03-31-2005, 02:06 PM
இதயப் பராமரிப்பில் வாழ்க்கைத் துணையின் உதவி....!
நெடுநாள் வாழ்தல் என்பது நீண்ட ஆயுளோடு கூடிய வாழ்க்கை மட்டுமன்று. அந்த வாழ்க்கை நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும்இ உறவினர்களுக்கும் பயன்படும் விதமாய் வாழப்பட வேண்டும்.
கணவன்-மனைவி உறவு உடல் நலனுக்கு மட்டுமன்றி ஒட்டு மொத்தக் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும் உகந்ததாகும். அவ்வுறவில் ஏற்படும் நல்லவை மற்றும் தீயவனவற்றின் தொடர்ச்சி அல்லது விளைவுகள் வீட்டோடு நின்று விடாமல் அத்தனிப்பட்ட நபரின் பணி மற்றும் இதர வெளிப்புற நடவடிக்கைகளையும் பாதிக்கும்.
'ஆரோக்கியம் என்பது நோயற்ற" பலவீனமற்ற தன்மை மட்டுமல்லாது உளவியல்இ உடலியல் மற்றும் சமூகவியல் சார்ந்த நலனைக் குறிப்பதே" என உலக சுகாதார அமைப்பு வரையறுத்துள்ளது. இந்நிய கலாச்சாரத்திற்கும் ஆன்மீகம் முதுகெலும்பாய்த் திகழ்கிறது. ஆன்மிக நலன்இ மகிழ்ச்சி என்கிற இரு சொற்களில் ஆரோக்கியம் அடங்கியிருக்கிறது.
ஆன்மீகத்தில் நிறைவு பெற ஆச்சிர வாழ்க்கை மேற்கொள்பவரும்இ வனாந்தரங்களில் வசிக்கச் செல்பவரும் ஒரு சிலர் தாம். பெரும்பாலோர் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுத் தமது கடமைகளை நிறைவேற்றி உளவியல்இ ஆன்மீகம்இ சமூகம் சார்ந்த நலனுக்காய் உழைக்கின்றனர். 'கடமை வீரன்" என்பவன் இல்லற வாழ்வில் ஈடுபட்டு மனைவிக்கு நல்ல கணவனாய்இ குழந்தைகளிடம் அன்பு காட்டி ஆதரவு செய்யும் பெற்றோராய்இ தமது தொழிலில் சிறந்து விளங்குபவனுமாவான். பிறரது நலனுக்காய் வாழ்பவனே உண்மையில் வாழ்பவன். சுயநலமி இருந்தும் இறந்தவனாகவே கருதப்படுவான்.
ஒருவரது வாழ்க்கைத்துணை அவரது இதயத்தின் கவனிப்பில் மட்டுமன்றி ஒட்டுமொத்த ஆரோக்கியம்இ நீண்ட ஆயுள் இவற்றிலும் முக்கிய பங்கு வகிப்பவராவார். ஆரோக்கியம் என்பது நோயற்ற பலவீனமற்ற நிலைமட்டுமல்லாது உளவியல் உடலியல்இ சமூக ரீதியான நன்மைகளைப் பெற்றிருப்பதுமாகும். இவற்றை ஒருவர் தனித்து நின்று பெற முடியாது. உற்ற துணை அவசியம்.
தாம்பத்தியம் நடத்தும் இருவரில் ஒருவர் மட்டும் அறிவும் ஆற்றலும் பெற்றிருந்தால் போதாது. அவரது வாழ்க்கைத் துணையும் அத்தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். இல்லையேல்இ தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு கணவன் மனைவி உறவில் சிக்கல்கள் எழும். அதன் விளைவாய் குடும்பத்தில் அமைதி கெடும். கருத்து வேறுபாடு உருவாக வாய்ப்புக்கள் இல்லையெனில்இ கணவன்இமனைவி பரஸ்பரம் உற்சாகம்இ அன்புஇ நேர்மறை மனோபாவம் கொண்டு விளங்குவர். இதனால் வாழ்க்கைத்தரம் உயர்ந்து சுற்றுப்புறம் மற்றும் பணி செய்யுமிடத்தில் வெற்றி கிட்டுவதோடு இருவரது உடல் நலமும் ஆரோக்கியமாய்த் திகழும்.
