04-01-2005, 09:41 AM
<b>கொழும்பில் மைக்கல் ஜாக்ஸனின் நிகழ்ச்சி! </b>
ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நிதிசேகரிக்கும் நிகழ்ச்சி ஒன்றை தயாரித்து வழங்க பொப்பிசை சக்கரவர்த்தி மைக்கல் ஜாக்ஸன் இலங்கைக்கு வரவுள்ளார் என்று தெரியவருகிறது.
சிறுவர் பாலியல் துஷ்ப்பிரயோக வழக்கொன்றில் குற்றம் சாட்டப்பட்டு தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றில் ஜாக்சனுக்கு எதிரான விசாரணை நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் நீதிமன்றின் விசேட அனுமதியைப்பெற்று ஜாக்ஸன் கொழும்பு வந்து நிகழ்ச்சி நடத்துவது குறித்து ஜாக்ஸனின் சட்டத்தரணிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
நிகழ்ச்சி திகதி குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. ஆனால் மூன்று மணிநேர நிகழ்வாக நடைபெறவுள்ள இந்த காட்சியில் ஜாக்ஸனின் பிரபால அல்பங்களான் ~டேஞ்சரஸ்| ~ஓவ் த வோல்| ~த்ரில்லர்| ~ப்ளக போன்றவற்றிலிருந்து பாடல்களை படி ஆடுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை ஆழிப்பேரலையால் பாதி;க்கப்பட்ட இடங்களுக்கும் செல்லவுள்ள அவர் தனது அடுத்த அல்பத்துக்குரிய காட்சிகளை அங்கு பதிவுசெய்து கொள்வார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
நன்றி-புதினம்.