03-30-2005, 12:13 AM
நேற்றைய நிலநடுக்கம் சுனாமியை தோற்றுவிக்காதது ஏன்?
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40973000/gif/_40973645_earthquake_mar_map416.gif' border='0' alt='user posted image'>
நேற்று இரவு இந்தோனேஷியாவில் சுமத்ராத் தீவுக்கு சற்று மேற்கே இந்துமாக் கடலில் ஏற்பட்ட கடும் நில நடுக்கம், கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி நடந்ததைப் போன்ற ஒரு சுனாமிப் பேரலையை ஏன் தோற்றுவிக்கவில்லை என்கிற கேள்வி பெரிதாக எழுந்து நிற்கிறது.
அதற்கு விஞ்ஞானிகள் பல்வேறு காரணங்களை முன்வைக்கிறார்கள்.
முதலாவது, நேற்றைய நில நடுக்கம் மிகக் கடுமையானது கடந்த நூறு ஆண்டுகளில் நடந்த நில நடுக்கங்களில் எட்டாவது இடத்தைப் பெறுகிறது அது ரிக்டர் அளவில் எட்டு புள்ளி ஏழு என்று சக்தி வாய்ந்தது இருந்தாலும்கூட, இது ஒரு சுனாமியைத் தோற்றுவிக்கவில்லை என்பதற்கு ஒரு முக்கிய காரணம் அந்த நில அதிர்ச்சி முழுவதுமாக பூமிக்குள்ளாக ஏற்பட்டு வெடித்திருக்கிறது, கடற்படுகை அதனால் பெரிதாக அதிர்ந்து நகர்ந்துவிட வில்லை கடற்படுகை நகர்ந்தால்தான் சுனாமிப் பேரலை வரும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
இதுதவிர நேற்று நில நடுக்கம் ஏற்பட்ட இடம் வேறு, கடந்த டிசம்பர் மாதம் நில நடுக்கம் ஏற்பட்ட இடம் வேறு, அதுதான் முக்கியக் காரணம் என்கிறார், டாக்டர் ஜார்ஜ் பரராஸ் கரயானிஸ், ஹவாய்த் தீவில் இயங்கும் பசிபிக் மாக்கடல் சுனாமி எச்சரிக்கை நிலையத்துக்கு இயக்குநராக இருந்த இவர்.
இல்லை, இந்த இரண்டு நில நடுக்கங்களுக்கும் தொடர்பிருக்க வாய்ப்புண்டு, எனவே மேலும் நில நடுக்கங்கள் இப்பகுதியில் நிகழலாம் என்கிறார், பிரிட்டிஷ் விஞ்ஞானி டாக்டர் பிரயன் பாப்ட்டி.
கடந்த டிசம்பர் மாதம் 26-ஆம் திகதி நிகழ்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவையில் ஒன்பதை எட்டியது. இந்த நில நடுக்கம் அதை விட சக்தி குறைந்தது என்பது முக்கியம் என்கிறார் இன்னொரு பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜான் மெக்லாஸ்கி.
எப்படி இருந்தாலும் பலமான, மோசமான நில நடுக்கங்களுக்குப் பெயர்போன பகுதி இந்தோனேஷிய என்பதால் அப்பகுதியில் இதுபற்றிய கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டியிருக்கிறது. நிலநடுக்கம் வந்தாலும் சுனாமிப் பேரலை வருகிறதா என்பதை செய்மதிப் புகைப்படங்கள் வழி உடன் ஆராய்ந்து அறிவதன் தேவையும் வெகுவாக தற்போது உணரப்பட்டிருக்கிறது.
BBC Tamil News

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>