உடம்பில் பொது ஆரோக்கிய கண்காணிப்பிற்கு அப்பால் ஒருவரது இதய நலக் கண்காணிப்பில் அவரது வாழ்க்கைத் துணை மூன்று நிலைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
1. மாரடைப்பைத் தடுத்தல்
2. மாரடைப்பில் இருந்து மீளும்நிலை
3. மாரடைப்பிற்குப் பின் மறுசீரமைப்புக் கட்டத்தில்
மாரடைப்பைத் தடுத்தல்
இந்தியாவில் மாரடைப்பில் பாதிக்கப்படுகிறவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் 40-50 வயதுக் கட்டத்தைச் சேர்ந்தவர்களேயாகும். அவர்களில் பெரும்பாலோர் ஆண்கள். எனவேஇ இதயப் பராமரிப்பில் குறிப்பிடத்தக்க அளவிலான பொறுப்பு பெண்களையே சாரும்.
மாரடைப்பைப் பொறுத்தவரை அவற்றிற்கான காரணிகளையோஇ தடுப்பு மருந்துகளையோ பற்றி அறிந்திருக்கவில்லை. நம்மவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அபாய காரணிகள் இவை:
புகைப் பிடித்தல்: படித்தவர்களில் பலருக்கும் இக்காரணியின் ஆபத்தான விளைவு நன்கு தெரிந்திருப்பினும் அக்கருத்தை குடும்பத்தாரோ அல்லது மனைவியோ அதிகாரத் தோரணையில் கூறுவதை அவர்கள் விரும்பமாட்டார்கள்.
எனவே புகைப் பிடிக்கும் பழக்கமுடையவரின் மனைவி அக்காரணியின் விளைவுகளை நிதானமாய் அன்புடன் மனதைத் தொடும்; வகையில் எடுத்துரைக்க வேண்டும். மாரடைப்பைத் தடுக்கும் அணுகு முறைகள் பற்றியும் விவாதிக்க வேண்டும்.
இரத்த அழுத்தம்: முறையான உடற்பயிற்சிஇ அதிக அளவு உப்பு உட்கொள்வதைத் தவிர்த்தல். ஆல்கஹாலின் அளவைக் குறைத்தல் மிதமிஞ்சி உன்பதைஇ பானங்கள் பருகுவதைக் குறைந்து உடல் பருமனாவதைத் தவிர்த்தல். யோகாஇ தியானம்இ இசைஇ ஆன்மீகக் கூட்டங்களுக்கு செல்லுதல் இவற்றின் மூலம் அமைதி பெறுதல்இ உட்கொள்ளும் மருந்துகளின் பக்கவிளைவுகளைக் கண்காணித்தல் இவை உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும்இ வராமல் தடுக்கவும் உதவும்.
இரத்தக் கொழுப்பினிகள்: உயர் இரத்தக் கொழுப்பினிகளைக் குறைக்க சக்தி வாய்ந்த மருந்துகள் உள்ளனவென்றாலும்இ மருந்தில்லா நடவக்கைகளை முதலில் மேற்கொள்ள வேண்டும் அவை கட்டுப்பாடான உணவுஇ உடற்பயிற்சியை உள்ளடக்கியதாகும்.
கொழும்புஇ இனிப்பு இல்லாத உணவு வகைகளையே நோயாளிக்கு வழங்க வேண்டும். ஒரு முட்டையில் 300மி.மி கொழுப்பினி உள்ளது. அசைவ உணவில்இ ஈரல்இ மூளை போன்றவை அதிகக் கொழுப்பினி உடையதாகும். உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்கிறவர் பால்இ பாலகப் பொருள்களைத் தவிர்த்தால் தான் கொழும்புகளின் அளவைக் குறைக்க முடியும். உண்ணத் தக்க பருப்பு கொண்ட கொட்டைகளிலும் உலர்ந்த பழங்களிலும் கொழுப்பினி இல்லையென்றாலும் அவற்றை அதீதமாய் உட்கொள்கிற போது 'கலோரிகள்" கூடி வெயிட் போட நேரும்.
