09-09-2003, 09:39 PM
yarl Wrote:படம் பார்க்காமையால் முழுதாக விமர்சிக்க முடியாமலுள்ளது.70 பதுகளிலை.. அரங்கேற்றம் அலைகள் என்று படங்கள்.. ஏ பத்திரத்தோடை வந்திச்சுது. அப்ப நான் பார்க்கேல்லை. உந்ந விசிடி யிலை கிட்டடியிலைதான் பார்த்தன்.
ஜீவன் படம் பார்த்தால் உங்கள் பார்வையில் படத்தை ஒருமுறை விமர்சியுங்கள்
அரங்கேற்றம் அதிலை ஒண்டுமில்லை.. கதை பாலச்சந்தரின்ரை பெண்ணியக் கதை.. என்ன சந்தர்ப்பவசத்தாலை விபச்சாரியாகி.. தங்கச்சியாருக்கு தன்னட்டை வந்த ஒருத்தனே மாப்பிள்ளையா வாறதை பொறுத்துக்கொள்ள வேண்டிய நிலை.. குடும்பத்தை காப்பாற்ற முன்னுக்குக் கொண்டுவர தன்னாலான உதவி முழுவதும் செய்யிறாள்.. கடைசியிலை மனநோயாளியாகிறாள்.. இந்தியாவிலை படு தோல்வி.. இலங்கையிலை அமோக வெற்றி.. பெண்களுக்கு அறிவுரை சொல்லுற படம்.. அப்பிடி அந்தக்காலத்திலையே நாங்கள் முன்னேற்றம்..
ஆனால் விமர்சனப்படி இது வயதுக்கோளாறுப் பெடியள் அடிக்கிற கூத்து.. முதல்பாதி ஆபசமாகவும்.. இரண்டாம்பாதி அறிவுரையாகவும் அமைந்திருப்பதாக எங்கோ வாசித்தேன். நேரடியாக எதுவுமில்லையாம்.. இருந்தாலும் பலதும் மறைமுகமாக காட்டப்படுகின்றதாம்.. அது தவிர இரகசியமாக வயதுப்பெண்களும் பார்த்து இரசிக்கக்கூடிய படம் என வாலிப வட்டங்கள் தெரிவிக்கின்றனவாம்.. இப்படிப்போகின்றது ஒரு விமர்சனம்.. இக்கால இளைஞர்களுக்குத்தான் அவர்கள் வயதுப் பெண்களைப்பற்றித் தெரியும்
ஏதொ.. "Class" என்றொரு ஆங்கிலப்படம்.. ஷங்கர் அதைப் பார்த்திருக்கக்கூடும்.. என்னைப்பொறுத்தவரை BOYS ஆங்கிலப் படத்தின் தழுவல்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

