுமானவளே.........
நின்று நிமிர்ந்து ஒளிர்வாய்....
ஒளிவீசும் ஒவியமாய் நீ...!
உன்னை ஒரு
பார்வைகேட்டேன்
கண்கள் பேசும்-சில
வார்த்தை கேட்டேன்
கன்னத்தில் வந்த ஈரமும்
இதயத்தில் நொந்த காயமும்தான்
எனக்காக நீ கொடுத்தது...!
ஈரநிலாவில் இருந்து
உடைந்து விழுந்த
ஒளித்துண்டாய்...
என்னருகில் நீ...
ஒளிவீசி நடந்தாலும்
தொட்டுவிட முடியாத
தொலை தூரமாய்த்தான்
இன்னும்...
நானும் என் காதலும்...!
இருப்பினும்.........
என் இதய அறையில் இருந்து
உடலெங்கும் பாயும்
இரத்தத்துளிகள் ஒவ்வொன்றும்
சொல்லிக்கொண்டே இருக்கிறது
இப்படி.........
இலைகளின் உதிர்வு
மரங்களின் மரணம் அல்ல
அது....
இலைகளின் இடைவேளை
மீண்டும் வசந்தகாலம் வரும்
எனக்கும் அதுபோலவே.....
மீண்டும் நீ
வசந்தமாய் வரலாம்...!
மீண்டும் நாம்...
கண்களால் கதைபேசலாம்...!
காதல் கொள்ளவென
என் வாசல் தேடி நீ வரலாம்
ஆனால்...........
அந்த நாள் வரும் வரை.....
நான் மண்ணில் இருப்பேனா.....???????
இருந்தால்...
கட்டாயம் காத்திருப்பேன்
உன்னோடும்....
உன் கண்ணோடும் கலந்துபோக...!!!
த.சரீஷ்
10.09.2003 (பாரீஸ்)
என்றும் என்
நெஞ்சில் உயிர்கொண்டாய்
அன்புக் காதலுக்கு
ஆணிவேராய்...!
ஆனந்தக்காற்றின்
அவதாரமே...
இன்று நீ
மண்ணில் வந்த நாள்
இன்றும் உன்னை
வாழ்த்துகிறேன்...
புகழும் மலருமாக
மகிழ்வோடிருப்பாய் நீ...!
ஒன்று பொருள் இன்பம்
என உணர்ந்தேன்
தாயுமானவளே.........
நின்று நிமிர்ந்து ஒளிர்வாய்....
ஒளிவீசும் ஒவியமாய் நீ...!
உன்னை ஒரு
பார்வைகேட்டேன்
கண்கள் பேசும்-சில
வார்த்தை கேட்டேன்
கன்னத்தில் வந்த ஈரமும்
இதயத்தில் நொந்த காயமும்தான்
எனக்காக நீ கொடுத்தது...!
ஈரநிலாவில் இருந்து
உடைந்து விழுந்த
ஒளித்துண்டாய்...
என்னருகில் நீ...
ஒளிவீசி நடந்தாலும்
தொட்டுவிட முடியாத
தொலை தூரமாய்த்தான்
இன்னும்...
நானும் என் காதலும்...!
இருப்பினும்.........
என் இதய அறையில் இருந்து
உடலெங்கும் பாயும்
இரத்தத்துளிகள் ஒவ்வொன்றும்
சொல்லிக்கொண்டே இருக்கிறது
இப்படி.........
இலைகளின் உதிர்வு
மரங்களின் மரணம் அல்ல
அது....
இலைகளின் இடைவேளை
மீண்டும் வசந்தகாலம் வரும்
எனக்கும் அதுபோலவே.....
மீண்டும் நீ
வசந்தமாய் வரலாம்...!
மீண்டும் நாம்...
கண்களால் கதைபேசலாம்...!
காதல் கொள்ளவென
என் வாசல் தேடி நீ வரலாம்
ஆனால்...........
அந்த நாள் வரும் வரை.....
நான் மண்ணில் இருப்பேனா.....???????
இருந்தால்...
கட்டாயம் காத்திருப்பேன்
உன்னோடும்....
உன் கண்ணோடும் கலந்துபோக...!!!
த.சரீஷ்
10.09.2003 (பாரீஸ்)
sharish