உடற்பயிற்சியில் எடை குறைவதோடு இரத்தக் கொழுப்பினி அளவும் குறையும். மாரடைப்பில் இரத்தக் கொழுப்பினி மற்றும் டரைக் கிளிஸரைடுகள் வலுவான அபாய காரணிகளாய் கருதப்படுகிறவையாகும். தவறாமல் உடற்பயிற்சி செய்து வர நட்பார்ந்த கொழுப்பினி அதிகரித்து மாரடைப்பைத் தடுக்கும்.
மன இறுக்கத்தைச் சமாளித்தல்: மன இறுக்கத்தால் இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இது மாரடைப்பிற்கான எச்சரிக்கையோடு. இதைத்தூண்டும் காரணியுமாகும். எனவேஇ வாழ்க்கைத் துணையாய் அமையும் பெண் கோபம்இ மன இறுக்கத்துக்கான சூழ்நிலைகள் உருவாவதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு ஏற்பட்டாலும் அவற்றைச் சமாளித்து மாரடைப்பிற்கு வழி வகுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அத்தகைய சூழ்நிலைகளில் பொதுவான விளையாட்டுஇ பொழுதுபோக்குஇ இசை போன்றவற்றில் மனதை ஈடுபடுத்தி ஓய்வு வெறுவதன் மூலம் தம்முடைய குடும்பத்தினருடைய மகிழச்சிக்கு வகை செய்யலாம்.
மாரடைப்பு ஏற்பட்ட நிலை: மாரடைப்பின் போது பாதிக்கப்படுபவர் பல்வேறு அச்சங்களுக்காட்படுவார். மரணபயம்இ மீண்டும் மாரடைப்பு வருமோ என்கிற பயம்இ வேலையிழப்பு பற்றிய பயம்இ ஒட்டுமொத்த செயலிழப்புப் பற்றிய பயம். இவை குறிப்பிடத்தக்கவை.
திறமையான மருத்துவரால் சகதிவாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டாலும் பாதிக்கப்பட்டவரின் மனைவி நம்பிக்கையோட இருப்பது முக்கியம்.
கணவர் மருத்துவமனையில் நோய்ப்படுக்கையில் இருந்தாலும் அவரது வீட்டிலும்இ அலுவலகத்திலும் பணிகளுக்கு எந்தவித குந்தகமும் ஏற்படவில்லை. எல்லாம் சுமூகமாய் நடைபெறுகின்றது எனக் கூறி உற்சாகமளிப்பது மனைவியின் கடமை. நோயாளியுடன் எவரும் விவாதத்தில் ஈடுபட அவர் அனுமதிக்க கூடாது. பார்வையாளர்கள் சில நிமிடத்திற்கு மேல் அங்கே தங்கி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தாமும் கணவரிடம் தீவிர விவாதம் மேற்கொள்ள கூடாது.
மறுசீரமைப்புக் கட்டத்தில்: மாரடைப்பிற்குப் பின் மூன்று இருந்து நான்கு நாட்களில் மறுசீரமைப்புத் தொடங்கும். அந்நிலையில் எவ்வித சிக்கலும் ஏற்படக்கூடாது.
பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத் துணை மருத்துவர் மற்றும் உணவியல் நிபுணர் கூறும் அறிவுரைகளை நன்கு கவனித்து. வீட்டிற்குத் திரும்பியதும் முறையாகக் கடை பிடிக்க வேண்டும். அவை விட்டிலேயே சிகிச்சையை எளிதாய்த் தொடர உதவும்.
மாரடைப்பிற்குப்பின் ஆறு வாரத்தில் இயல்பான பாலியல் செயல் முறைகளில் ஈடுபடலாம். ஆனால்இ சில மருந்துகளால் அவ்வாற்றல் பாதிக்கப்படுமெனில்இ மாரடைப்பால் பாதிக்கப்பட்டவரும்இ அவரது வாழ்க்கைத் துணையும் மருத்துவரிடம் பிரச்சினைகளை வெளிப்படையாய் விவாதிக்கலாம்.
தங்களுக்குள் கலந்துபேசிஇ அன்போடு வாழும் தம்பதியர் மாரடைப்பு அபாயத்தை தவிர்ப்பதோடுஇ நீண்ட காலத்திற்கு நோயின்றி வாழ முடியும்.
நன்றி: சூரியன்.

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>