Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ராமேஸ்வரம் கடலில் முளைத்த திடீர் தீவு
#1
<b>திருச்செந்தூர், தூத்துக்குடியில் இன்றும் கடல் உள்வாங்கியது</b>

<img src='http://img124.exs.cx/img124/7360/tiruchendurtsuna5005eq.jpg' border='0' alt='user posted image'>
மேஸ்வரம் அருகே கடல் பகுதியில் சுமார் 20 சதுர கி.மீட்டர் பரப்பளவுக்கு கடல் நீர் வடிந்து போய் திடீரென தீவு உருவாகியுள்ளது.அதே போல தூத்துக்குடி, திருச்செந்தூர் உட்பட பல பகுதிகளில் இன்றும் கடல், பல மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியது. இதனால் இப்பகுதிகளில் இன்றும் சுனாமி பீதி ஏற்பட்டது. பாண்டிச்சேரியில் பல பகுதிகளில் மீன்கள் குவியல் குவியலாக செத்து கரையொதுங்கின.

நேற்று மாமல்லபுரம், திருச்செந்தூர், தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் கடல்நீர் பல மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியது.இதே போல இன்றும் தூத்துக்குடி துறைமுகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடல் நீர் 500 அடி தூரத்திற்கு உள் வாங்கியது.

àத்துக்குடி தவிர, திருச்செந்தூர், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் கடல்நீர் பல மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கிச் சென்றது. இதனால் இப்பகுதிகளில் இன்றும் மக்களிடையே பீதி பரவியுள்ளது. தூத்துக்குடியில் இன்று காலை 11 மணியளவில் கடல் நீர் திடீரென உள்வாங்கியது. துøமுறகம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 அடி தூரத்திற்கு கடல் நீர் உள்ளே சென்றதால் தூத்துக்குடி மக்களிடம் பெரும் பீதி ஏற்பட்டது.

<img src='http://img124.exs.cx/img124/5939/ponditsunami5002px.jpg' border='0' alt='user posted image'>

நீர் உள் வாங்கியதால் கடலடித் தரைப் பகுதி, பாறைகள், கடல் தரையில் வளரும் செடிகள் ஆகியவை வெளியில் தெரிந்தன. திருச்செந்தூரில் பல மீட்டர் தொலைவுக்கு கடல் உள்ளே சென்றுவிட்டதால், கடல் தாவரங்கள், பாசி படிந்த பாறைகளை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.ராமேஸ்வரத்தில் பாக் ஜலசந்தியில் உள்ள 21 கண்டத் திட்டுகளின் அருகே உள்ள கடல் பகுதியில் ஒரு இடத்தில் சுமார் 20 சதுர கி.மீட்டர் அளவுக்கு கடல் நீர் வடிந்து போய் திடீரென தீவு உருவாகியுள்ளது. இது குறித்து மன்னார் வளைகுடா தேசியப் பூங்காவின் வார்டன் நாகநாதன் கூறுகையில்,

அலைகள் குறைகிற காலத்தில் 4, 5 மீட்டர் அளவுக்கு சில இடங்களில் கடல் நீர் வடிந்து தீவுகள் தோன்றும். ஆனால், இப்படி 20 சதுர கிமீ சுற்றளவுக்கு மிகப் பெரியே தீவே தோன்றும் அளவுக்கு கடல் நீர் வடிந்து போனது இதுவே முதல் முறை என்றார்.திருச்செந்தூரில் கடல் நீர் உள்வாங்குவதும் வெளியில் வருவதுமாக உள்ளது.

--------------------------------------------------------------------------------

¿ýÈ¢ ¾ðоÁ¢ú.. THATSTAMIL..
[b]

,,,,.
Reply


Messages In This Thread
ராமேஸ்வரம் கடலில் முளைத்த திடீர் தீவு - by selvanNL - 03-30-2005, 08:35 PM
[No subject] - by kuruvikal - 03-30-2005, 10:15 PM
[No subject] - by sompery - 03-30-2005, 11:16 PM
[No subject] - by ¸ÅâÁ¡ý - 03-30-2005, 11:56 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)