09-10-2003, 07:30 AM
வெப்புலக தகவல்
இளைஞர்களை சீரழிக்கும் "பாய்ஸ்" படத்தை தடை செய்க - நாடார் பேரவைத் தலைவர் கோரிக்கை!
வெள்ளி, 5 செப்டம்பர் 2003
இளைஞர்களை சீரழிக்கும் பாய்ஸ் படத்தை தடை செய்யவேண்டும் என்று நாடார் பேரவைத் தலைவர் ஏ.நாராயணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திரைப்படம் என்பது பொதுமக்களுக்கு நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்லும் சரியான சாதனம். ஆனால் பாய்ஸ் படத்தில் வரக்கூடிய காட்சிகளும் வசனங்களும் இன்றைய இளைஞர் சமுதாயத்தையும், மாணவ சமுதாயத்தையும் சீரழிப்பதாக இருக்கிறது.
5 மாணவர்கள் ஒன்று சேர்ந்து அதில் ஒரு மாணவனின் தாய்-தந்தை ஊருக்கு செல்லும்பொழுது, அந்த மாணவனின் வீட்டுக்கே ஒரு விபச்சாரத் தொழில் புரியும் பெண்ணை அழைத்து வந்து 5 மாணவர்களும் வரிசையாக உள்ளே அந்த பெண்ணை அனுபவித்து விட்டு வருவது போல் நடிப்பது - மதுக்கடை பாருக்கு சென்று தண்ணி அடிப்பது, நண்பர்களின் வீடுகளிலேயே பெற்றோர்களுக்கு தெரியாமல் தண்ணி அடிப்பது என்று திரையில் காட்டி இருக்கிறார்கள். எங்காவது ஒரு இடத்தில் மிக மிக சிறிய சதவீதத்தில் மாணவர்கள் சிலர் செய்யும் தவறுகளை திரையில் காட்டி மற்றவர்களையும் அந்த காரியங்களை அனுபவிக்க தூண்டும் செயலை இயக்குனர் ஷங்கர் செய்துள்ளார்.
கூட்டம் நிறைந்த வீதிகளில் நடக்கும்போதும், பஸ்களிலும், கூட்டமுள்ள கடைகளிலும் பெண்களை இடித்து சுகம் காணும் நோக்கத்தில் மாணவர்கள் அலைவது போல் காட்டுவது அவர்களுடைய இமேஜையும் எண்ணங்களையும் எந்த அளவு பாதிக்கும் என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்.
நகைக்கடையில் வரிசையாக பெண்களை நிற்க வைத்து அவர்கள் பின்புறங்களை ஒருவன் தடவிக் கொண்டே வரும் காட்சி தமிழக பெண்களையே கேவலப்படுத்துவதுபோல் உள்ளது.
காதலிக்காக நிர்வாணமாக ஓடும் அளவிற்கு அடிமுட்டாள்களாக மாணவர் சமுதாயத்தை கேவலப்படுத்தி இருக்கிறார்கள். லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி பயிலும் சென்னை நகரில் 5 பேர் மட்டும் குட்டிச்சுவரில் உட்கார்ந்து இருப்பதால் ஒட்டுமொத்த சமுதாயமும் குட்டிச்சுவராகி விடாது. ஆனால் இந்தப் படம் மற்றவர்களையும் அந்த சிந்தனைக்கு தள்ளும் என்பது உறுதி.
ஸ்பென்சர் பிளாசா போனால் நெல்லிக்காய் சைஸ் முதல் தர்பூசணி வரை பார்க்கலாம் என்ற வசனங்கள் பெண் இனத்திற்கே களங்கம் ஏற்படுத்தக்கூடியது. மார்பகத்தை பெரிதாக்குவதற்கும், மார்பகத்தை இறுக்கமாக்குவதற்கும் இதுதான் எக்சர்சைஸ் என்பதை படத்திலா காட்ட வேண்டும். பெண்கள் "ஜிம்"மில் போய் தெரிந்து கொள்ள மாட்டார்களா?
ஷங்கர் இன்று வெற்றிபட இயக்குனர் வரிசையில் முதலாவதாக உள்ளார். சுஜாதா தமிழ் எழுத்தாளர் உலகில் முடிசூடா மன்னர் என்று அழைக்கப்படுபவர். ரகுமான் மேற்கத்திய இசையில் உலகப்புகழ் பெற்றவர். இவர்கள் ஒன்றாக கூட்டணி அமைத்து பச்சை ஆபாசத்தை படைத்து இந்திய கலாச்சார சீரழிப்பிலும் இந்த படத்தின் மூலம் முதல் இடத்தை பெற்றுவிட்டார்கள்.
ஜென்டில்மேன், முதல்வன், இந்தியன் போன்ற சமூக விழிப்புணர்வுடைய படங்களை கொடுத்த ஷங்கர் தன் கற்பனை வளத்தை இழந்து கசக்கி குப்பையில் போட வேண்டிய காட்சிகளை படமாக்கியிருப்பது வேதனைக்குரியது.
பிரமாண்டமான காட்சி அமைப்புகள், வியத்தகு இசை, பாடல்கள் என சிறப்பானதொரு படத்தில் களங்கம் ஏற்படுத்தும் காட்சிகளை வைத்து குடும்ப பெண்களையும், மாணவ-மாணவிகளையும் கேவலப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த படத்தை பார்த்து விட்டு மாணவர்கள் எல்லோரும் பேண்ட் ஜிப்பை திறந்து விட்டுக் கொண்டு திரிந்தால் அதற்கு இந்த மூன்று பேரும் தான் பொறுப்பு.
இளம் பிராயத்து ஆசைகளும், கார் அசைவதும் இதுபோன்ற தவறுகளும் இயல்பானதுதான். ஆனால் வக்கிரம் என்பது இருட்டுக்குள் தான் இருக்கவேண்டும். அது வெளி உலகுக்கு வந்தால் தமிழ் பண்பாடு, குடும்பம், எதிர்காலம், தாய்-தகப்பன் பாசம், ஒழுக்கம்-கட்டுப்பாடு கேள்விக்குறிதான். இந்தியா ஐரோப்பாவாக மாறி இருந்தால் இந்தப்படம் சரிதான்.
"ஷகிலா" படத்தை போடுவதற்கு என்று சென்னையில் சில தியேட்டர்கள் உண்டு. டெலிவிஷனில் கூட செக்ஸ் படங்களையும், பாடல்களையும் நள்ளிரவில்தான் போடுகிறார்கள். அதைவிட காட்சி அமைப்பு மோசமாக உள்ள இந்த படங்களை குடும்பத்தோடு நிச்சயம் பார்க்க முடியாது. தெரியாமல் ரிசர்வ் செய்து வைத்திருக்கும் பெண்கள்கூட முகம் சுளித்துக் கொண்டே தியேட்டரை விட்டு வெளியே வருகிறார்கள்.
மோசமான காட்சிகளை உடனே நீக்கிவிட வேண்டும். இல்லாவிட்டால் தமிழக அரசு தலையிட்டு இந்தப் படத்தை உடனடியாக தடை செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்" என்று ஏ.நாராயணன் கூறியுள்ளார்.