03-29-2005, 12:24 PM
shiyam Wrote:thivakar Wrote:அது நான் எடுத்த முடிவல்ல விஜி எடுத்த முடிவு நான் சம்பவம்நடந்த நாட்டையும் பாத்திரங்களின் பெயரையும்தான் மாற்றியிருக்கிறேன்Quote:உண்மைச் சம்பவத்தின் முடிவு எனக்கு தெரியாது...ஏன் சியாம் விஜியை கோழைதனமான முடிவை எடுக்கவிட்டீர்கள்...இதில் விஜியின் காதலா? சுகியின் காதலா? உண்மையானது என கூறமுடியாது....ஆனாலும் ஒரு ஆணை ஏமாத்திதான் தன்னுடைய காதலை நிறைவேற்ற வேண்டும் என்ற சுகியின் முடிவு முற்றிலும் தவறானது..........
அதையேன் கதையிலும் தொடர்ந்தீர்கள்... ஆண்கள் என்ன பெண்கள் என்ன வஞ்சகர்களின் வலையில் தெரியாமல் சிக்கிக் கொண்டால் அதற்கு மரணம் அல்லத் தீர்வு...எதிர்பார்த்தது கிடைக்காமல் விட்டால் மரணம் அல்லத் தீர்வு.. கிடைக்காததை மறந்து கிடைப்பதைக் கொண்டு வாழ்வை மகிழ்வாக்கி வாழ வேண்டியதுதான் அவசியம்...!
எதிர்பாராமல் சமூகக் கொடிய அனுபவங்களை சந்திப்பவர்கள்...அல்லது வலிந்து கொடுமைகளைச் சந்திக்க முனையும் இளையவர்கள்...தங்கள் கொடிய அனுபவங்களை போல் அனுபவங்கள் மற்றவர்களையும் பாதிக்காதிருக்க சமூகத்தை வழிகாட்டுபவர்களாக இருப்பதே அவர்களை சிந்தனையுள்ள மனிதனாகக் அடையாளம் காட்டும்....எதிர்பாராமல் சந்திக்கும் கொடுமைகளுக்காக மரணத்தால் தன் வாழ்வை பாதியில் முடிப்பவன் போராடத் திராணியற்ற கோழை...அவன் மனிதனோ அல்ல....ஜிவராசியோ அல்ல...!
எறும்பைக் கூட அடிக்க முனைந்தால் எதிர்த்துப் போராடும்...<b>உயிரிக்கு மரணம் இயற்கையானது...அதைத் தடுக்க முடியாது எனும் போது அதை ஏன் வலிந்து அழைக்க வேண்டும்... மரணம் உறுதி என்று தெரிந்தும் பிறப்பு என்பது ஏன் அமைக்கிறது...??! இயற்கையாய் அது வரும் வரை வாழ்வை வாழத்தானே ஒழிய..இடை நடுவில அழிக்கவல்ல...! </b>
மனிதன் உருவாக்கிய சொந்தங்களும் பந்தங்களும் சொத்துகளும் சுகங்களுமே வாழ்வல்ல.. இயற்கை எமக்களித்ததை பாவித்தே எமது வாழ்வை வாழ்ந்து முடிக்கலாம்... மற்றைய உயிரினங்கள் போல...! மனிதன் படைத்தது கிடைக்காது எனும் போது வாழ்வை முடிப்பதல்ல... இயற்கை எழுதிய தீர்ப்பு....!
இதைச் சமூகத்துக்குச் சொல்லுங்கள்... தற்கொலை என்பதைக் காட்டி மனிதனை மற்றைய உயிரினங்களை விடக் கோழையாக்கி அவனிடம் இயற்கையாக உள்ள போராடும் ஆற்றலை மழுங்கடிக்காதீர்கள்..குறிப்பாக எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் இதைக் கருத்தில் கொள்ள வேண்டும்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

